1. {யோபு பேசுதல்} [PS] அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது: [QBR]
2. “பெலவீனமானவனுக்கு நீ எப்படி உதவினாய்? [QBR2] தளர்ந்த கையை நீ எப்படித் தாங்கினாய்? [QBR]
3. ஞானமில்லாத ஒருவனுக்கு நீ எப்படி புத்திமதி கூறி, [QBR2] சிறந்த மெய்யறிவைக் காட்டியிருக்கிறாய்? [QBR]
4. இந்த வார்த்தைகளைச் சொல்ல உனக்கு உதவியவர் யார்? [QBR2] யாருடைய ஆவி உன் வாயிலிருந்து பேசிற்று?
5. “தண்ணீரின்கீழ் மடிந்தவர்களும் அவர்களோடே இருப்பவர்களும், [QBR2] இறந்தவர்களின் ஆவிகளும் பயந்து நடுங்குகின்றன. [QBR]
6. பாதாளம் இறைவனுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கிறது; [QBR2] நரகம் திறந்திருக்கிறது. [QBR]
7. இறைவன் வெறுமையான வெளியில் வடதிசை வானங்களை விரிக்கிறார், [QBR2] அவர் பூமியை அந்தரத்திலே தொங்கவிடுகிறார். [QBR]
8. அவர் தண்ணீரைத் தம்முடைய மேகங்களில் சுற்றி வைக்கிறார், [QBR2] ஆனாலும் அவைகளின் பாரத்தால் மேகங்கள் கிழிந்து போவதில்லை. [QBR]
9. அவர் சிங்காசனத்தின் மேற்பரப்பின் மேலாகத் தமது மேகத்தை விரித்து, [QBR2] அதை மூடிவைக்கிறார். [QBR]
10. அவர் தண்ணீரின் மேற்பரப்பில் அடிவானத்தை [QBR2] ஒளிக்கும் இருளுக்கும் இடையிலுள்ள எல்லையாகக் குறிக்கிறார். [QBR]
11. வானத்தின் தூண்கள், [QBR2] அவருடைய கண்டனத்தால் திகைத்து நடுங்குகின்றன. [QBR]
12. அவர் தமது வல்லமையினால் கடலை அமர்த்துகிறார், [QBR2] தமது ஞானத்தினால் ராகாப் கடல் விலங்கைத் துண்டுகளாக வெட்டுகிறார். [QBR]
13. அவருடைய சுவாசத்தினால் ஆகாயங்கள் அழகாயின; [QBR2] அவருடைய கரம் நெளியும் பாம்பை ஊடுருவிக் குத்தியது. [QBR]
14. இவை அவருடைய செயல்களில் வெளிப்புற விளிம்பு மட்டுமே; [QBR2] அவரைப்பற்றி நாம் கேள்விப்பட்டது மிகக் கொஞ்சமே; [QBR2] அப்படியானால் அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை விளங்கிக்கொள்பவன் யார்?” [PE]