1. தொடர்ந்து எலிகூ சொன்னதாவது: [QBR]
2. “சற்று என்னிடம் பொறுமையாயிரும், [QBR2] இறைவன் சார்பாய் நான் சொல்ல வேண்டியவற்றை நான் உமக்குக் காண்பிப்பேன். [QBR]
3. நான் அதிக தூரத்திலிருந்து என் அறிவைப் பெறுகிறேன்; [QBR2] என்னைப் படைத்தவருக்கே நீதி உரியது என்றும் நிரூபிப்பேன். [QBR]
4. என் வார்த்தைகள் பொய்யானவையல்ல என்று உறுதியாய்க் கூறுகிறேன்; [QBR2] பூரண அறிவுள்ள நான் உம்மோடு பேசுகிறேன்.
5. “இறைவன் வல்லமையுள்ளவர், ஆகிலும் அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; [QBR2] வல்லமையுள்ள அவர் தமது நோக்கத்தில் உறுதியுள்ளவர். [QBR]
6. அவர் கொடியவர்களை உயிர்வாழ விடுவதில்லை; [QBR2] துன்பப்படுகிறவர்களுக்கோ அவர்களுடைய உரிமைகளை வழங்குகிறார். [QBR]
7. அவர் நேர்மையானவர்கள் மேலிருந்து தன் கண்களை அகற்றுவதில்லை; [QBR2] அவர் அவர்களை அரசர்களோடு அரியணையில் அமர்த்தி, [QBR2] அவர்களை என்றைக்கும் மேன்மைப்படுத்துகிறார். [QBR]
8. ஆனால் மனிதர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, [QBR2] வேதனையின் கயிற்றினால் இறுக்கப்பட்டிருக்கும்போது, [QBR]
9. அவர்கள் செய்தவற்றை இறைவன் அவர்களுக்குக் கூறுவார். [QBR2] அதாவது அவர்கள் அகந்தையாய் பாவம் செய்ததை அவர் சொல்வார். [QBR]
10. அவர் அவர்கள் சீர்திருந்துதலுக்குச் செவிகொடுத்து, [QBR2] தங்கள் தீமையிலிருந்து மனந்திரும்ப கட்டளையிடுகிறார். [QBR]
11. அவர்கள் கீழ்ப்படிந்து அவருக்குப் பணிசெய்தால், [QBR2] அவர்கள் தங்கள் மீதியான நாட்களைச் செல்வத்திலும், [QBR2] மீதியான வருஷங்களை மனநிறைவிலும் கழிப்பார்கள். [QBR]
12. அடங்கி அவருக்குப் பணிசெய்யாவிட்டால், [QBR2] வாளினால் அழிந்து, [QBR2] அறிவில்லாமலே சாவார்கள்.
13. “உள்ளத்தில் இறைவனற்றவர்கள் கோபத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்; [QBR2] அவர் அவர்களுக்கு விலங்கிடும்போதும் அவர்கள் உதவிக்காக அழுவதில்லை. [QBR]
14. அவர்கள் கோவில்களிலிருக்கும் ஆண் விபசாரக்காரர் மத்தியில் [QBR2] தங்கள் இளமையிலேயே சாவார்கள். [QBR]
15. ஆனாலும் துன்பப்படுகிறவர்களை அவர் துன்பத்திலிருந்து விடுவித்து, [QBR2] அவர்களுடைய வேதனையில் அவர் அவர்களோடு பேசுகிறார்.
16. “யோபுவே, இறைவன் உன்னைக் கட்டுப்பாடற்ற விசாலமான இடத்திற்கு கொண்டுவரவும், [QBR2] சுவையான உணவுகள் நிறைந்த பந்தியில் அமர்த்தவும், [QBR2] வேதனையின் பிடியிலிருந்து உன்னை விடுவிக்கவும் முயற்சிக்கிறார். [QBR]
17. கொடியவர்கள்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறக் காத்திருக்கிறீர்; [QBR2] நியாயத்தீர்ப்பும் நீதியுமே உம்மை ஆதரிக்கும். [QBR]
18. செல்வங்களினால் ஒருவரும் உம்மைக் கவராதபடி எச்சரிக்கையாயிரும்; [QBR2] பெரிதான இலஞ்சம் உம்மை வழிவிலகிச் செல்ல இடங்கொடாதே. [QBR]
19. உமது செல்வங்களும் வல்லமையான எல்லா முயற்சிகளும் [QBR2] நீர் துன்பத்தில் அகப்படாதபடி உம்மைத் தாங்குமோ? [QBR]
20. மக்களைத் தங்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்வதற்காக [QBR2] நீர் இரவை வாஞ்சிக்காதிரும். [QBR]
21. தீமைசெய்யத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்; [QBR2] ஏனெனில், நீர் துன்பத்தைவிட தீமையை தெரிந்துகொண்டீர்.
22. “இறைவன் தமது வல்லமையில் உயர்த்தப்பட்டிருக்கிறார். [QBR2] அவரைப்போல் போதிக்கிறவர் யார்? [QBR]
23. இறைவனுக்கு அவருடைய வழியைக் குறித்துக் கொடுத்தது யார்? [QBR2] அல்லது ‘நீர் அக்கிரமம் செய்தீர்’ என்று சொல்லியது யார்? [QBR]
24. மனிதர்கள் புகழ்ந்து பாடும் பாடல்களால் [QBR2] அவருடைய செயலை மேன்மைப்படுத்த நினைவுகூரும். [QBR]
25. அவர் செய்வதை எல்லா மனிதரும் காண்கிறார்கள்; [QBR2] அதைத் தூரத்திலிருந்து உற்றுப் பார்க்கிறார்கள்; [QBR]
26. நமது விளங்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட இறைவன்! [QBR2] அவருடைய வருடங்களும் எண்ணிட முடியாதவை.
27. “அவர் நீர்த்துளிகளை மேலே இழுத்து, [QBR2] அவற்றை ஆறுகளில் மழையாகப் பெய்யச் செய்கிறார். [QBR]
28. மேகங்கள் மழையைப் பொழிகின்றன, [QBR2] அது மனிதர்மேல் தாரையாய்ப் பொழிகிறது. [QBR]
29. அவர் மேகங்களை எப்படி பரவுகிறார் என்றும், [QBR2] எப்படி முழங்குகிறார் என்றும் யாரால் விளங்கிக்கொள்ள முடியும்? [QBR]
30. அவர் தமது மின்னலைத் தம்மைச் சுற்றிலும் சிதறப்பண்ணி, [QBR2] கடலின் ஆழங்களை எப்படி மூடுகிறார் என்று பாரும். [QBR]
31. இவ்விதமாகவே அவர் மக்களை ஆளுகைசெய்து, [QBR2] ஏராளமான உணவையும் கொடுக்கிறார். [QBR]
32. அவர் தம் கரங்களை மின்னலினால் நிரப்பி, [QBR2] குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும்படி அதற்குக் கட்டளையிடுகிறார். [QBR]
33. அவருடைய இடிமுழக்கம் வரப்போகும் புயலை அறிவிக்கிறது; [QBR2] அதின் வருகையை மந்தைகள்கூடத் தெரிவிக்கும். [PE]