1. [PS]தொடர்ந்து எலிகூ சொன்னதாவது: [PE]
2. [QS]“சற்று என்னிடம் பொறுமையாயிரும், [QE][QS2]இறைவன் சார்பாய் நான் சொல்ல வேண்டியவற்றை நான் உமக்குக் காண்பிப்பேன். [QE]
3. [QS]நான் அதிக தூரத்திலிருந்து என் அறிவைப் பெறுகிறேன்; [QE][QS2]என்னைப் படைத்தவருக்கே நீதி உரியது என்றும் நிரூபிப்பேன். [QE]
4. [QS]என் வார்த்தைகள் பொய்யானவையல்ல என்று உறுதியாய்க் கூறுகிறேன்; [QE][QS2]பூரண அறிவுள்ள நான் உம்மோடு பேசுகிறேன். [QE][PBR]
5. [QS]“இறைவன் வல்லமையுள்ளவர், ஆகிலும் அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; [QE][QS2]வல்லமையுள்ள அவர் தமது நோக்கத்தில் உறுதியுள்ளவர். [QE]
6. [QS]அவர் கொடியவர்களை உயிர்வாழ விடுவதில்லை; [QE][QS2]துன்பப்படுகிறவர்களுக்கோ அவர்களுடைய உரிமைகளை வழங்குகிறார். [QE]
7. [QS]அவர் நேர்மையானவர்கள் மேலிருந்து தன் கண்களை அகற்றுவதில்லை; [QE][QS2]அவர் அவர்களை அரசர்களோடு அரியணையில் அமர்த்தி, [QE][QS2]அவர்களை என்றைக்கும் மேன்மைப்படுத்துகிறார். [QE]
8. [QS]ஆனால் மனிதர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, [QE][QS2]வேதனையின் கயிற்றினால் இறுக்கப்பட்டிருக்கும்போது, [QE]
9. [QS]அவர்கள் செய்தவற்றை இறைவன் அவர்களுக்குக் கூறுவார். [QE][QS2]அதாவது அவர்கள் அகந்தையாய் பாவம் செய்ததை அவர் சொல்வார். [QE]
10. [QS]அவர் அவர்கள் சீர்திருந்துதலுக்குச் செவிகொடுத்து, [QE][QS2]தங்கள் தீமையிலிருந்து மனந்திரும்ப கட்டளையிடுகிறார். [QE]
11. [QS]அவர்கள் கீழ்ப்படிந்து அவருக்குப் பணிசெய்தால், [QE][QS2]அவர்கள் தங்கள் மீதியான நாட்களைச் செல்வத்திலும், [QE][QS2]மீதியான வருஷங்களை மனநிறைவிலும் கழிப்பார்கள். [QE]
12. [QS]அடங்கி அவருக்குப் பணிசெய்யாவிட்டால், [QE][QS2]வாளினால் அழிந்து, [QE][QS2]அறிவில்லாமலே சாவார்கள். [QE][PBR]
13. [QS]“உள்ளத்தில் இறைவனற்றவர்கள் கோபத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்; [QE][QS2]அவர் அவர்களுக்கு விலங்கிடும்போதும் அவர்கள் உதவிக்காக அழுவதில்லை. [QE]
14. [QS]அவர்கள் கோவில்களிலிருக்கும் ஆண் விபசாரக்காரர் மத்தியில் [QE][QS2]தங்கள் இளமையிலேயே சாவார்கள். [QE]
15. [QS]ஆனாலும் துன்பப்படுகிறவர்களை அவர் துன்பத்திலிருந்து விடுவித்து, [QE][QS2]அவர்களுடைய வேதனையில் அவர் அவர்களோடு பேசுகிறார். [QE][PBR]
16. [QS]“யோபுவே, இறைவன் உன்னைக் கட்டுப்பாடற்ற விசாலமான இடத்திற்கு கொண்டுவரவும், [QE][QS2]சுவையான உணவுகள் நிறைந்த பந்தியில் அமர்த்தவும், [QE][QS2]வேதனையின் பிடியிலிருந்து உன்னை விடுவிக்கவும் முயற்சிக்கிறார். [QE]
