1. [QS]“மலை ஆடுகள் குட்டி ஈனும் காலத்தை நீ அறிவாயோ? [QE][QS2]பெண்மான் குட்டி ஈன்றதை நீ கண்டிருக்கிறாயோ? [QE]
2. [QS]அவை சினைப்பட்டிருக்கும் மாதங்களை நீ கணக்கிடுவாயோ? [QE][QS2]அவை குட்டி ஈனும் நேரத்தை நீ அறிவாயோ? [QE]
3. [QS]அவை முடங்கிக்கிடந்து தங்கள் குட்டிகளை ஈனும்; [QE][QS2]குட்டி ஈன்றதும் அவைகளின் வலி நீங்கிவிடும். [QE]
4. [QS]அவைகளின் குட்டிகள் காடுகளில் பெலனடைந்து வளர்கின்றன, [QE][QS2]அவை திரும்பவும் தாயிடம் திரும்பி வருவதில்லை. [QE][PBR]
5. [QS]“காட்டுக் கழுதையைச் சுதந்திரமாகத் திரியவிட்டவர் யார்? [QE][QS2]அதின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்? [QE]
6. [QS]நானே அதற்குப் பாழ்நிலத்தை வீடாகவும், [QE][QS2]உவர்நிலத்தைக் குடியிருப்பாகவும் கொடுத்தேன். [QE]
7. [QS]அது பட்டணத்துச் சந்தடியை அலட்சியம் பண்ணுகிறது; [QE][QS2]ஓட்டுகிறவனுடைய சத்தத்தை அது கேட்பதில்லை. [QE]
8. [QS]அது மலைகளைத் தனது மேய்ச்சலிடமாக்குகிறது; [QE][QS2]அங்கு பச்சைத் தாவரங்களைத் தேடி அலைகிறது. [QE][PBR]
9. [QS]“காட்டெருது உனக்கு சேவைசெய்ய சம்மதிக்குமோ? [QE][QS2]அது உனது தொழுவத்தில் இரவைக் கழிக்குமோ? [QE]
10. [QS]காட்டெருதுக்கு மூக்கணாங்கயிறு போட்டு, அதை உன்னால் உழமுடியுமோ? [QE][QS2]அது உனக்குப்பின் உழுதுகொண்டு வருமோ? [QE]
11. [QS]அதின் மிகுந்த பலத்தை நம்பி, [QE][QS2]உன் கடின வேலைகளை அதனிடம் விட்டுவிடுவாயோ? [QE]
12. [QS]அது கதிர்க்கட்டுகளைச் சேர்த்து, [QE][QS2]சூடடிக்கும் களத்தில் கொண்டுவந்து சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ? [QE][PBR]
13. [QS]“தீக்கோழி தன் சிறகுகளைச் சந்தோஷத்தோடு விரித்தாலும், [QE][QS2]நாரையின் சிறகுகளுடனும் [QE][QS2]சிறகுகளுடனும் அதை ஒப்பிட முடியாது. [QE]
14. [QS]தீக்கோழி தரையில் முட்டைகளை இட்டு, [QE][QS2]மணலிலே அவற்றைச் சூடாகும்படி விட்டுவிடுகிறது. [QE]
15. [QS]முட்டைகள் கால்கள்பட்டு நசுங்கிவிடும் என்றோ, [QE][QS2]காட்டு மிருகங்கள் அவற்றை மிதித்துவிடும் என்றோ அது எண்ணுகிறதில்லை. [QE]
16. [QS]அது தன் குஞ்சுகளைத் தன்னுடையது அல்லாததுபோல் கடுமையாக நடத்தும்; [QE][QS2]அதின் பிரயாசம் வீணாய் போகிறதென்றும் அது கவலைப்படுவதில்லை. [QE]
17. [QS]ஏனெனில், இறைவன் அதற்கு ஞானத்தை கொடுக்கவில்லை; [QE][QS2]நல்லுணர்வையும் கொடுக்கவில்லை. [QE]
18. [QS]ஆனாலும் அது ஓடுவதற்கு தன் செட்டைகளை விரிக்கின்றபோது, [QE][QS2]குதிரையையும் அதில் சவாரி செய்பவனையும் அலட்சியம் பண்ணுகிறது. [QE][PBR]
19. [QS]“குதிரைக்கு அதின் பலத்தை நீ கொடுக்கிறாயோ? [QE][QS2]அதின் கழுத்தைப் பிடரிமயிரினால் மூடியது நீயோ? [QE]
20. [QS]நீ குதிரையை வெட்டுக்கிளியைப்போல் பாயப்பண்ணி, [QE][QS2]அதின் பெருமையான மூச்சுடன் பயங்கரமூட்டப் பண்ணுகிறாயோ? [QE]
21. [QS]அது தன் பெலத்தில் மகிழ்ச்சியடைந்து, [QE][QS2]தூசியைக் கிளப்பிக்கொண்டு போர்க்களத்திற்குப் பாய்ந்து செல்கிறது. [QE]
22. [QS]அது பயத்தைக்கண்டு சிரிக்கிறது; ஒன்றுக்கும் கலங்குவதில்லை. [QE][QS2]அது வாளுக்குப் பயந்து பின்வாங்குவதில்லை. [QE]
23. [QS]மினுமினுக்கும் வேலுடனும் ஈட்டியுடனும் அம்புக்கூடு [QE][QS2]அதனுடைய இடுப்பில் கலகலக்கிறது. [QE]
24. [QS]அது உணர்ச்சிவசப்பட்டுப் பதற்றத்துடன் தரையில் விரைந்து செல்கிறது; [QE][QS2]எக்காள சத்தம் கேட்கும்போது, அதினால் அமைதியாய் நிற்கமுடியாது. [QE]
25. [QS]எக்காள முழக்கம் கேட்கும்போது, அது கனைத்து ஆரவாரிக்கும் [QE][QS2]அது போர்க்களத்தையும், படைத் தலைவர்களின் கூக்குரலையும் [QE][QS2]தூரத்திலிருந்தே மோப்பம் பிடித்து அறிகிறது. [QE][PBR]
26. [QS]“பருந்து உயரப் பறப்பதும், [QE][QS2]தெற்கு நோக்கித் தன் சிறகுகளை விரிப்பதும் உன் ஞானத்தினாலேயோ? [QE]
27. [QS]கழுகு மேலே போய் உயரத்தில் [QE][QS2]தன் கூட்டைக் கட்டுவது உனது கட்டளையினாலேயோ? [QE]
28. [QS]அது இரவில் கற்பாறைகளின் வெடிப்புகளில் தங்குகிறது; [QE][QS2]செங்குத்தான பாறைகளே அதின் பாதுகாப்பிடம். [QE]
29. [QS]அங்கிருந்து அது தனது உணவைப் பார்க்கும்; [QE][QS2]அதின் கண்கள் தொலைவிலிருக்கும் உணவைக் கண்டுகொள்ளும். [QE]
30. [QS]அதின் குஞ்சுள் இரத்தத்தை உண்டு மகிழும்; [QE][QS2]இறந்த உடல்கள் எங்கேயோ அங்கேயே கழுகும் இருக்கும்.” [QE]