1. {பில்தாத் பேசுதல்} [PS] அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னது: [QBR]
2. “நீ எப்பொழுது இந்தப் பேச்சுக்களை நிறுத்துவாய்? [QBR2] நிதானமாயிரு, அப்பொழுது நாங்கள் பேசுவோம். [QBR]
3. உன் பார்வையில் நாங்கள் மிருகங்களைப்போல கருதப்பட்டு [QBR2] மதியீனர்களாய் எண்ணப்படுவது ஏன்? [QBR]
4. உன் கோபத்தில் உன்னையே காயப்படுத்துகிறவனே, [QBR2] உனக்காக பூமி கைவிடப்படுமோ? [QBR2] பாறை தன் இடத்தைவிட்டு நகருமோ?
5. “கொடியவனின் விளக்கு அணைக்கப்படுகிறது; [QBR2] அவனுடைய நெருப்புச் சுவாலையும் எரியாமல் போகிறது. [QBR]
6. அவனுடைய கூடார வெளிச்சம் இருளாகிறது; [QBR2] அவனுடைய விளக்கும் அணைந்து போகிறது. [QBR]
7. அவனுடைய நடையின் கம்பீரம் பலவீனமடைகிறது; [QBR2] அவனுடைய சுயதிட்டங்கள் அவனைக் கீழே வீழ்த்துகின்றன. [QBR]
8. அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, [QBR2] அந்த வலையின் சிக்கலிலே நடக்கிறான். [QBR]
9. பொறி அவன் குதிகாலைப் பிடிக்கிறது; [QBR2] கண்ணி [*கண்ணி அல்லது கொள்ளையர்கள் அவனை மேற்கொள்வார்கள்.] அவனை இறுக்கிப் பிடிக்கிறது. [QBR]
10. சுருக்கு அவனுக்காகத் தரையிலும், [QBR2] பொறி அவன் பாதையிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. [QBR]
11. எப்பக்கத்திலும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, [QBR2] அவன் கால்களை அலையவைக்கும். [QBR]
12. பேரழிவு அவனுக்காக காத்திருக்கிறது; [QBR2] பெருங்கேடு அவன் விழும்போது ஆயத்தமாக இருக்கிறது. [QBR]
13. வியாதி அவன் தோலைத் தின்கிறது; [QBR2] சாவின் முதற்பேறு அவன் அங்கங்களை விழுங்குகிறது. [QBR]
14. அவன் தன் கூடாரத்தின் பாதுகாப்பிலிருந்து பிடுங்கப்பட்டு, [QBR2] பயங்கரங்களின் அரசனிடம் கொண்டுபோகப்படுகிறான். [QBR]
15. அவனுடைய கூடாரத்தில் நெருப்பு குடியிருக்கும்; [QBR2] அவனுடைய உறைவிடங்களில் கந்தகம் வாரி இறைக்கப்படும். [QBR]
16. கீழே அவனுடைய வேர்கள் காய்ந்து போகின்றன; [QBR2] மேலே அவனுடைய கிளைகள் வாடிப்போகின்றன. [QBR]
17. அவனைப் பற்றிய நினைவு பூமியிலிருந்து அற்றுப்போகிறது; [QBR2] மண்ணில் அவனுக்குப் பெயர் இல்லாதிருக்கிறது. [QBR]
18. அவன் வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் தள்ளப்படுகிறான்; [QBR2] உலகத்திலிருந்தும் துரத்தப்படுகிறான். [QBR]
19. அவனுடைய மக்கள் மத்தியில் அவனுக்கு சந்ததிகளே இல்லை, [QBR2] அவன் வாழ்ந்த இடத்தில் மீதியாயிருப்பவன் ஒருவனும் இல்லை. [QBR]
20. அவன் முடிவைக்கண்டு மேற்கிலுள்ளோர் நடுங்கினர்; [QBR2] அவன் காலத்திற்கு பின்பு வாழ்ந்த கிழக்கிலுள்ளோர் திகிலுற்றனர். [QBR]
21. தீயவனின் குடியிருப்பு இத்தகையதே; [QBR2] இறைவனை அறியாதவனின் இருப்பிடமும் இத்தகையதே.” [PE]