1. என் மூச்சு நின்றுபோகிறது, [QBR2] என் வாழ்நாட்கள் முடிகின்றன, [QBR2] கல்லறை எனக்குக் காத்திருக்கிறது. [QBR]
2. கேலி செய்கிறவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றனர்; [QBR2] அவர்களுடைய பகைமையே என் கண்முன் இருக்கிறது.
3. “இறைவனே, நீர் கேட்கும் பிணையை நீரே எனக்குத் தாரும். [QBR2] வேறு யார் எனக்கு அதைக் கொடுப்பார்கள்? [QBR]
4. விளங்கிக்கொள்ளாதபடி அவர்களுடைய மனதை நீர் அடைத்தீர். [QBR2] ஆகையால் அவர்களை வெற்றிகொள்ள விடமாட்டீர். [QBR]
5. தன் சொந்த நலன் கருதி சிநேகிதர்களுக்குத் துரோகம் செய்தால், [QBR2] அவருடைய பிள்ளைகளின் கண்கள் மங்கிப்போகும்.
6. “இறைவன் என்னை எல்லோருக்கும் ஒரு பழமொழியாக்கினார்; [QBR2] என்னைக் காண்போர் என் முகத்தில் துப்புகின்றனர். [QBR]
7. துயரத்தினால் என் கண்கள் மங்கிப்போயின; [QBR2] என் உடலமைப்பு ஒரு நிழலைப்போல் ஆயிற்று. [QBR]
8. நேர்மையான மனிதர் இதைக்கண்டு திகைக்கிறார்கள்; [QBR2] குற்றமற்றவர்கள் இறைவனற்றவர்களுக்கு விரோதமாக எழும்புவார்கள். [QBR]
9. ஆனாலும் நேர்மையானவர்கள் தங்கள் வழிகளில் உறுதியாய் நிற்பார்கள்; [QBR2] சுத்தமான கைகளை உடையவர்கள் வலிமை அடைவார்கள்.
10. “நீங்கள் எல்லோரும் வாருங்கள், முயன்று பாருங்கள்! [QBR2] நான் உங்களில் ஞானமுள்ள ஒருவரையும் காணவில்லை. [QBR]
11. என் நாட்கள் கடந்துபோயின; என் திட்டங்கள் சிதைந்துவிட்டன. [QBR2] என் இருதயத்தின் ஆசைகளும் அவ்வாறே சிதறிப்போயின. [QBR]
12. இந்த மனிதர் இரவைப் பகலாக மாற்றுகிறார்கள்; [QBR2] வெளிச்சம் இருளுக்கு சமீபமாயிருக்கிறது என்கிறார்கள். [QBR]
13. நான் எதிர்பார்த்திருக்கும் ஒரே வீடு பாதாளமாய் இருந்திருந்தால், [QBR2] நான் என் படுக்கையை இருளில் விரித்திருந்தால், [QBR]
14. நான் அழிவைப் பார்த்து, ‘நீ என் தகப்பன்’ என்றும், [QBR2] புழுவைப் பார்த்து, ‘நீ என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் சொல்லியிருந்தால், [QBR]
15. என் நம்பிக்கை எங்கே? [QBR2] யாராவது அதைக் கண்டுபிடிக்க முடியுமா? [QBR]
16. என் நம்பிக்கை என்னுடன் பாதாளத்திற்கு வருமோ? [QBR2] அதனுடன் நானும் ஒன்றாக தூசிக்குள் இறங்குவேனோ?” [PE]