1. “மலை ஆடுகள் குட்டி ஈனும் காலத்தை நீ அறிவாயோ? [QBR2] பெண்மான் குட்டி ஈன்றதை நீ கண்டிருக்கிறாயோ? [QBR]
2. அவை சினைப்பட்டிருக்கும் மாதங்களை நீ கணக்கிடுவாயோ? [QBR2] அவை குட்டி ஈனும் நேரத்தை நீ அறிவாயோ? [QBR]
3. அவை முடங்கிக்கிடந்து தங்கள் குட்டிகளை ஈனும்; [QBR2] குட்டி ஈன்றதும் அவைகளின் வலி நீங்கிவிடும். [QBR]
4. அவைகளின் குட்டிகள் காடுகளில் பெலனடைந்து வளர்கின்றன, [QBR2] அவை திரும்பவும் தாயிடம் திரும்பி வருவதில்லை.
5. “காட்டுக் கழுதையைச் சுதந்திரமாகத் திரியவிட்டவர் யார்? [QBR2] அதின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்? [QBR]
6. நானே அதற்குப் பாழ்நிலத்தை வீடாகவும், [QBR2] உவர்நிலத்தைக் குடியிருப்பாகவும் கொடுத்தேன். [QBR]
7. அது பட்டணத்துச் சந்தடியை அலட்சியம் பண்ணுகிறது; [QBR2] ஓட்டுகிறவனுடைய சத்தத்தை அது கேட்பதில்லை. [QBR]
8. அது மலைகளைத் தனது மேய்ச்சலிடமாக்குகிறது; [QBR2] அங்கு பச்சைத் தாவரங்களைத் தேடி அலைகிறது.
9. “காட்டெருது உனக்கு சேவைசெய்ய சம்மதிக்குமோ? [QBR2] அது உனது தொழுவத்தில் இரவைக் கழிக்குமோ? [QBR]
10. காட்டெருதுக்கு மூக்கணாங்கயிறு போட்டு, அதை உன்னால் உழமுடியுமோ? [QBR2] அது உனக்குப்பின் உழுதுகொண்டு வருமோ? [QBR]
11. அதின் மிகுந்த பலத்தை நம்பி, [QBR2] உன் கடின வேலைகளை அதனிடம் விட்டுவிடுவாயோ? [QBR]
12. அது கதிர்க்கட்டுகளைச் சேர்த்து, [QBR2] சூடடிக்கும் களத்தில் கொண்டுவந்து சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ?
13. “தீக்கோழி தன் சிறகுகளைச் சந்தோஷத்தோடு விரித்தாலும், [QBR2] நாரையின் சிறகுகளுடனும் [QBR2] சிறகுகளுடனும் அதை ஒப்பிட முடியாது. [QBR]
14. தீக்கோழி தரையில் முட்டைகளை இட்டு, [QBR2] மணலிலே அவற்றைச் சூடாகும்படி விட்டுவிடுகிறது. [QBR]
15. முட்டைகள் கால்கள்பட்டு நசுங்கிவிடும் என்றோ, [QBR2] காட்டு மிருகங்கள் அவற்றை மிதித்துவிடும் என்றோ அது எண்ணுகிறதில்லை. [QBR]
16. அது தன் குஞ்சுகளைத் தன்னுடையது அல்லாததுபோல் கடுமையாக நடத்தும்; [QBR2] அதின் பிரயாசம் வீணாய் போகிறதென்றும் அது கவலைப்படுவதில்லை. [QBR]
17. ஏனெனில், இறைவன் அதற்கு ஞானத்தை கொடுக்கவில்லை; [QBR2] நல்லுணர்வையும் கொடுக்கவில்லை. [QBR]
18. ஆனாலும் அது ஓடுவதற்கு தன் செட்டைகளை விரிக்கின்றபோது, [QBR2] குதிரையையும் அதில் சவாரி செய்பவனையும் அலட்சியம் பண்ணுகிறது.
19. “குதிரைக்கு அதின் பலத்தை நீ கொடுக்கிறாயோ? [QBR2] அதின் கழுத்தைப் பிடரிமயிரினால் மூடியது நீயோ? [QBR]
20. நீ குதிரையை வெட்டுக்கிளியைப்போல் பாயப்பண்ணி, [QBR2] அதின் பெருமையான மூச்சுடன் பயங்கரமூட்டப் பண்ணுகிறாயோ? [QBR]
21. அது தன் பெலத்தில் மகிழ்ச்சியடைந்து, [QBR2] தூசியைக் கிளப்பிக்கொண்டு போர்க்களத்திற்குப் பாய்ந்து செல்கிறது. [QBR]
22. அது பயத்தைக்கண்டு சிரிக்கிறது; ஒன்றுக்கும் கலங்குவதில்லை. [QBR2] அது வாளுக்குப் பயந்து பின்வாங்குவதில்லை. [QBR]
23. மினுமினுக்கும் வேலுடனும் ஈட்டியுடனும் அம்புக்கூடு [QBR2] அதனுடைய இடுப்பில் கலகலக்கிறது. [QBR]
24. அது உணர்ச்சிவசப்பட்டுப் பதற்றத்துடன் தரையில் விரைந்து செல்கிறது; [QBR2] எக்காள சத்தம் கேட்கும்போது, அதினால் அமைதியாய் நிற்கமுடியாது. [QBR]
25. எக்காள முழக்கம் கேட்கும்போது, அது கனைத்து ஆரவாரிக்கும் [QBR2] அது போர்க்களத்தையும், படைத் தலைவர்களின் கூக்குரலையும் [QBR2] தூரத்திலிருந்தே மோப்பம் பிடித்து அறிகிறது.
26. “பருந்து உயரப் பறப்பதும், [QBR2] தெற்கு நோக்கித் தன் சிறகுகளை விரிப்பதும் உன் ஞானத்தினாலேயோ? [QBR]
27. கழுகு மேலே போய் உயரத்தில் [QBR2] தன் கூட்டைக் கட்டுவது உனது கட்டளையினாலேயோ? [QBR]
28. அது இரவில் கற்பாறைகளின் வெடிப்புகளில் தங்குகிறது; [QBR2] செங்குத்தான பாறைகளே அதின் பாதுகாப்பிடம். [QBR]
29. அங்கிருந்து அது தனது உணவைப் பார்க்கும்; [QBR2] அதின் கண்கள் தொலைவிலிருக்கும் உணவைக் கண்டுகொள்ளும். [QBR]
30. அதின் குஞ்சுள் இரத்தத்தை உண்டு மகிழும்; [QBR2] இறந்த உடல்கள் எங்கேயோ அங்கேயே கழுகும் இருக்கும்.” [PE]