1. {யோபு பேசுதல்} [PS] அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது: [QBR]
2. “எவ்வளவு காலத்திற்கு என்னை வேதனைப்படுத்தி, [QBR2] வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்? [QBR]
3. இப்பொழுது பத்துமுறை நீங்கள் என்னை நிந்தித்திருக்கிறீர்கள்; [QBR2] வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசுகிறீர்கள். [QBR]
4. நான் வழி தவறியது உண்மையானால், [QBR2] என் தவறு என்னை மட்டுமே சாரும். [QBR]
5. நீங்கள் உண்மையிலேயே உங்களை எனக்கு மேலாக உயர்த்தி, [QBR2] நான் சிறுமையாக்கப்பட்டதை எனக்கு விரோதமாக உபயோகித்தாலும், [QBR]
6. இறைவனே எனக்குத் தவறிழைத்து, [QBR2] என்னைச் சுற்றி வலை வீசியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
7. “இதோ, ‘கொடுமை!’ என நான் அழுதபோதிலும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை; [QBR2] நான் கூக்குரலிட்டாலும் நீதி கிடைக்கவில்லை. [QBR]
8. நான் கடந்துசெல்லாதபடி அவர் என் வழியைத் தடைசெய்து, [QBR2] என் பாதைகளை இருளாக்கினார். [QBR]
9. அவர் என் மேன்மையை என்னைவிட்டு அகற்றி, [QBR2] மகுடத்தை என் தலையிலிருந்து எடுத்துப்போட்டார். [QBR]
10. அவர் என்னை எல்லாப் பக்கத்திலும் உடைத்து, அற்றுப்போகச் செய்கிறார்; [QBR2] அவர் என் நம்பிக்கையை ஒரு மரத்தைப்போல பிடுங்குகிறார். [QBR]
11. அவருடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது; [QBR2] என்னைத் தம் பகைவரில் ஒருவனாக எண்ணுகிறார். [QBR]
12. அவருடைய படைகள் எனக்கெதிராக அணிவகுத்து, [QBR2] அவர்கள் எனக்கு விரோதமாய் வழியை உண்டாக்கி, [QBR2] என் கூடாரத்தைச் சுற்றி முற்றுகையிடுகிறார்கள்.
13. “அவர் என் சகோதரரை என்னிடமிருந்து தூரமாக்கினார்; [QBR2] எனக்கு அறிமுகமானவர்களும் முழுவதுமாக என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள். [QBR]
14. என் உறவினர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; [QBR2] என் சிநேகிதர்கள் என்னை மறந்துவிட்டார்கள். [QBR]
15. என் விருந்தினரும், பணிப்பெண்களும் என்னை அந்நியராக எண்ணுகிறார்கள்; [QBR2] அவர்கள் என்னை அயலாராகப் பார்க்கிறார்கள். [QBR]
16. நான் என் வேலைக்காரனைக் கூப்பிட்டு, என் வாயினால் கெஞ்சினாலும், [QBR2] அவன் எனக்குப் பதிலளிப்பதில்லை. [QBR]
17. என் மூச்சு என் மனைவிக்கே அருவருப்பாயிருக்கிறது; [QBR2] நான் என் சொந்தக் குடும்பத்தினருக்கும் [*குடும்பத்தினருக்கும் அல்லது என் பிள்ளைகளுக்கும்.] , வெறுப்பானேன். [QBR]
18. சிறுவர்களும் என்னை இகழ்கிறார்கள்; [QBR2] நான் பேச எழும்போது அவர்கள் ஏளனம் செய்கிறார்கள். [QBR]
19. என் நெருங்கிய சிநேகிதர்கள் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; [QBR2] நான் நேசித்தவர்களும் எனக்கெதிரானார்கள். [QBR]
20. நான் வெறும் எலும்பும் தோலுமாயிருக்கிறேன்; [QBR2] நான் பற்களின் ஈறோடு தப்பியிருக்கிறேன்.
21. “என் சிநேகிதர்களே, இரங்குங்கள், என்மீது இரக்கம் கொள்ளுங்கள்; [QBR2] இறைவனின் கரமே என்னை அடித்திருக்கிறது. [QBR]
22. இறைவனைப் போலவே நீங்களும் ஏன் என்னைத் தொடர்ந்து துன்புறுத்துகிறீர்கள்? [QBR2] என்னை வேதனைப்படுத்தியது போதாதோ?
23. “ஆ, எனது வார்த்தைகள் எழுதப்பட்டு, [QBR2] ஒரு புத்தகச்சுருளிலே பதிவுசெய்யப்பட்டால், [QBR]
24. அவை இரும்பு ஆணியினால் ஈயத்தகட்டில் எழுதப்பட்டால், [QBR2] அல்லது என்றும் நிலைக்கும்படி, கற்பாறையில் செதுக்கப்பட்டால் நலமாயிருக்கும். [QBR]
25. என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், [QBR2] கடைசி நாளில் அவர் பூமியின்மேல் நிற்பார் என்றும் அறிவேன். [QBR]
26. என் தோல் அழிந்துபோன பின்னும், [QBR2] நான் என் உடலில் இறைவனைக் காண்பேன். [QBR]
27. நானே அவரை என் சொந்தக் கண்களால் காண்பேன்; [QBR2] வேறொருவன் அல்ல, நானே காண்பேன். [QBR2] என் உள்ளம் அதற்காக எனக்குள்ளே எவ்வளவாய் ஏங்குகிறது!
28. “ ‘இவன் கஷ்டத்திற்கான காரணம் இவனிலே இருக்கிறபடியால், [QBR2] நாம் இவனை எப்படி குற்றப்படுத்தலாம்?’ என்று நீங்கள் சொல்வீர்களானால், [QBR]
29. நீங்களே வாளுக்குப் பயப்படவேண்டும்; [QBR2] ஏனெனில், கடுங்கோபம் தண்டனையை வாளினாலேயே கொண்டுவரும். [QBR2] அப்பொழுது, நியாயத்தீர்ப்பு உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.” [PE]