தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
யோபு
1. {#1பில்தாத் பேசுதல் } [PS]அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னது: [PE]
2. [QS]“நீ எப்பொழுது இந்தப் பேச்சுக்களை நிறுத்துவாய்? [QE][QS2]நிதானமாயிரு, அப்பொழுது நாங்கள் பேசுவோம். [QE]
3. [QS]உன் பார்வையில் நாங்கள் மிருகங்களைப்போல கருதப்பட்டு [QE][QS2]மதியீனர்களாய் எண்ணப்படுவது ஏன்? [QE]
4. [QS]உன் கோபத்தில் உன்னையே காயப்படுத்துகிறவனே, [QE][QS2]உனக்காக பூமி கைவிடப்படுமோ? [QE][QS2]பாறை தன் இடத்தைவிட்டு நகருமோ? [QE][PBR]
5. [QS]“கொடியவனின் விளக்கு அணைக்கப்படுகிறது; [QE][QS2]அவனுடைய நெருப்புச் சுவாலையும் எரியாமல் போகிறது. [QE]
6. [QS]அவனுடைய கூடார வெளிச்சம் இருளாகிறது; [QE][QS2]அவனுடைய விளக்கும் அணைந்து போகிறது. [QE]
7. [QS]அவனுடைய நடையின் கம்பீரம் பலவீனமடைகிறது; [QE][QS2]அவனுடைய சுயதிட்டங்கள் அவனைக் கீழே வீழ்த்துகின்றன. [QE]
8. [QS]அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, [QE][QS2]அந்த வலையின் சிக்கலிலே நடக்கிறான். [QE]
9. [QS]பொறி அவன் குதிகாலைப் பிடிக்கிறது; [QE][QS2]கண்ணி[* கண்ணி அல்லது கொள்ளையர்கள் அவனை மேற்கொள்வார்கள். ] அவனை இறுக்கிப் பிடிக்கிறது. [QE]
10. [QS]சுருக்கு அவனுக்காகத் தரையிலும், [QE][QS2]பொறி அவன் பாதையிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. [QE]
11. [QS]எப்பக்கத்திலும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, [QE][QS2]அவன் கால்களை அலையவைக்கும். [QE]
12. [QS]பேரழிவு அவனுக்காக காத்திருக்கிறது; [QE][QS2]பெருங்கேடு அவன் விழும்போது ஆயத்தமாக இருக்கிறது. [QE]
13. [QS]வியாதி அவன் தோலைத் தின்கிறது; [QE][QS2]சாவின் முதற்பேறு அவன் அங்கங்களை விழுங்குகிறது. [QE]
14. [QS]அவன் தன் கூடாரத்தின் பாதுகாப்பிலிருந்து பிடுங்கப்பட்டு, [QE][QS2]பயங்கரங்களின் அரசனிடம் கொண்டுபோகப்படுகிறான். [QE]
15. [QS]அவனுடைய கூடாரத்தில் நெருப்பு குடியிருக்கும்; [QE][QS2]அவனுடைய உறைவிடங்களில் கந்தகம் வாரி இறைக்கப்படும். [QE]
16. [QS]கீழே அவனுடைய வேர்கள் காய்ந்து போகின்றன; [QE][QS2]மேலே அவனுடைய கிளைகள் வாடிப்போகின்றன. [QE]
17. [QS]அவனைப் பற்றிய நினைவு பூமியிலிருந்து அற்றுப்போகிறது; [QE][QS2]மண்ணில் அவனுக்குப் பெயர் இல்லாதிருக்கிறது. [QE]
18. [QS]அவன் வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் தள்ளப்படுகிறான்; [QE][QS2]உலகத்திலிருந்தும் துரத்தப்படுகிறான். [QE]
19. [QS]அவனுடைய மக்கள் மத்தியில் அவனுக்கு சந்ததிகளே இல்லை, [QE][QS2]அவன் வாழ்ந்த இடத்தில் மீதியாயிருப்பவன் ஒருவனும் இல்லை. [QE]
20. [QS]அவன் முடிவைக்கண்டு மேற்கிலுள்ளோர் நடுங்கினர்; [QE][QS2]அவன் காலத்திற்கு பின்பு வாழ்ந்த கிழக்கிலுள்ளோர் திகிலுற்றனர். [QE]
