1. “ஆனால் இப்பொழுதோ [QBR2] என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள்; [QBR] அவர்களுடைய தந்தையரை, நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்ககூடாது [QBR2] என எண்ணினேன். [QBR]
2. அவர்கள் கைகளின் வல்லமையால் எனக்கு என்ன பயன்? [QBR2] அவர்கள் வலிமைதான் இல்லாமல் போயிற்றே! [QBR]
3. அவர்கள் பசியினாலும், பஞ்சத்தினாலும் நலிந்து, [QBR2] இரவிலே வெறுமையான வறண்ட நிலத்தில் [QBR2] அலைந்து திரிந்தார்கள். [QBR]
4. அவர்கள் புதர்ச்செடிகளில் இருந்து உவர்ப்புப் பூண்டுகளைச் சேர்த்தார்கள்; [QBR2] காட்டுச்செடிகளின் கிழங்குகளே அவர்களுக்கு ஆகாரம். [QBR]
5. கள்வர்களைச் சத்தமிட்டுத் துரத்துவதுபோல், [QBR2] அவர்கள் தங்கள் மக்களிலிருந்து துரத்தப்பட்டார்கள். [QBR]
6. அவர்கள் காய்ந்த நீரோடைகளின் தரையிலும், கற்பாறைகளுக்கிடையிலும், [QBR2] நிலத்தின் பொந்துகளிலும் குடியிருக்க வேண்டியதாயிருந்தது. [QBR]
7. புதர்களுக்குள்ளிருந்து கதறி, [QBR2] முட்செடிகளின் கீழ் ஒதுங்கினார்கள். [QBR]
8. அவர்கள் இழிவானவர்களும், நற்பெயரற்றவர்களுமாக [QBR2] நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டார்கள்.
9. “இளைஞர்கள் பாடல்களினாலும், [QBR2] பழமொழியினாலும், என்னை கேலி செய்கிறார்கள். [QBR]
10. அவர்கள் என்னை அருவருத்து எனக்குத் தூரமாய் விலகிக்கொள்கிறார்கள்; [QBR2] அவர்கள் என் முகத்தில் துப்புவதற்கும் தயங்கவில்லை. [QBR]
11. ஏனெனில் இறைவன் என் வில்லின் நாணை அறுத்து என்னைச் சிறுமைப்படுத்தியதால், [QBR2] அவர்கள் என்முன் அடக்கமற்றவர்களாய் இருக்கிறார்கள். [QBR]
12. வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என்னைத் தாக்குகிறார்கள்; [QBR2] என் பாதங்கள் தவறி விழச்செய்கிறார்கள், [QBR2] எனக்கு விரோதமாக அழிவின் பாதைகளை அமைக்கிறார்கள். [QBR]
13. அவர்கள் என் வழியைக் கெடுக்கிறார்கள்; [QBR2] ஒருவருடைய உதவியுமின்றி [QBR2] என்னை அழிப்பதில் வெற்றி கொள்கிறார்கள். [QBR]
14. அவர்கள் பெரிய வழியை உண்டாக்கி, [QBR2] இடிந்தவைகளுக்கு இடையில் புரண்டு வருகிறார்கள். [QBR]
15. பயங்கரங்கள் என்னை மேற்கொள்கின்றன; [QBR2] காற்று அடித்துக்கொண்டு போவதுபோல், என் மேன்மை போய்விட்டது, [QBR2] என் பாதுகாப்பும் மேகத்தைப்போல் இல்லாமல் போகிறது.
16. “இப்பொழுது என் ஆத்துமா தளர்ந்து வற்றிப்போனது; [QBR2] துன்ப நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது. [QBR]
17. இரவு என் எலும்புகளை உருவக் குத்துகிறது; [QBR2] என் நரம்புவலி ஒருபோதும் ஓயாது இருக்கிறது. [QBR]
18. இறைவன் தமது பெரிதான வல்லமையினால் உடையைப்போல் என்னை மூடுகிறார்; [QBR2] உடையின் கழுத்துப் பட்டையைப்போல் என் நோய் என்னைச் சுற்றிக்கொண்டது. [QBR]
19. அவர் என்னைச் சேற்றில் தள்ளுகிறார், [QBR2] நான் தூசியாயும் சாம்பலுமானேன்.
20. “இறைவனே, உம்மை நோக்கி கூப்பிடுகிறேன், நீர் பதில் கொடுக்காமலிருக்கிறீர்; [QBR2] நான் உமக்கு முன்பாக நிற்கிறேன், நீரோ ஒன்றும் செய்யாமலிருக்கிறீர். [QBR]
21. கொடூரமாய் என் பக்கம் திரும்புகிறீர்; [QBR2] உமது கரத்தின் வல்லமையால் என்னைத் தாக்குகிறீர். [QBR]
22. என்னைப் பிடுங்கி காற்றுக்கு முன்பாகப் பறக்க விடுகிறீர்; [QBR2] புயலிலே என்னைச் சுழற்றுகிறீர். [QBR]
23. நீர் என்னைச் சாவுக்குள்ளாக்குவீர் என்பது எனக்குத் தெரியும், [QBR2] உயிருள்ளோர் யாவருக்கும் நியமிக்கப்பட்ட இடம் அதுவே.
24. “மனமுடைந்தவன் தன் உதவிக்காக அழும்போது, [QBR2] யாரும் உதவிசெய்வதில்லை. [QBR]
25. கஷ்டப்படுகிறவர்களுக்காக நான் அழவில்லையோ? [QBR2] ஏழைக்காக என் உள்ளம் வருந்தியதில்லையோ? [QBR]
26. அப்படியிருந்தும், நான் நல்லதை எதிர்பார்த்தபோது, தீமையே வந்தது; [QBR2] நான் ஒளிக்குக் காத்திருந்தபோது இருளே வந்தது. [QBR]
27. என் உள்ளக் குமுறல்கள் ஒருபோதும் ஒயவில்லை; [QBR2] துன்பநாட்களே என்னை எதிர்நோக்குகின்றன. [QBR]
28. நான் வெயில் படாதிருந்தும் கறுகறுத்துத் திரிகிறேன்; [QBR2] கூட்டத்தில் நான் எழும்பி உதவிக்காகக் கதறுகிறேன். [QBR]
29. நான் நரிகளுக்குச் சகோதரனும், [QBR2] ஆந்தைகளுக்குக் கூட்டாளியுமானேன். [QBR]
30. என் தோல் கறுத்துப்போயிற்று; [QBR2] என் உடல் காய்ச்சலால் எரிகிறது. [QBR]
31. என் யாழ் புலம்பலையும், [QBR2] என் புல்லாங்குழல் அழுகையின் ஒசையையே எழுப்புகிறது. [PE]