1. தொடர்ந்து எலிகூ சொன்னதாவது: [QBR]
2. “ஞானமுள்ள மனிதர்களே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; [QBR2] கல்விமான்களே, எனக்குச் செவிகொடுங்கள். [QBR]
3. நாவு உணவைச் சுவைப்பதுபோல், [QBR2] காது வார்த்தைகளை நிதானிக்கிறது. [QBR]
4. வாருங்கள், சரியானது எது என்பதை நாம் நிதானிப்போம்; [QBR2] எது நல்லது என்பதை நாம் ஒன்றாய்க் கற்றுக்கொள்வோம்.
5. “யோபுவோ, ‘நான் குற்றமற்றவன், [QBR2] இறைவன் எனக்கு நீதிவழங்க மறுக்கிறார். [QBR]
6. நான் சரியானவனாய் இருந்தபோதிலும், [QBR2] பொய்யனாகவே எண்ணப்படுகிறேன். [QBR] குற்றமற்றவனாய் இருந்தபோதிலும், [QBR2] அவருடைய அம்பு ஆறாதப் புண்ணை உண்டுபண்ணுகிறது’ என்கிறார். [QBR]
7. தண்ணீர் பருகுவதைப்போல் [QBR2] கேலிசெய்யும் யோபுவைப் போன்றவர் உண்டோ? [QBR]
8. அவர் தீமை செய்கிறவர்களின் கூட்டத்தில் சேர்ந்து, [QBR2] கொடிய மனிதர்களுடன் வாசம்பண்ணுகிறார். [QBR]
9. ஏனெனில் அவர், ‘இறைவனுக்குப் பிரியமாக நடக்க முயற்சிப்பதினால் [QBR2] ஒரு பயனும் இல்லை’ என்கிறாரே.
10. “புத்திமான்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். [QBR2] தீமை இறைனுக்கும், [QBR2] அநீதி எல்லாம் வல்லவருக்கும் தூரமாயிருக்கிறது. [QBR]
11. மனிதருடைய செய்கைக்குத் தக்கதாக அவர் பலனளிக்கிறார். [QBR2] அவர்களுடைய நடக்கைக்குத் தகுந்ததை அவர் அவர்களுக்கு வரப்பண்ணுகிறார். [QBR]
12. இறைவன் அநியாயம் செய்யாமலும், [QBR2] எல்லாம் வல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே. [QBR]
13. பூமியின் மேலாக மனிதரை நியமித்தவர் யார்? [QBR2] முழு உலகத்தையும் அவர்களுடைய பொறுப்பில் கொடுத்தவர் யார்? [QBR]
14. அவர் தமது ஆவியையும் தமது சுவாசத்தையும் [QBR2] திரும்ப எடுத்துக்கொள்ள நோக்கங்கொண்டால், [QBR]
15. எல்லா மனுக்குலமும் ஒன்றாய் அழிந்துபோகும்; [QBR2] மனிதர்களும் மண்ணுக்குத் திரும்புவார்கள்.
16. “உமக்கு விளங்கும் ஆற்றல் இருந்தால் இதைக் கேளும், [QBR2] நான் சொல்வதற்குச் செவிகொடும். [QBR]
17. நீதியை வெறுப்பவன் ஆள முடியுமோ? [QBR2] நீர் நீதியும் வல்லமையுமுள்ளவரை குற்றப்படுத்துவீரோ? [QBR]
18. அரசர்களைப் பார்த்து, ‘ஒன்றுக்கும் உதவாதவர்கள்,’ என்றும், [QBR2] உயர்குடி மக்களைப் பார்த்து, ‘நீங்கள் கொடியவர்கள்’ என்றும் சொல்வார். [QBR]
19. அவர் இளவரசர்களுக்குப் பாரபட்சம் காட்டுவதில்லை, [QBR2] ஏழையைவிட செல்வந்தனுக்குத் தயவு காட்டுவதுமில்லை; [QBR2] ஏனெனில், அவர்கள் எல்லோருமே அவருடைய கரங்களின் படைப்பல்லவா? [QBR]
20. அவர்கள் நள்ளிரவில் ஒரு நொடியில் சாகிறார்கள்; [QBR2] அசைக்கப்பட்டு இல்லாமல் போகிறார்கள்; [QBR2] பலவான்களும் மனித கரமல்லாத ஒரு கரத்தினால் அகற்றப்படுகிறார்கள்.
