1. {எலிப்பாஸ் பேசுதல்} [PS] அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது: [QBR]
2. யாராவது ஒருவர் உன்னுடன் பேசத் துணிந்தால், [QBR2] நீ பொறுமையாய் இருப்பாயோ? [QBR2] ஆனால் யாரால்தான் பேசாதிருக்க முடியும்? [QBR]
3. நீ அநேகருக்கு புத்தி சொல்லி, [QBR2] தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியிருக்கிறாய். [QBR]
4. தடுக்கி விழுந்தவர்களை உன் வார்த்தைகள் தாங்கியிருக்கின்றன; [QBR2] தள்ளாடிய முழங்கால்களை நீ உறுதிபடுத்தியிருக்கிறாய். [QBR]
5. இப்பொழுது உனக்கு கஷ்டம் வந்தபோது, கலங்கிவிட்டாய்; [QBR2] அது உன்னைத் தாக்கியதும் நீ மனங்கலங்கிப் போனாய். [QBR]
6. உனது பக்தி உனக்கு மனவுறுதியாயும், [QBR2] குற்றமற்ற வழிகள் உனக்கு நல் எதிர்பார்ப்பாயும் இருக்கவேண்டும் அல்லவோ?
7. குற்றமற்றவன் அழிக்கப்பட்டதுண்டோ? [QBR2] நேர்மையானவர்கள் அழிக்கப்பட்டதுண்டோ? [QBR2] என இப்பொழுது யோசித்துப்பார். [QBR]
8. தீமையை உழுது, துன்பத்தை விதைக்கிறவர்கள், [QBR2] அதையே அறுக்கிறார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன். [QBR]
9. இறைவனின் சுவாசத்தினால் அவர்கள் அழிந்து, [QBR2] அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள். [QBR]
10. சிங்கங்கள் கர்ஜித்து, உறுமலாம், [QBR2] ஆனாலும் அந்த பெருஞ்சிங்கத்தின் பற்கள் உடைக்கப்படுகின்றன. [QBR]
11. சிங்கம் இரையில்லாமல் இறந்துபோகும், [QBR2] சிங்கக் குட்டிகளோ சிதறிப்போகும்.
12. “இப்பொழுது எனக்கு ஒரு வார்த்தை இரகசியமாய்க் கொண்டுவரப்பட்டது, [QBR2] அதின் மெல்லிய ஓசை என் காதுகளில் விழுந்தது. [QBR]
13. மனிதர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, [QBR2] இரவில் அமைதியைக் கெடுக்கும் கனவுகளின் மத்தியில், [QBR]
14. பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, [QBR2] என் எலும்புகளையெல்லாம் நடுங்கச் செய்தன. [QBR]
15. அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு [QBR2] முன்னால் செல்லுகையில் என் உடலின் முடி சிலிர்த்து நின்றது. [QBR]
16. ஆவி நின்றது, [QBR2] அதின் தோற்றத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை. [QBR] ஒரு உருவம் என் கண்கள் முன் நின்றது, [QBR2] அப்பொழுது நான் முணுமுணுக்கும் குரலைக் கேட்டேன்: [QBR]
17. ‘மனிதன் இறைவனைவிட நீதிமானாய் இருக்க முடியுமோ? [QBR2] தன்னைப் படைத்தவரைவிட அதிக தூய்மையாய் இருப்பானோ? [QBR]
18. இறைவன் தமது ஊழியர்களில் நம்பிக்கை வைக்காமல் இருக்கிறார், [QBR2] அவர் தன் தூதர்களிலும் குறைகண்டிருக்கிறார். [QBR]
19. அப்படியிருக்க தூசியில் அஸ்திபாரமிட்டு, [QBR2] களிமண் வீட்டில் வாழ்பவர்களும், [QBR2] பூச்சிபோல் நசுக்கப்படுகிறவர்களுமாகிய மனிதரின் குறையை அவர் காணாமலிருப்பாரோ? [QBR]
20. அவர்கள் காலைமுதல் மாலைவரைக்கும், [QBR2] கவனிப்பார் ஒருவருமில்லாமல் நிலையான அழிவை அடைகிறார்கள். [QBR]
21. அவர்களுடைய கூடாரத்தின் கயிறுகள் மேலே இழுக்கப்பட்டு, [QBR2] அவை ஞானமில்லாமல் சாவதில்லையா?’ [PE]