1. {யோபு பதிலளித்தல்} [PS] யோபு மறுமொழியாக சொன்னது: [QBR]
2. “என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு [QBR2] நிறுக்கப்பட்டால் நலமாயிருக்கும்! [QBR]
3. அவை கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; [QBR2] ஆகவே எனது வார்த்தைகள் மூர்க்கமாய் இருப்பது ஆச்சரியமல்லவே. [QBR]
4. எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் பாய்ந்திருக்கின்றன, [QBR2] என் ஆவி அவைகளின் நஞ்சைக் குடிக்கிறது; [QBR2] இறைவனின் பயங்கரங்கள் எனக்கெதிராய் அணிவகுத்து நிற்கின்றன. [QBR]
5. தனக்குப் புல் இருக்கும்போது காட்டுக் கழுதை கத்துமோ? [QBR2] தீனி இருக்கும்போது எருது கதறுமோ? [QBR]
6. சுவையில்லாத உணவு உப்பின்றி சாப்பிடப்படுமோ? [QBR2] முட்டையின் வெள்ளைக்கருவில் ஏதேனும் சுவை உண்டோ? [QBR]
7. இப்படியான உணவு என்னை நோயாளியாக்குகிறது; [QBR2] நான் அதைத் தொட மறுக்கிறேன்.
8. “நான் வேண்டிக்கொள்வதையும், [QBR2] நான் நம்பி எதிர்பார்ப்பதையும் இறைவன் எனக்குக் கொடுக்கட்டும். [QBR]
9. இறைவன் என்னை நசுக்க உடன்படட்டும், [QBR2] தன் கையை நீட்டி என்னை வெட்டிப்போடட்டும்! [QBR]
10. இந்த ஆறுதல் எனக்கு இன்னும் இருக்கும்; [QBR2] எனது முடிவில்லாத வேதனையிலும் [QBR2] பரிசுத்தரின் வார்த்தைகளை நான் மறுக்கவில்லை.
11. “நான் இன்னும் எதிர்பார்ப்புடன் இருக்க எனக்கு என்ன பெலன் இருக்கிறது? [QBR2] நான் இன்னும் பொறுமையாய் இருக்க என் முடிவு என்ன? [QBR]
12. ஒரு கல்லின் பெலன் எனக்கு உண்டோ? [QBR2] எனது சதை வெண்கலமோ? [QBR]
13. எனக்கே நான் உதவிசெய்யத்தக்க வல்லமை என்னில் உண்டோ? [QBR2] வெற்றிக்கான ஆதாரம் என்னைவிட்டு நீங்கிற்று.
14. “எதிர்பார்ப்பில்லாதவன், எல்லாம் வல்லவரைப் பற்றிய [QBR2] பயத்தைக் கைவிட்ட போதிலும், [QBR2] அவனுக்கு அவனுடைய நண்பர்களின் தயவு இருக்கவேண்டும். [QBR]
15. ஆனால் என் சகோதரர்களோ, விட்டுவிட்டு பொங்கி ஓடும் [QBR2] பருவகால நீரோடைகளைப்போல, நம்பத்தகாதவர்களாய் இருக்கிறார்கள். [QBR]
16. அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், [QBR2] அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் வழிந்தோடும். [QBR]
17. ஆனால் வெப்பக் காலத்தில் வற்றி, [QBR2] வெயிலில் கால்வாய்களிலிருந்து மறைந்துபோகின்றன. [QBR]
18. வியாபாரிகளின் கூட்டம் நீரோடையைத் தேடி; [QBR2] பாதையைவிட்டு விலகி பாழ்நிலங்களுக்குச் சென்று அழிகின்றன. [QBR]
19. தேமாவின் வியாபாரிகளும், சேபாவின் வியாபாரிகளும் [QBR2] தண்ணீரைத் தேடி நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள். [QBR]
20. அவர்கள் நம்பிக்கையுடன் போனதால் வருத்தப்படுகிறார்கள்; [QBR2] அவ்விடத்தைச் சேர்ந்ததும் ஏமாற்றமடைகிறார்கள். [QBR]
21. இப்பொழுது நீங்களும் அப்படியே எனக்கு உதவாமல் போனீர்கள்; [QBR2] என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள். [QBR]
22. நான், ‘எனக்காக எதையாவது கொடுங்கள் என்றோ, [QBR2] உங்கள் செல்வத்தினால் என்னை மீட்டுக்கொள்ளுங்கள் என்றோ, [QBR]
23. என் பகைவரின் கைகளிலிருந்து என்னை விடுவியுங்கள் என்றோ, [QBR2] கொடியவர்களின் பிடியிலிருந்து என்னை மீட்டு விடுங்கள்’ என்றோ நான் சொன்னதுண்டா?
24. “எனக்கு போதியுங்கள்; நான் மவுனமாய் இருப்பேன்; [QBR2] நான் எதிலே தவறு செய்தேனோ அதை எனக்குக் காட்டுங்கள். [QBR]
25. நேர்மையான வார்த்தைகள் எவ்வளவு வேதனையாக இருக்கின்றன! [QBR2] ஆனால் உங்கள் விவாதங்கள் எதை நிரூபிக்கின்றன? [QBR]
26. நான் சொன்னவற்றைத் திருத்த எண்ணுகிறீர்களோ? [QBR2] மனச்சோர்வுற்ற மனிதரின் வார்த்தைகளை வெறும் காற்றாக மதிக்கிறீர்களோ? [QBR]
27. அநாதைகளுக்கு எதிராகக்கூட நீங்கள் சீட்டுப்போடுவீர்கள்; [QBR2] உங்கள் நண்பர்களை விற்பதற்கும் பேரம் பேசுவீர்கள்.
28. “ஆனால் இப்பொழுதோ தயவாக என்னைப் பாருங்கள். [QBR2] உங்கள் முகத்துக்கு முன்பாக நான் பொய் சொல்வேனா? [QBR]
29. போதும் விட்டுவிடுங்கள், அநியாயஞ்செய்ய வேண்டாம்; [QBR2] பொறுங்கள், நீதி இன்னும் என் பக்கமிருக்கிறது. [QBR]
30. என் உதடுகளில் அநீதி உண்டோ? [QBR2] என் வாய் வஞ்சகத்தை நிதானித்து அறியாதோ? [PE]