21. [QS]தீயவனின் குடியிருப்பு இத்தகையதே; [QE][QS2]இறைவனை அறியாதவனின் இருப்பிடமும் இத்தகையதே.” [QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 42
யோபு 18:26
#1பில்தாத் பேசுதல் 1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னது: 2 “நீ எப்பொழுது இந்தப் பேச்சுக்களை நிறுத்துவாய்? QS2 நிதானமாயிரு, அப்பொழுது நாங்கள் பேசுவோம். 3 உன் பார்வையில் நாங்கள் மிருகங்களைப்போல கருதப்பட்டு QS2 மதியீனர்களாய் எண்ணப்படுவது ஏன்? 4 உன் கோபத்தில் உன்னையே காயப்படுத்துகிறவனே, QS2 உனக்காக பூமி கைவிடப்படுமோ? QS2 பாறை தன் இடத்தைவிட்டு நகருமோ? PBR 5 “கொடியவனின் விளக்கு அணைக்கப்படுகிறது; QS2 அவனுடைய நெருப்புச் சுவாலையும் எரியாமல் போகிறது. 6 அவனுடைய கூடார வெளிச்சம் இருளாகிறது; QS2 அவனுடைய விளக்கும் அணைந்து போகிறது. 7 அவனுடைய நடையின் கம்பீரம் பலவீனமடைகிறது; QS2 அவனுடைய சுயதிட்டங்கள் அவனைக் கீழே வீழ்த்துகின்றன. 8 அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, QS2 அந்த வலையின் சிக்கலிலே நடக்கிறான். 9 பொறி அவன் குதிகாலைப் பிடிக்கிறது; QS2 கண்ணி* கண்ணி அல்லது கொள்ளையர்கள் அவனை மேற்கொள்வார்கள். அவனை இறுக்கிப் பிடிக்கிறது. 10 சுருக்கு அவனுக்காகத் தரையிலும், QS2 பொறி அவன் பாதையிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. 11 எப்பக்கத்திலும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, QS2 அவன் கால்களை அலையவைக்கும். 12 பேரழிவு அவனுக்காக காத்திருக்கிறது; QS2 பெருங்கேடு அவன் விழும்போது ஆயத்தமாக இருக்கிறது. 13 வியாதி அவன் தோலைத் தின்கிறது; QS2 சாவின் முதற்பேறு அவன் அங்கங்களை விழுங்குகிறது. 14 அவன் தன் கூடாரத்தின் பாதுகாப்பிலிருந்து பிடுங்கப்பட்டு, QS2 பயங்கரங்களின் அரசனிடம் கொண்டுபோகப்படுகிறான். 15 அவனுடைய கூடாரத்தில் நெருப்பு குடியிருக்கும்; QS2 அவனுடைய உறைவிடங்களில் கந்தகம் வாரி இறைக்கப்படும். 16 கீழே அவனுடைய வேர்கள் காய்ந்து போகின்றன; QS2 மேலே அவனுடைய கிளைகள் வாடிப்போகின்றன. 17 அவனைப் பற்றிய நினைவு பூமியிலிருந்து அற்றுப்போகிறது; QS2 மண்ணில் அவனுக்குப் பெயர் இல்லாதிருக்கிறது. 18 அவன் வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் தள்ளப்படுகிறான்; QS2 உலகத்திலிருந்தும் துரத்தப்படுகிறான். 19 அவனுடைய மக்கள் மத்தியில் அவனுக்கு சந்ததிகளே இல்லை, QS2 அவன் வாழ்ந்த இடத்தில் மீதியாயிருப்பவன் ஒருவனும் இல்லை. 20 அவன் முடிவைக்கண்டு மேற்கிலுள்ளோர் நடுங்கினர்; QS2 அவன் காலத்திற்கு பின்பு வாழ்ந்த கிழக்கிலுள்ளோர் திகிலுற்றனர். 21 தீயவனின் குடியிருப்பு இத்தகையதே; QS2 இறைவனை அறியாதவனின் இருப்பிடமும் இத்தகையதே.”
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 42
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References