1. [QS]“நீ விரும்பினால் கூப்பிட்டுப் பார், ஆனால் யார் உனக்குப் பதிலளிப்பார்? [QE][QS2]பரிசுத்தர்களில் யாரிடம் நீ திரும்புவாய்? [QE]
2. [QS]கோபம் மூடனைக் கொல்லும், [QE][QS2]பொறாமை புத்தியில்லாதவனைக் கொல்லும். [QE]
3. [QS]மூடன் நிலைகொள்வதை நானே கண்டிருக்கிறேன், [QE][QS2]ஆனாலும் உடனே அவன் குடும்பத்திற்கு அழிவு வருகிறது. [QE]
4. [QS]அவனுடைய பிள்ளைகள் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள், [QE][QS2]வழக்காடுகிறவர்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் நசுக்கப்படுகிறார்கள். [QE]
5. [QS]பசியுள்ளவர்கள் அவனுடைய அறுவடையை [QE][QS2]முட்செடிகளுக்குள் இருந்துங்கூட எடுத்துச் சாப்பிடுவார்கள்; [QE][QS2]பேராசைக்காரர் அவனுடைய செல்வத்திற்காகத் துடிப்பர். [QE]
6. [QS]ஏனெனில் கஷ்டம் மண்ணிலிருந்து எழும்புவதில்லை; [QE][QS2]தொல்லை நிலத்திலிருந்து முளைப்பதுமில்லை. [QE]
7. [QS]தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, [QE][QS2]மனிதன் தொல்லைகளை அனுபவிக்கப் பிறந்திருக்கிறான். [QE][PBR]
8. [QS]“ஆனாலும் நான், இறைவனைத் தேடி, [QE][QS2]அவருக்குமுன் எனது வழக்கை வைத்திருப்பேன். [QE]
9. [QS]அவர் ஆராய முடியாத அதிசயங்களையும், [QE][QS2]கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார். [QE]
10. [QS]பூமிக்கு மழையைக் கொடுக்கிறவர் அவரே; [QE][QS2]நாட்டுப்புறங்களுக்குத் தண்ணீரை அனுப்புகிறவரும் அவரே. [QE]
11. [QS]அவரே தாழ்மையானவர்களை உயர்த்தி, [QE][QS2]துயரத்தில் இருப்பவர்களையும் பாதுகாத்து உயர்த்துகிறார். [QE]
12. [QS]அவர் தந்திரமானவர்களின் கைகளுக்கு வெற்றி கிடைக்காதபடி, [QE][QS2]அவர்களுடைய திட்டங்களை முறியடிக்கிறார். [QE]
13. [QS]இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார், [QE][QS2]தந்திரமுள்ளவர்களின் திட்டங்கள் தள்ளப்படுகின்றன. [QE]
14. [QS]பகல் நேரத்தில் காரிருள் அவர்கள்மேல் வரும்; [QE][QS2]இரவில் தடவித்திரிவதுபோல் நண்பகலிலும் தடவித் திரிவார்கள். [QE]
15. [QS]இறைவன் ஒடுக்குவோரின் வாளிலிருந்து வறுமையுள்ளோரை விடுவித்து, [QE][QS2]வன்முறையாளரின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார். [QE]
16. [QS]ஆதலால் ஏழைகளுக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு, [QE][QS2]அநீதி தன் வாயை மூடும். [QE][PBR]
17. [QS]“இறைவனால் திருத்தப்படுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; [QE][QS2]எனவே எல்லாம் வல்லவரின் கண்டிப்பை நீ அசட்டை பண்ணாதே. [QE]
18. [QS]அவர் காயப்படுத்திக் காயத்தைக் கட்டுகிறார்; [QE][QS2]அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது. [QE]
19. [QS]ஆறு பெரும் துன்பங்களிலும் உன்னைக் கைவிடாமல் காப்பார்; [QE][QS2]அவை ஏழானாலும் ஒரு தீமையும் உன்மேல் வராது. [QE]
20. [QS]பஞ்சத்தில் சாவிலிருந்தும் [QE][QS2]யுத்தத்தின் வாளுக்கு இரையாகாமலும் விலக்கிக் காப்பார். [QE]
21. [QS]தூற்றும் நாவிலிருந்து நீ பாதுகாக்கப்படுவாய்; [QE][QS2]பேராபத்து வரும்போதும் நீ பயப்படாமலிருப்பாய். [QE]
22. [QS]அழிவையும் பஞ்சத்தையும் கண்டு நீ சிரிப்பாய்; [QE][QS2]நீ பூமியிலுள்ள காட்டு மிருகங்களுக்கும் பயப்பட வேண்டியதில்லை. [QE]
23. [QS]வயல்வெளியின் கற்களுடன் நீ ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வாய், [QE][QS2]காட்டு விலங்குகளும் உன்னுடன் சமாதானமாய் இருக்கும். [QE]
24. [QS]உன் கூடாரம் பாதுகாக்கப்பட்டிருப்பதை நீ அறிவாய்; [QE][QS2]உன் உடைமைகளைக் கணக்கெடுக்கும்போது ஒன்றும் குறைவுபடாதிருப்பதையும் நீ காண்பாய். [QE]
25. [QS]உன் பிள்ளைகள் அநேகராய் இருப்பார்கள் என்பதை நீ அறிவாய். [QE][QS2]உன் சந்ததிகள் பூமியின் புற்களைப்போல் இருப்பார்கள். [QE]
26. [QS]ஏற்றகாலத்தில் தானியக்கதிர்கள் ஒன்று சேர்க்கப்படுவதுபோல், [QE][QS2]உன் முதிர்வயதிலே நீ கல்லறைக்குப் போவாய். [QE][PBR]
27. [QS]“நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இவை உண்மை என்று கண்டோம். [QE][QS2]நீ இவற்றைக் கேட்டு, உனக்கும் இவை பொருந்தும் என்று எடுத்துக்கொள்.” [QE]