21. “இறைவனுடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; [QBR2] அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். [QBR]
22. தீமை செய்கிறவர்கள் தங்களை ஒளித்துக்கொள்வதற்கு [QBR2] இருளான இடமோ, காரிருளோ இல்லை. [QBR]
23. இறைவன் மனிதரை மேலும் சோதிக்கமாட்டார்; [QBR2] அவர்கள் அவர்முன் வழக்காடவேண்டிய அவசியமும் இல்லை. [QBR]
24. இறைவன் விசாரணையின்றியே வல்லமையுள்ளவர்களைச் சிதறடித்து, [QBR2] அவர்களுக்குரிய இடத்தில் வேறு மனிதரை அமர்த்துகிறார். [QBR]
25. ஏனெனில், அவர் அவர்களுடைய செயல்களைக் குறித்துக்கொள்கிறார்; [QBR2] இரவில் அவர்களைக் கவிழ்க்கிறார், அவர்கள் நசுங்கிப் போகிறார்கள். [QBR]
26. அவர் அவர்களின் கொடுமையின் நிமித்தம், [QBR2] எல்லோரும் காணும்படியாக அவர்களைத் தண்டிக்கிறார். [QBR]
27. ஏனெனில் அவர்கள் இறைவனைப் பின்பற்றுவதிலிருந்து விலகி, [QBR2] அவருடைய வழிகளை மதியாமல் போகிறார்கள். [QBR]
28. அவர்கள் ஏழைகளின் அழுகுரலை இறைவனுக்கு சேரவைத்தனர்; [QBR2] அவர் அவர்களின் அழுகையைக் கேட்டார். [QBR]
29. மவுனமாய் இருக்கிறவரைக் குற்றப்படுத்தாதே; [QBR2] நாட்டிற்கும், மனிதனுக்கும், [QBR] அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்? [QBR2]
30. அதினால் இறைவனற்றவர்கள் ஆட்சிசெய்யாமலும், [QBR2] மக்கள் கண்ணியில் சிக்காமலும் தடுக்கிறார்.
31. “யாராவது இறைவனிடம் இப்படிக் கேட்பதுண்டா: [QBR2] ‘நான் குற்றவாளி, இனிப் பாவம் செய்யமாட்டேன். [QBR]
32. நான் காணாதவற்றை எனக்குப் போதியும், [QBR2] நான் அக்கிரமம் செய்திருந்தால் இனிமேல் அதைச் செய்யமாட்டேன்.’ [QBR]
33. நீர் மனந்திரும்ப மறுக்கும்போது [QBR2] உமது மன எண்ணப்படி இறைவன் வெகுமதி கொடுக்கவேண்டுமோ? [QBR] நானல்ல, நீரே தீர்மானித்துக்கொள்ளும்; [QBR2] நீர் அறிந்ததை எனக்குச் சொல்லும்.
34. “நான் சொல்வதைக் கேட்ட விளங்கும் ஆற்றலுள்ளவர்களும் [QBR2] ஞானமுள்ளவர்களும் என்னிடம், [QBR]
35. ‘யோபு அறிவில்லாமல் பேசுகிறார்; [QBR2] அவருடைய வார்த்தைகள் ஞானமில்லாதவை என்றும், [QBR]
36. யோபு கொடியவரைப்போல் பேசியதற்காக [QBR2] முற்றிலும் சோதிக்கப்பட வேண்டும். [QBR]
37. தம்முடைய பாவத்துடன் மீறுதலையும் சேர்த்துக் கொள்கிறார்; [QBR2] அவர் எங்கள் மத்தியில் ஏளனமாய்க் கைகொட்டி, [QBR2] இறைவனுக்கு விரோதமான வார்த்தைகளைப் பேசினார்’ என்று என்னிடம் சொல்கிறார்கள்.” [PE]