17. [QS]கொடியவர்கள்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறக் காத்திருக்கிறீர்; [QE][QS2]நியாயத்தீர்ப்பும் நீதியுமே உம்மை ஆதரிக்கும். [QE]
18. [QS]செல்வங்களினால் ஒருவரும் உம்மைக் கவராதபடி எச்சரிக்கையாயிரும்; [QE][QS2]பெரிதான இலஞ்சம் உம்மை வழிவிலகிச் செல்ல இடங்கொடாதே. [QE]
19. [QS]உமது செல்வங்களும் வல்லமையான எல்லா முயற்சிகளும் [QE][QS2]நீர் துன்பத்தில் அகப்படாதபடி உம்மைத் தாங்குமோ? [QE]
20. [QS]மக்களைத் தங்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்வதற்காக [QE][QS2]நீர் இரவை வாஞ்சிக்காதிரும். [QE]
21. [QS]தீமைசெய்யத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்; [QE][QS2]ஏனெனில், நீர் துன்பத்தைவிட தீமையை தெரிந்துகொண்டீர். [QE][PBR]
22. [QS]“இறைவன் தமது வல்லமையில் உயர்த்தப்பட்டிருக்கிறார். [QE][QS2]அவரைப்போல் போதிக்கிறவர் யார்? [QE]
23. [QS]இறைவனுக்கு அவருடைய வழியைக் குறித்துக் கொடுத்தது யார்? [QE][QS2]அல்லது ‘நீர் அக்கிரமம் செய்தீர்’ என்று சொல்லியது யார்? [QE]
24. [QS]மனிதர்கள் புகழ்ந்து பாடும் பாடல்களால் [QE][QS2]அவருடைய செயலை மேன்மைப்படுத்த நினைவுகூரும். [QE]
25. [QS]அவர் செய்வதை எல்லா மனிதரும் காண்கிறார்கள்; [QE][QS2]அதைத் தூரத்திலிருந்து உற்றுப் பார்க்கிறார்கள்; [QE]
26. [QS]நமது விளங்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட இறைவன்! [QE][QS2]அவருடைய வருடங்களும் எண்ணிட முடியாதவை. [QE][PBR]
27. [QS]“அவர் நீர்த்துளிகளை மேலே இழுத்து, [QE][QS2]அவற்றை ஆறுகளில் மழையாகப் பெய்யச் செய்கிறார். [QE]
28. [QS]மேகங்கள் மழையைப் பொழிகின்றன, [QE][QS2]அது மனிதர்மேல் தாரையாய்ப் பொழிகிறது. [QE]
29. [QS]அவர் மேகங்களை எப்படி பரவுகிறார் என்றும், [QE][QS2]எப்படி முழங்குகிறார் என்றும் யாரால் விளங்கிக்கொள்ள முடியும்? [QE]
30. [QS]அவர் தமது மின்னலைத் தம்மைச் சுற்றிலும் சிதறப்பண்ணி, [QE][QS2]கடலின் ஆழங்களை எப்படி மூடுகிறார் என்று பாரும். [QE]
31. [QS]இவ்விதமாகவே அவர் மக்களை ஆளுகைசெய்து, [QE][QS2]ஏராளமான உணவையும் கொடுக்கிறார். [QE]
32. [QS]அவர் தம் கரங்களை மின்னலினால் நிரப்பி, [QE][QS2]குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும்படி அதற்குக் கட்டளையிடுகிறார். [QE]
33. [QS]அவருடைய இடிமுழக்கம் வரப்போகும் புயலை அறிவிக்கிறது; [QE][QS2]அதின் வருகையை மந்தைகள்கூடத் தெரிவிக்கும். [QE][PBR]