1. “நான் ஒரு பெண்ணையும் இச்சையுடன் பார்க்கமாட்டேன், [QBR2] என என் கண்களோடு ஒப்பந்தம் செய்தேன். [QBR]
2. ஆனாலும் உன்னதத்தில் இருக்கும் இறைவனிடமிருந்து என்ன பங்கு? [QBR2] உன்னதத்தில் இருக்கும் எல்லாம் வல்லவர் அளிக்கும் சொத்து என்ன? [QBR]
3. கொடியவனுக்கு பேராபத்தும், [QBR2] தவறு செய்பவர்களுக்குப் பேரழிவும் அல்லவா? [QBR]
4. அவர் என் வழிகளைக் காணவில்லையோ? [QBR2] என் ஒவ்வொரு காலடியையும் எண்ணவில்லையோ?
5. “நான் பொய்யாய் நடந்திருந்து, [QBR2] என் கால்கள் ஏமாற்ற விரைந்திருந்தால், [QBR]
6. இறைவன் தராசில் என்னை நிறுத்தட்டும், [QBR2] நான் குற்றமற்றவன் என்பதை அவர் அறிந்துகொள்வார். [QBR]
7. என் காலடிகள் பாதையைவிட்டு விலகியிருந்தால், [QBR2] அல்லது என் உள்ளம் என் கண்களைப் பின்பற்றியிருந்தால், [QBR2] அல்லது என் கைகள் கறைப்பட்டிருந்தால், [QBR]
8. அப்பொழுது நான் விதைப்பதை மற்றவர்கள் உண்ணட்டும், [QBR2] என் விளைச்சல் வேரோடே பிடுங்கப்படட்டும்.
9. “என் உள்ளம் ஒரு பெண்ணால் கவரப்பட்டு, [QBR2] அயலானுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால், [QBR]
10. அப்பொழுது என் மனைவி இன்னொருவனுக்கு மாவரைப்பாளாக; [QBR2] பிற மனிதர்கள் அவளுடன் உறவுகொள்ளட்டும். [QBR]
11. ஏனெனில், அது வெட்கக்கேடான, [QBR2] தண்டிக்கப்படவேண்டிய பாவமாயிருக்கும். [QBR]
12. அது பாதாளம்வரை அழிக்கும் நெருப்பு; [QBR2] அது என் விளைச்சலை வேரோடே பிடுங்கிவிடும்.
13. “என் வேலைக்காரருக்கும், [QBR2] வேலைக்காரிகளுக்கும் எனக்கு எதிராக மனக்குறை இருந்தபோது, [QBR2] நான் அவர்களுக்கு நீதிவழங்க மறுத்திருந்தால், [QBR]
14. இறைவன் என்னை எதிர்கொள்ளும்போது, நான் என்ன செய்வேன்? [QBR2] அவர் என்னிடம் கணக்குக் கேட்கும்போது நான் என்ன பதில் சொல்வேன்? [QBR]
15. என்னை கருப்பையில் உண்டாக்கியவர் அவர்களையும் உண்டாக்கவில்லையோ? [QBR2] எங்கள் இருவரையுமே எங்கள் தாய்மாரின் வயிற்றில் உருவாக்கியவர் அவரல்லவோ?
16. “நான் ஏழைகளின் தேவைகளைக் கொடுக்க மறுத்து, [QBR2] விதவைகளின் கண்களைக் கண்ணீர் விடுவதினால் இளைக்கப் பண்ணியிருக்கிறேனா? [QBR]
17. அல்லது அநாதைகளோடு என் உணவைப் பகிர்ந்துகொள்ளாமல், [QBR2] நான் மட்டும் சாப்பிட்டிருக்கிறேனா? [QBR]
18. ஆனால் நானோ இளவயதுமுதல் அவர்களை ஒரு தகப்பனைப்போல் வளர்த்தேனே; [QBR2] என் பிறப்பிலிருந்தே விதவைகளுக்கு நான் வழிகாட்டினேனே. [QBR]
19. உடுக்க உடையின்றி ஒருவன் அழிவதையோ, [QBR2] அல்லது ஏழை ஒருவன் உடையின்றி இருப்பதையோ நான் கண்டும், [QBR]
20. என் செம்மறியாடுகளின் கம்பளி, [QBR2] அவன் குளிரைப் போக்காததினால் அவன் இருதயம் என்னை ஆசீர்வதிக்காமல் இருக்குமோ? [QBR]
21. நீதிமன்றத்தில் [*நீதிமன்றத்தில் அல்லது மக்கள் தீர்ப்புக்காக கூடும் நகர வாசல்.] எனக்குச் செல்வாக்கு இருப்பதை நான் அறிந்திருந்தும், [QBR2] அநாதைக்கு விரோதமாக நான் எனது கைகளை உயர்த்தியிருந்தால், [QBR]
22. என் தோள்பட்டை தோளிலிருந்து கழன்று போகட்டும், [QBR2] அது மூட்டிலிருந்து முறிந்து போகட்டும். [QBR]
23. இறைவனுடைய தண்டனைக்கு நான் பயந்ததினாலும், [QBR2] அவருடைய மாட்சிமையின் பக்தி எனக்கிருந்ததினாலும் [QBR2] தீமையை என்னால் செய்ய முடியவில்லை.
