1. [PS]தொடர்ந்து எலிகூ சொன்னதாவது: [PE]
2. [QS]“ஞானமுள்ள மனிதர்களே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; [QE][QS2]கல்விமான்களே, எனக்குச் செவிகொடுங்கள். [QE]
3. [QS]நாவு உணவைச் சுவைப்பதுபோல், [QE][QS2]காது வார்த்தைகளை நிதானிக்கிறது. [QE]
4. [QS]வாருங்கள், சரியானது எது என்பதை நாம் நிதானிப்போம்; [QE][QS2]எது நல்லது என்பதை நாம் ஒன்றாய்க் கற்றுக்கொள்வோம். [QE][PBR]
5. [QS]“யோபுவோ, ‘நான் குற்றமற்றவன், [QE][QS2]இறைவன் எனக்கு நீதிவழங்க மறுக்கிறார். [QE]
6. [QS]நான் சரியானவனாய் இருந்தபோதிலும், [QE][QS2]பொய்யனாகவே எண்ணப்படுகிறேன். [QE][QS]குற்றமற்றவனாய் இருந்தபோதிலும், [QE][QS2]அவருடைய அம்பு ஆறாதப் புண்ணை உண்டுபண்ணுகிறது’ என்கிறார். [QE]
7. [QS]தண்ணீர் பருகுவதைப்போல் [QE][QS2]கேலிசெய்யும் யோபுவைப் போன்றவர் உண்டோ? [QE]
8. [QS]அவர் தீமை செய்கிறவர்களின் கூட்டத்தில் சேர்ந்து, [QE][QS2]கொடிய மனிதர்களுடன் வாசம்பண்ணுகிறார். [QE]
9. [QS]ஏனெனில் அவர், ‘இறைவனுக்குப் பிரியமாக நடக்க முயற்சிப்பதினால் [QE][QS2]ஒரு பயனும் இல்லை’ என்கிறாரே. [QE][PBR]
10. [QS]“புத்திமான்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். [QE][QS2]தீமை இறைனுக்கும், [QE][QS2]அநீதி எல்லாம் வல்லவருக்கும் தூரமாயிருக்கிறது. [QE]
11. [QS]மனிதருடைய செய்கைக்குத் தக்கதாக அவர் பலனளிக்கிறார். [QE][QS2]அவர்களுடைய நடக்கைக்குத் தகுந்ததை அவர் அவர்களுக்கு வரப்பண்ணுகிறார். [QE]
12. [QS]இறைவன் அநியாயம் செய்யாமலும், [QE][QS2]எல்லாம் வல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே. [QE]
13. [QS]பூமியின் மேலாக மனிதரை நியமித்தவர் யார்? [QE][QS2]முழு உலகத்தையும் அவர்களுடைய பொறுப்பில் கொடுத்தவர் யார்? [QE]
14. [QS]அவர் தமது ஆவியையும் தமது சுவாசத்தையும் [QE][QS2]திரும்ப எடுத்துக்கொள்ள நோக்கங்கொண்டால், [QE]
15. [QS]எல்லா மனுக்குலமும் ஒன்றாய் அழிந்துபோகும்; [QE][QS2]மனிதர்களும் மண்ணுக்குத் திரும்புவார்கள். [QE][PBR]
16. [QS]“உமக்கு விளங்கும் ஆற்றல் இருந்தால் இதைக் கேளும், [QE][QS2]நான் சொல்வதற்குச் செவிகொடும். [QE]
17. [QS]நீதியை வெறுப்பவன் ஆள முடியுமோ? [QE][QS2]நீர் நீதியும் வல்லமையுமுள்ளவரை குற்றப்படுத்துவீரோ? [QE]
18. [QS]அரசர்களைப் பார்த்து, ‘ஒன்றுக்கும் உதவாதவர்கள்,’ என்றும், [QE][QS2]உயர்குடி மக்களைப் பார்த்து, ‘நீங்கள் கொடியவர்கள்’ என்றும் சொல்வார். [QE]
19. [QS]அவர் இளவரசர்களுக்குப் பாரபட்சம் காட்டுவதில்லை, [QE][QS2]ஏழையைவிட செல்வந்தனுக்குத் தயவு காட்டுவதுமில்லை; [QE][QS2]ஏனெனில், அவர்கள் எல்லோருமே அவருடைய கரங்களின் படைப்பல்லவா? [QE]
