1. [QS]“லிவியாதான் என்னும் பெரிய பாம்பைத் தூண்டிலினால் பிடிக்க முடியுமோ? [QE][QS2]நீ அதின் நாக்கைக் கயிற்றினால் கட்டமுடியுமோ? [QE]
2. [QS]அதற்கு மூக்கணாங்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ? [QE][QS2]அல்லது அதின் தாடையைக் கொக்கியினால் ஊடுருவக் குத்த உன்னால் முடியுமோ? [QE]
3. [QS]அது உன்னிடத்தில் இரக்கம் கேட்டு, மன்றாடிக்கொண்டிருக்குமோ? [QE][QS2]உன்னிடம் மெதுவான வார்த்தையைப் பேசுமோ? [QE]
4. [QS]வாழ்நாள் முழுவதும் நீ அதை அடிமையாக்கிக்கொள்ளும்படி, [QE][QS2]அது உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்யுமோ? [QE]
5. [QS]ஒரு பறவையைப்போல் நீ அதை வளர்க்க முடியுமோ? [QE][QS2]உன் பெண் பிள்ளைகள் அதனுடன் விளையாட அதைக் கட்டிவைப்பாயோ? [QE]
6. [QS]வியாபாரிகள் அதைப் பரிமாறிக்கொள்வார்களோ? [QE][QS2]அதை அவர்கள் வர்த்தகர் நடுவில் பங்கிட்டுக்கொள்வார்களோ? [QE]
7. [QS]அதின் உடலை ஈட்டிகளினாலும், [QE][QS2]அதின் தலையைக் கூர்மையான மீன்பிடி ஈட்டியால் குத்துவாயோ? [QE]
8. [QS]அதின்மேல் உன் கையைப்போட்டால், அது அடிப்பதை நீ மறக்கமாட்டாய்; [QE][QS2]இனி அதின்மேல் கைபோடவுமாட்டாய். [QE]
9. [QS]அதை அடக்குவதற்கான எந்த எதிர்பார்ப்பும் வீணானது; [QE][QS2]அதின் தோற்றமே பயமுறுத்தக் கூடியது. [QE]
10. [QS]அதை எழுப்ப தைரியமுள்ளவன் இல்லை. [QE][QS2]அப்படியிருக்க என்னை எதிர்த்துநிற்க யாரால் முடியும்? [QE]
11. [QS]தனக்கு பதில் கொடுக்கவேண்டுமென்று முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? [QE][QS2]வானத்தின் கீழே இருப்பவை ஒவ்வொன்றும் என்னுடையவை. [QE][PBR]
12. [QS]“இப்பொழுது நான் லிவியாதானின் கால்களைப்பற்றியும், [QE][QS2]அதின் பலத்தைப் பற்றியும், வசீகரத் தோற்றத்தைப்பற்றியும் பேசத் தவறமாட்டேன். [QE]
13. [QS]அதின் மேற்தோலை உரிக்கக்கூடியவன் யார்? [QE][QS2]அதை மூக்கணாங்கயிற்றுடன் அணுக யாரால் முடியும்? [QE]
14. [QS]பயங்கரப் பற்கள் நிறைந்த [QE][QS2]அதின் வாயின் தாடையைப் பிடித்துத் திறக்கக்கூடியவன் யார்? [QE]
15. [QS]அதின் முதுகில் உள்ள செதில்கள் நெருங்கி [QE][QS2]இணைக்கப்பட்ட கேடய வரிசைகள்போல் இருக்கின்றன. [QE]
16. [QS]அவைகளின் ஒவ்வொரு வரிசையும் [QE][QS2]காற்றுப் புகாதபடி மிக நெருக்கமாய் இருக்கின்றன. [QE]
17. [QS]அவை ஒன்றோடொன்று நெருக்கமாய் இணைந்து [QE][QS2]பிரிக்க முடியாதவாறு, ஒட்டிக்கொண்டிருக்கின்றன. [QE]
18. [QS]அது மூச்சுவிடும்போது அனல் வீசுகிறது; [QE][QS2]அதின் கண்கள் அதிகாலையின் ஒளிக்கீற்றுகளைப்போல் இருக்கின்றன. [QE]
19. [QS]அதின் வாயிலிருந்து நெருப்புத் தணல்கள் புறப்பட்டு, [QE][QS2]நெருப்புப் பொறிகளும் பறக்கும். [QE]
20. [QS]எரியும் நாணல்மீது கொதிக்கும் சட்டியிலிருந்து எழும்புவதுபோல், [QE][QS2]அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும். [QE]
21. [QS]அதின் மூச்சு கரியைக் கொழுத்தி எரியச்செய்கிறது; [QE][QS2]அதின் வாயிலிருந்து ஜூவாலை பாய்கிறது. [QE]
22. [QS]அதின் கழுத்திலே வல்லமை இருக்கும்; [QE][QS2]திகில் அதற்கு முன்னே செல்லும். [QE]
23. [QS]அதின் தசை மடிப்புகள் அசைக்க முடியாதபடி [QE][QS2]ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. [QE]
24. [QS]அதின் நெஞ்சு கற்பாறையைப்போலவும், [QE][QS2]அம்மிக் கல்லைப்போலவும் கடினமானதாய் இருக்கிறது. [QE]
25. [QS]அது எழும்பும்போது பலவான்கள் திகிலடைந்து, [QE][QS2]அதின் தாக்குதலுக்கு பயந்து ஓடுகிறார்கள். [QE]
26. [QS]அதைத் தாக்குகிறவனுடைய வாள், ஈட்டி, அம்பு, [QE][QS2]கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது. [QE]
27. [QS]அது இரும்பை வைக்கோலாகவும், [QE][QS2]வெண்கலத்தை உளுத்துப்போன மரமாகவும் மதிப்பிடும். [QE]
28. [QS]அம்பு அதனைத் துரத்தாது; [QE][QS2]கவண்கற்கள் அதற்குப் பதரைப் போலிருக்கும். [QE]
29. [QS]பெருந்தடி அதற்கு வைக்கோல் போன்றது; [QE][QS2]அது ஈட்டியின் சத்தத்திற்கு நகைக்கிறது. [QE]
30. [QS]அதின் அடிப்பக்கம் கூர்மையான கற்கள் கிடந்தாலும், [QE][QS2]சூடடிக்கும் இயந்திரம் சேற்றில் ஏற்படுத்தும் அடையாளத்தை ஏற்படுத்தி செல்கிறது. [QE]
31. [QS]அது கொதிக்கும் பானையைப்போல் ஆழ்கடல்களைப் பொங்கச்செய்து, [QE][QS2]தைலம்போலக் கடலைக் கலக்குகிறது. [QE]
32. [QS]அது தன் பின்னால் பாதையை மின்னச்செய்யும்; [QE][QS2]அப்பொழுது ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும். [QE]
33. [QS]பூமியின்மேல் உள்ளதொன்றும் அதற்கு நிகரானதல்ல; [QE][QS2]அது பயமற்ற ஒரு விலங்கு. [QE]
34. [QS]அகந்தையான எல்லாவற்றையும் அது அற்பமாய் எண்ணுகிறது; [QE][QS2]பெருமைகொண்ட எல்லாவற்றுக்கும் மேலான அரசன் அதுவே.” [QE]