1. “லிவியாதான் என்னும் பெரிய பாம்பைத் தூண்டிலினால் பிடிக்க முடியுமோ? [QBR2] நீ அதின் நாக்கைக் கயிற்றினால் கட்டமுடியுமோ? [QBR]
2. அதற்கு மூக்கணாங்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ? [QBR2] அல்லது அதின் தாடையைக் கொக்கியினால் ஊடுருவக் குத்த உன்னால் முடியுமோ? [QBR]
3. அது உன்னிடத்தில் இரக்கம் கேட்டு, மன்றாடிக்கொண்டிருக்குமோ? [QBR2] உன்னிடம் மெதுவான வார்த்தையைப் பேசுமோ? [QBR]
4. வாழ்நாள் முழுவதும் நீ அதை அடிமையாக்கிக்கொள்ளும்படி, [QBR2] அது உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்யுமோ? [QBR]
5. ஒரு பறவையைப்போல் நீ அதை வளர்க்க முடியுமோ? [QBR2] உன் பெண் பிள்ளைகள் அதனுடன் விளையாட அதைக் கட்டிவைப்பாயோ? [QBR]
6. வியாபாரிகள் அதைப் பரிமாறிக்கொள்வார்களோ? [QBR2] அதை அவர்கள் வர்த்தகர் நடுவில் பங்கிட்டுக்கொள்வார்களோ? [QBR]
7. அதின் உடலை ஈட்டிகளினாலும், [QBR2] அதின் தலையைக் கூர்மையான மீன்பிடி ஈட்டியால் குத்துவாயோ? [QBR]
8. அதின்மேல் உன் கையைப்போட்டால், அது அடிப்பதை நீ மறக்கமாட்டாய்; [QBR2] இனி அதின்மேல் கைபோடவுமாட்டாய். [QBR]
9. அதை அடக்குவதற்கான எந்த எதிர்பார்ப்பும் வீணானது; [QBR2] அதின் தோற்றமே பயமுறுத்தக் கூடியது. [QBR]
10. அதை எழுப்ப தைரியமுள்ளவன் இல்லை. [QBR2] அப்படியிருக்க என்னை எதிர்த்துநிற்க யாரால் முடியும்? [QBR]
11. தனக்கு பதில் கொடுக்கவேண்டுமென்று முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? [QBR2] வானத்தின் கீழே இருப்பவை ஒவ்வொன்றும் என்னுடையவை.
12. “இப்பொழுது நான் லிவியாதானின் கால்களைப்பற்றியும், [QBR2] அதின் பலத்தைப் பற்றியும், வசீகரத் தோற்றத்தைப்பற்றியும் பேசத் தவறமாட்டேன். [QBR]
13. அதின் மேற்தோலை உரிக்கக்கூடியவன் யார்? [QBR2] அதை மூக்கணாங்கயிற்றுடன் அணுக யாரால் முடியும்? [QBR]
14. பயங்கரப் பற்கள் நிறைந்த [QBR2] அதின் வாயின் தாடையைப் பிடித்துத் திறக்கக்கூடியவன் யார்? [QBR]
15. அதின் முதுகில் உள்ள செதில்கள் நெருங்கி [QBR2] இணைக்கப்பட்ட கேடய வரிசைகள்போல் இருக்கின்றன. [QBR]
16. அவைகளின் ஒவ்வொரு வரிசையும் [QBR2] காற்றுப் புகாதபடி மிக நெருக்கமாய் இருக்கின்றன. [QBR]
17. அவை ஒன்றோடொன்று நெருக்கமாய் இணைந்து [QBR2] பிரிக்க முடியாதவாறு, ஒட்டிக்கொண்டிருக்கின்றன. [QBR]
18. அது மூச்சுவிடும்போது அனல் வீசுகிறது; [QBR2] அதின் கண்கள் அதிகாலையின் ஒளிக்கீற்றுகளைப்போல் இருக்கின்றன. [QBR]
19. அதின் வாயிலிருந்து நெருப்புத் தணல்கள் புறப்பட்டு, [QBR2] நெருப்புப் பொறிகளும் பறக்கும். [QBR]
20. எரியும் நாணல்மீது கொதிக்கும் சட்டியிலிருந்து எழும்புவதுபோல், [QBR2] அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும். [QBR]
21. அதின் மூச்சு கரியைக் கொழுத்தி எரியச்செய்கிறது; [QBR2] அதின் வாயிலிருந்து ஜூவாலை பாய்கிறது. [QBR]
22. அதின் கழுத்திலே வல்லமை இருக்கும்; [QBR2] திகில் அதற்கு முன்னே செல்லும். [QBR]
23. அதின் தசை மடிப்புகள் அசைக்க முடியாதபடி [QBR2] ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. [QBR]
24. அதின் நெஞ்சு கற்பாறையைப்போலவும், [QBR2] அம்மிக் கல்லைப்போலவும் கடினமானதாய் இருக்கிறது. [QBR]
25. அது எழும்பும்போது பலவான்கள் திகிலடைந்து, [QBR2] அதின் தாக்குதலுக்கு பயந்து ஓடுகிறார்கள். [QBR]
26. அதைத் தாக்குகிறவனுடைய வாள், ஈட்டி, அம்பு, [QBR2] கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது. [QBR]
27. அது இரும்பை வைக்கோலாகவும், [QBR2] வெண்கலத்தை உளுத்துப்போன மரமாகவும் மதிப்பிடும். [QBR]
28. அம்பு அதனைத் துரத்தாது; [QBR2] கவண்கற்கள் அதற்குப் பதரைப் போலிருக்கும். [QBR]
29. பெருந்தடி அதற்கு வைக்கோல் போன்றது; [QBR2] அது ஈட்டியின் சத்தத்திற்கு நகைக்கிறது. [QBR]
30. அதின் அடிப்பக்கம் கூர்மையான கற்கள் கிடந்தாலும், [QBR2] சூடடிக்கும் இயந்திரம் சேற்றில் ஏற்படுத்தும் அடையாளத்தை ஏற்படுத்தி செல்கிறது. [QBR]
31. அது கொதிக்கும் பானையைப்போல் ஆழ்கடல்களைப் பொங்கச்செய்து, [QBR2] தைலம்போலக் கடலைக் கலக்குகிறது. [QBR]
32. அது தன் பின்னால் பாதையை மின்னச்செய்யும்; [QBR2] அப்பொழுது ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும். [QBR]
33. பூமியின்மேல் உள்ளதொன்றும் அதற்கு நிகரானதல்ல; [QBR2] அது பயமற்ற ஒரு விலங்கு. [QBR]
34. அகந்தையான எல்லாவற்றையும் அது அற்பமாய் எண்ணுகிறது; [QBR2] பெருமைகொண்ட எல்லாவற்றுக்கும் மேலான அரசன் அதுவே.” [PE]