1. “அந்த முழக்கத்தினால் என் இருதயம் நடுங்கி, [QBR2] அதின் இடத்தைவிட்டுத் துடிக்கிறது. [QBR]
2. இறைவனுடைய குரலின் கர்ஜனையையும், [QBR2] அவர் வாயிலிருந்து வரும் முழக்கத்தையும் கேளுங்கள். [QBR]
3. வானத்தின் கீழெங்கும் தமது மின்னலைக் கட்டவிழ்த்து, [QBR2] அதைப் பூமியின் கடைமுனைகளுக்கும் அனுப்புகிறார். [QBR]
4. பின்பு அவருடைய கர்ஜனையின் சத்தம் வருகிறது, [QBR2] அவர் தனது கெம்பீரமான குரலினால் முழங்குகிறார்; [QBR] அவருடைய சத்தம் தொனிக்கும்போது [QBR2] அவர் ஒன்றையும் அடக்குவதில்லை. [QBR]
5. இறைவனது குரல் ஆச்சரியமான விதங்களில் முழங்குகிறது; [QBR2] அவர் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத அளவு பெரிய காரியங்களைச் செய்கிறார். [QBR]
6. அத்துடன் அவர் பனியைப் பார்த்து, ‘பூமியின்மேல் விழு’ என்றும், [QBR2] மழையைப் பார்த்து, ‘கடுமையாய்ப் பெய்’ என்றும் கூறுகிறார். [QBR]
7. அவ்வேளைகளில் அவர் தாம் படைத்த எல்லா மனிதர்களும் தமது செயலை அறியும்படி, [QBR2] ஒவ்வொரு மனிதனையும் அவனுடைய வேலையிலிருந்து நிறுத்துகிறார். [QBR]
8. காட்டு மிருகங்கள் குகைகளுக்குள் சென்று, [QBR2] தங்கள் கெபிகளில் தங்குகின்றன. [QBR]
9. தெற்கிலிருந்து சூறாவளியும், [QBR2] வடதிசை காற்றினால் குளிரும் வருகிறது. [QBR]
10. இறைவனின் சுவாசத்தால் பனிக்கட்டி உருவாகிறது; [QBR2] அப்பொழுது பரந்த நீர்ப்பரப்புகளும் உறைந்துபோகின்றன. [QBR]
11. அவர் மேகங்களை ஈரத்தினால் பாரமாக்கி, [QBR2] தமது மின்னலை அவற்றினுள் சிதறப்பண்ணுகிறார். [QBR]
12. அவரின் திசையில் மேகங்கள் சுழல்கின்றன; [QBR2] அவை பூமியின் மேற்பரப்பெங்கும் [QBR2] அவர் கட்டளையிடுவதைச் செய்கின்றன. [QBR]
13. மனிதரைத் தண்டிப்பதற்கோ, [QBR2] அல்லது தனது பூமியை வளமுள்ளதாக்கி தமது அன்பைக் காட்டுவதற்கோ [QBR2] அவர் மேகங்களைக் கொண்டுவருகிறார்.
14. “யோபுவே, இதைக் கேளும்; [QBR2] சற்று நின்று இறைவனின் அதிசயங்களைக் கவனித்துப் பாரும். [QBR]
15. இறைவன் மேகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி [QBR2] தமது மின்னலை மின்னப் பண்ணுகிறார் என்று உமக்குத் தெரியுமா? [QBR]
16. அவர் மேகங்களை எப்படி ஆகாயத்தில் தொங்கவிட்டிருக்கிறார் என்பதையும், [QBR2] பூரண அறிவுள்ளவரின் அதிசயங்களையும் நீர் அறிவீரோ? [QBR]
17. தென்றலினால் பூமி அடங்கிக் கிடக்கும்போது, [QBR2] உமது ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையை அறிவீரோ? [QBR]
18. வார்க்கப்பட்ட வெண்கல கண்ணாடியைப் போன்ற, [QBR2] கடினமான ஆகாயத்தை அவருடன் சேர்ந்து உம்மால் விரிக்க முடியுமோ?
19. “அவருக்குச் சொல்லவேண்டியதை நீர் எங்களுக்குச் சொல்லும்; [QBR2] இருளின் காரணமாக எங்களால் வழக்காட முடியாதிருக்கிறது. [QBR]
20. ‘நான் பேச விரும்புகிறேன்’ என்று அவருக்குச் சொல்லலாகுமோ? [QBR2] தான் விழுங்கப்படுவதை எவனும் விரும்பிக் கேட்பானோ? [QBR]
21. காற்று ஆகாயத்தைச் சுத்தப்படுத்திய பின், [QBR2] சூரியனை எந்த மனிதனாலும் பார்க்க முடியாதே! [QBR2] ஏனெனில் அதின் ஒளி பிரகாசமாயிருக்கும். [QBR]
22. வடக்கிலிருந்து தங்கமயமான மகிமையிலே அவர் வருகிறார்; [QBR2] திகைப்பூட்டும் மாட்சிமையுடன் இறைவன் வருகிறார். [QBR]
23. எல்லாம் வல்லவர் நமக்கு எட்டாத தூரத்திலே [QBR2] அவர் வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; [QBR2] அவர் நீதியும் நியாயமும் நிறைந்தவர்; அவர் ஒடுக்குகிறதில்லை. [QBR]
24. ஆகையால், மனிதர்கள் அவரிடம் பயபக்தியாயிருக்கிறார்கள்; [QBR2] ஏனெனில், இருதயத்தில் ஞானமுள்ள ஒருவரையும் அவர் மதிப்பதில்லை.” [PE]