20. [QS]அவர்கள் நள்ளிரவில் ஒரு நொடியில் சாகிறார்கள்; [QE][QS2]அசைக்கப்பட்டு இல்லாமல் போகிறார்கள்; [QE][QS2]பலவான்களும் மனித கரமல்லாத ஒரு கரத்தினால் அகற்றப்படுகிறார்கள். [QE][PBR]
21. [QS]“இறைவனுடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; [QE][QS2]அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். [QE]
22. [QS]தீமை செய்கிறவர்கள் தங்களை ஒளித்துக்கொள்வதற்கு [QE][QS2]இருளான இடமோ, காரிருளோ இல்லை. [QE]
23. [QS]இறைவன் மனிதரை மேலும் சோதிக்கமாட்டார்; [QE][QS2]அவர்கள் அவர்முன் வழக்காடவேண்டிய அவசியமும் இல்லை. [QE]
24. [QS]இறைவன் விசாரணையின்றியே வல்லமையுள்ளவர்களைச் சிதறடித்து, [QE][QS2]அவர்களுக்குரிய இடத்தில் வேறு மனிதரை அமர்த்துகிறார். [QE]
25. [QS]ஏனெனில், அவர் அவர்களுடைய செயல்களைக் குறித்துக்கொள்கிறார்; [QE][QS2]இரவில் அவர்களைக் கவிழ்க்கிறார், அவர்கள் நசுங்கிப் போகிறார்கள். [QE]
26. [QS]அவர் அவர்களின் கொடுமையின் நிமித்தம், [QE][QS2]எல்லோரும் காணும்படியாக அவர்களைத் தண்டிக்கிறார். [QE]
27. [QS]ஏனெனில் அவர்கள் இறைவனைப் பின்பற்றுவதிலிருந்து விலகி, [QE][QS2]அவருடைய வழிகளை மதியாமல் போகிறார்கள். [QE]
28. [QS]அவர்கள் ஏழைகளின் அழுகுரலை இறைவனுக்கு சேரவைத்தனர்; [QE][QS2]அவர் அவர்களின் அழுகையைக் கேட்டார். [QE]
29. [QS]மவுனமாய் இருக்கிறவரைக் குற்றப்படுத்தாதே; [QE][QS2]நாட்டிற்கும், மனிதனுக்கும், [QE][QS]அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்? [QE]
[QS2]30. அதினால் இறைவனற்றவர்கள் ஆட்சிசெய்யாமலும், [QE][QS2]மக்கள் கண்ணியில் சிக்காமலும் தடுக்கிறார். [QE][PBR]
31. [QS]“யாராவது இறைவனிடம் இப்படிக் கேட்பதுண்டா: [QE][QS2]‘நான் குற்றவாளி, இனிப் பாவம் செய்யமாட்டேன். [QE]
32. [QS]நான் காணாதவற்றை எனக்குப் போதியும், [QE][QS2]நான் அக்கிரமம் செய்திருந்தால் இனிமேல் அதைச் செய்யமாட்டேன்.’ [QE]
33. [QS]நீர் மனந்திரும்ப மறுக்கும்போது [QE][QS2]உமது மன எண்ணப்படி இறைவன் வெகுமதி கொடுக்கவேண்டுமோ? [QE][QS]நானல்ல, நீரே தீர்மானித்துக்கொள்ளும்; [QE][QS2]நீர் அறிந்ததை எனக்குச் சொல்லும். [QE][PBR]
34. [QS]“நான் சொல்வதைக் கேட்ட விளங்கும் ஆற்றலுள்ளவர்களும் [QE][QS2]ஞானமுள்ளவர்களும் என்னிடம், [QE]
35. [QS]‘யோபு அறிவில்லாமல் பேசுகிறார்; [QE][QS2]அவருடைய வார்த்தைகள் ஞானமில்லாதவை என்றும், [QE]
36. [QS]யோபு கொடியவரைப்போல் பேசியதற்காக [QE][QS2]முற்றிலும் சோதிக்கப்பட வேண்டும். [QE]
37. [QS]தம்முடைய பாவத்துடன் மீறுதலையும் சேர்த்துக் கொள்கிறார்; [QE][QS2]அவர் எங்கள் மத்தியில் ஏளனமாய்க் கைகொட்டி, [QE][QS2]இறைவனுக்கு விரோதமான வார்த்தைகளைப் பேசினார்’ என்று என்னிடம் சொல்கிறார்கள்.” [QE]