1. [QS]“எல்லாம் வல்லவர் நியாயந்தீர்க்கும் காலத்தை மறைத்திருப்பது ஏன்? [QE][QS2]அவரை அறிந்தவர்கள் அந்நாட்களுக்காக வீணாய்க் காத்திருப்பதும் ஏன்? [QE]
2. [QS]மனிதர் எல்லைக் கற்களைத் தள்ளிவைக்கிறார்கள்; [QE][QS2]அவர்கள் திருடிய மந்தைகளையே அவர்கள் மேய்க்கிறார்கள். [QE]
3. [QS]அநாதைகளின் கழுதைகளை அவர்கள் துரத்திவிடுகிறார்கள்; [QE][QS2]விதவைகளின் எருதை ஈட்டுப் பொருளாக வாங்குகிறார்கள். [QE]
4. [QS]அவர்கள் தேவையுள்ளவர்களை வழியிலிருந்து தள்ளிவிடுகிறார்கள்; [QE][QS2]அவர்களுடைய வன்முறையால் நாட்டிலுள்ள ஏழைகளை ஒழியப்பண்ணுகிறார்கள். [QE]
5. [QS]காட்டுக் கழுதை பாலைவனத்தில் அலைவதுபோல், [QE][QS2]ஏழைகள் உணவு தேடி அலைகிறார்கள்; [QE][QS2]அவர்கள் பிள்ளைகளுக்குப் பாழ்நிலம் உணவளிக்கின்றது. [QE]
6. [QS]வயல்வெளிகளில் அவர்கள் தங்கள் உணவைச் சேர்க்கிறார்கள்; [QE][QS2]கொடியவர்களின் திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்டதை பொறுக்குகிறார்கள். [QE]
7. [QS]அவர்கள் போர்த்துக்கொள்ள உடையில்லாமல் இரவை கழிக்கிறார்கள்; [QE][QS2]குளிரில் மூடிக்கொள்வதற்கு அவர்களிடம் ஒன்றுமே இல்லை. [QE]
8. [QS]மலைகளிலிருந்து வரும் மழையினால் அவர்கள் நனைகிறார்கள்; [QE][QS2]தங்குவதற்கு இடமின்றி பாறைகளில் மறைகிறார்கள். [QE]
9. [QS]தந்தையற்ற பிள்ளை தாயின் மார்பிலிருந்து பிடுங்கப்படுகிறது; [QE][QS2]ஏழையின் குழந்தை கடனுக்காகக் கைப்பற்றப்படுகிறது. [QE]
10. [QS]ஏழைகள் உடையின்றி நடந்து, [QE][QS2]அரிக்கட்டுகளைச் சுமந்து, பசியாகவே இருக்கிறார்கள். [QE]
11. [QS]அவர்கள் தாகத்தால் செக்கு ஆட்டி, ஒலிவ எண்ணெயை எடுக்கிறார்கள்; [QE][QS2]ஆலைகளில் திராட்சை இரசம் பிழிகிறார்கள். [QE]
12. [QS]சாகிறவர்களின் அழுகை பட்டணத்திலிருந்து எழும்புகிறது, [QE][QS2]காயப்பட்டவர்கள் உதவிவேண்டி கதறி அழுகிறார்கள், [QE][QS2]ஆனாலும் இறைவன் அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை. [QE][PBR]
13. [QS]“கொடியவர்கள் ஒளியை எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள்; [QE][QS2]அவர்கள் ஒளியின் வழிகளை அறியாமலும், [QE][QS2]அதின் பாதைகளில் நிலைத்திராமலும் இருக்கிறார்கள். [QE]
14. [QS]பொழுது விடிகிறபோது கொலையாளி எழுந்து, [QE][QS2]ஏழையையும் தேவை மிகுந்தவர்களையும் கொன்று, [QE][QS2]இரவில் திருடனைப்போல் திரிகிறான். [QE]
15. [QS]விபசாரம் செய்கிறவனின் கண்கள் மாலை மங்கும்வரை காத்திருக்கின்றன; [QE][QS2]அவன், ‘என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள்’ என எண்ணி, [QE][QS2]தன் முகத்தையும் மறைத்துக்கொள்கிறான். [QE]
16. [QS]பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை [QE][QS2]இரவில் கன்னமிடுகிறார்கள்; [QE][QS2]வெளிச்சத்தில் எதையும் செய்ய அவர்கள் விரும்புவதில்லை. [QE]
17. [QS]அவர்கள் எல்லோருக்கும் கடும் இருளே காலை நேரமாயிருக்கிறது; [QE][QS2]இருளின் பயங்கரங்களுடன் அவர்கள் நட்பு வைக்கிறார்கள். [QE][PBR]
18. [QS]“அவர்கள் தண்ணீரின் மேலுள்ள நுரையாயிருக்கிறார்கள்; [QE][QS2]நாட்டில் அவர்களின் பங்கு சபிக்கப்பட்டிருப்பதினால், [QE][QS2]அவர்களுடைய திராட்சைத் தோட்டத்திற்கு ஒருவரும் போவதில்லை. [QE]
19. [QS]வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல, [QE][QS2]பாதாளமும் பாவிகளை பறித்துக்கொள்ளும். [QE]
20. [QS]அவர்களைப் பெற்றெடுத்த கர்ப்பம் அவர்களை மறந்துவிடும், [QE][QS2]புழுக்கள் அவர்களை விருந்தாக உண்ணும். [QE][QS]தீய மனிதர் இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை, [QE][QS2]மரத்தைப்போல் அவர்கள் முறிக்கப்படுகிறார்கள். [QE]
21. [QS]அவர்கள் பிள்ளையில்லாத மலடியின் சொத்தைப் பட்சிக்கிறார்கள், [QE][QS2]விதவைக்கும் இரக்கம் காட்டுவதில்லை. [QE]
22. [QS]இறைவன் தன் வல்லமையினால் வலிமையானோரை வீழ்த்துகிறார்; [QE][QS2]அவர்கள் நிலைபெற்றிருந்தாலும், வாழ்வின் நிச்சயம் அவர்களுக்கு இல்லை. [QE]
23. [QS]இறைவன் அவர்களைப் பாதுகாப்புணர்வுடன் இருக்கவிட்ட போதிலும், [QE][QS2]அவருடைய கண்களோ அவர்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றன. [QE]
24. [QS]சிறிது காலத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள், பின்பு இல்லாமல் போகிறார்கள். [QE][QS2]அவர்கள் தாழ்த்தப்பட்டு, மற்றவர்களைப் போல சேர்க்கப்படுகிறார்கள்; [QE][QS2]தானியக்கதிர்கள் வெட்டப்படுவதுபோல் வெட்டப்படுகிறார்கள். [QE][PBR]
25. [QS]“இது இப்படியில்லாவிட்டால், நான் பொய்யன் என நிரூபித்து, [QE][QS2]என் வார்த்தைகளை வீண் என்று யார் சொல்லமுடியும்?” [QE]