1. {பில்தாத் பேசுதல்} [PS] அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது: [QBR]
2. “ஆளுகையும், பிரமிக்கத்தக்க பயமும் இறைவனுக்கே உரியது; [QBR2] அவரே பரலோகத்தின் உயரங்களில் சமாதானத்தை நிலைநாட்டுகிறவர். [QBR]
3. அவருடைய படைவீரர்களை எண்ணமுடியுமோ? [QBR2] அவருடைய ஒளி யார்மேல் உதிக்காமல் இருக்கிறது? [QBR]
4. அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி? [QBR2] பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி? [QBR]
5. அவருடைய பார்வையில் சந்திரன் பிரகாசம் இல்லாமலும், [QBR2] நட்சத்திரங்கள் தூய்மையற்றதாயும் இருக்கும்போது, [QBR]
6. பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும் [QBR2] மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!” [PE]