1. {#1யோபுவின் நண்பர்களுக்கு அவருடைய இறுதி வார்த்தை } [PS]யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது: [PE]
2. [QS]“எனக்கு நீதியை மறுத்து, [QE][QS2]வாழ்வைக் கசப்பாக்கின எல்லாம் வல்ல இறைவன் வாழ்வது நிச்சயம்போலவே, [QE]
3. [QS]எனக்குள் என் உயிரும், [QE][QS2]என் மூக்கில் இறைவனின் சுவாசமும் இருக்கும்வரை, [QE]
4. [QS]என் உதடுகள் கொடுமையானதைப் பேசாது, [QE][QS2]என் நாவு வஞ்சகமானவற்றைச் சொல்லாது. [QE]
5. [QS]நீங்கள் சொல்வது சரி என நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டேன்; [QE][QS2]நான் சாகும்வரை என் உத்தமத்தை மறுக்கவுமாட்டேன். [QE]
6. [QS]என் நேர்மையை நான் காத்துக்கொள்வேன், அதை நான் ஒருபோதும் விடமாட்டேன்; [QE][QS2]நான் உயிரோடிருக்குமட்டும் என் மனசாட்சி என்னைக் கடிந்துகொள்ளாது. [QE][PBR]
7. [QS]“என் பகைவர் கொடியவர்களைப்போல் இருக்கட்டும், [QE][QS2]என் விரோதி அநீதியுள்ளவர்களைப்போல் இருக்கட்டும். [QE]
8. [QS]இறைவனை மறுதலிக்கிறவன் வெட்டுண்டுபோய், [QE][QS2]இறைவன் அவனுடைய உயிரை எடுத்துக்கொள்ளும்போது, அவனுடைய நம்பிக்கை என்ன? [QE]
9. [QS]அவனுக்குத் துன்பம் வரும்போது [QE][QS2]இறைவன் அவனுடைய கதறலைக் கேட்பாரோ? [QE]
10. [QS]எல்லாம் வல்லவரில் அவன் மகிழ்ச்சியடைவானோ? [QE][QS2]எல்லா நேரங்களிலும் அவன் இறைவனைக் கூப்பிடுவானோ? [QE][PBR]
11. [QS]“இறைவனின் வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்; [QE][QS2]எல்லாம் வல்லவரின் வழிகளை நான் மறைக்கமாட்டேன். [QE]
12. [QS]இவற்றையெல்லாம் நீங்கள் பார்த்திருந்தும் [QE][QS2]ஏன் இந்த வீண்பேச்சு? [QE][PBR]
13. [QS]“கொடியவனுக்கு இறைவனிடத்திலிருந்து கிடைக்கும் பங்கும், [QE][QS2]தீயவன் எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து பெறும் உரிமைச்சொத்தும் இதுவே: [QE]
14. [QS]அவனுக்கு பிள்ளைகள் அநேகர் இருப்பார்கள், [QE][QS2]ஆனால் அவர்கள் வாளுக்கு இரையாவார்கள்; [QE][QS2]அவனுடைய சந்ததியினருக்கு ஒருபோதும் போதியளவு உணவு கிடைக்காது. [QE]
15. [QS]அவனுக்கு மீதியானவர்கள் கொள்ளைநோய்க்குப் பலியாகும்போது, [QE][QS2]அவர்களுடைய விதவைகள் அழமாட்டார்கள். [QE]
16. [QS]அவன் வெள்ளியைப் தூசியைப்போலவும், [QE][QS2]உடைகளைக் களிமண் குவியலைப் போலவும் குவித்து வைத்தாலும், [QE]
17. [QS]அவன் குவித்து வைத்ததை நேர்மையானவர்கள் உடுத்துவார்கள், [QE][QS2]குற்றமற்றவர்கள் அவனுடைய வெள்ளியைப் பகிர்ந்துகொள்வார்கள். [QE]
18. [QS]அவன் தன்னுடைய வீட்டை சிலந்தி பூச்சியின் கூட்டைப்போலவும், [QE][QS2]காவற்காரன் கட்டிய சிறுகுடிசையைப்போலவும் கட்டுகிறான். [QE]
19. [QS]அவன் செல்வந்தனாக படுக்கைக்குப் போகிறான், ஆனால் தொடர்ந்து அப்படியிரான்; [QE][QS2]அவன் தன் கண்களைத் திறக்கும்போது எல்லாமே போய்விடுகின்றன. [QE]
20. [QS]பயங்கரங்கள் வெள்ளம்போல் அவனை மேற்கொள்கின்றன; [QE][QS2]இரவில் பெரும்புயல் அவனை அள்ளிக்கொண்டுபோகிறது. [QE]
21. [QS]கொண்டல் காற்று அவனை அடித்து செல்கிறது, அவன் காணாமல் போகிறான்; [QE][QS2]அவன் இருப்பிடத்திலிருந்து அவனை வாரிக்கொண்டுபோகிறது. [QE]
22. [QS]அது இரக்கமின்றி அவனை விரட்டும்; [QE][QS2]இறைவனுடைய கைக்குத் தப்பியோட பார்ப்பார்கள். [QE]
23. [QS]மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி ஏளனம் செய்து, [QE][QS2]அவனை அவனுடைய இடத்தைவிட்டு விரட்டிவிடுவார்கள்.” [QE]