24. “நான் என் நம்பிக்கையை பொன்னின்மேல் வைத்து, [QBR2] சுத்த தங்கத்தைப் பார்த்து, ‘நீயே என் பாதுகாப்பு’ எனச் சொல்லியிருந்தால், [QBR]
25. என் செல்வம் பெரியதென்றும், [QBR2] அதை என் கைகளே சேர்த்ததென்றும் நான் மகிழ்ந்திருந்தால், [QBR]
26. பிரகாசமுள்ள சூரியனையும், [QBR2] தன் மகிமையில் நகர்ந்து செல்லும் சந்திரனையும் கண்டு அதைப் பெரிதாக மதித்து, [QBR]
27. என் மனம் இரகசியமாகக் மயங்கி, [QBR2] நான் அவைகளுக்கு மரியாதை முத்தமிட்டிருந்தால், [QBR]
28. அப்பொழுது இவைகளும் தண்டனைக்குரிய பாவங்களாய் இருந்திருக்கும்; [QBR2] நான் என் உன்னதத்திலுள்ள இறைவனுக்கு உண்மையற்றவனாய் இருந்திருப்பேன்.
29. “என் பகைவனுக்கு வரும் அழிவைக் கண்டு நான் மகிழ்ந்தேனோ? [QBR2] தீமை அவனுக்கு வந்தபோது, நான் ஏளனம் செய்ததுண்டோ? [QBR]
30. இல்லையே! நான் அவனுடைய வாழ்வுக்கு எதிராகச் சாபமிட்டுப் [QBR2] பாவம் செய்யும்படி என் வாயை அனுமதித்ததில்லையே. [QBR]
31. ‘யோபுவின் உணவை உண்டு திருப்தியடையாதவன் யார்?’ [QBR2] என என் வீட்டிலுள்ள மனிதர் ஒருபோதும் சொல்லாது இருந்ததுண்டோ? [QBR]
32. வழிப்போக்கருக்கு என் வாசல்களைத் திறந்தேன் [QBR2] பிறர் வீதியில் தன் இரவைக் கழிக்கவில்லையே! [QBR]
33. மனிதர் செய்வதுபோல, என் குற்றத்தை என் உள்ளத்தில் ஒளித்து, [QBR2] என் பாவத்தை மறைத்தேனோ? [QBR]
34. நான் மக்கள் கூட்டத்திற்குப் பயந்ததாலும், [QBR2] குலத்தவர்களின் இகழ்ச்சிக்கு அஞ்சினதாலும் [QBR2] வெளியே போகாமல் மவுனமாய் இருந்தேனோ?
35. “நான் சொல்வதைக் கேட்க யாரும் இல்லையோ? [QBR2] இதோ நான் சொன்ன எனது எதிர்வாதத்தில் கையொப்பமிடுகிறேன். [QBR] எல்லாம் வல்லவர் எனக்குப் பதிலளிக்கட்டும், [QBR2] என்னைக் குற்றம் சாட்டுகிறவர் தனது குற்றச்சாட்டை எழுதிக்கொடுக்கட்டும். [QBR]
36. நிச்சயமாக அதை நான் என் தோளின்மேல் வைத்து, [QBR2] ஒரு மகுடத்தைப்போல் சூட்டிக்கொள்வேன். [QBR]
37. நான் ஒரு இளவரசனைப்போல் அவரை அணுகி, [QBR2] என் ஒவ்வொரு காலடிக்கும் கணக்குக் கொடுப்பேன்.
38. “என் நிலம் எனக்கெதிராக அழுது புலம்பினாலும், [QBR2] அதின் வரப்புகள் கண்ணீரால் நனைந்திருந்தாலும், [QBR]
39. நான் பணம் கொடுக்காமல் அதின் விளைவை விழுங்கியிருந்தாலும், [QBR2] அல்லது அதின் குத்தகைக்காரனை உள்ளமுடையச் செய்திருந்தாலும், [QBR]
40. அந்த நிலத்தில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், [QBR2] வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கட்டும்.” [PE][PS] யோபுவின் வார்த்தைகள் இத்துடன் முடிவடைகின்றன. [PE]