1. {யோபு பேசுதல்} [PS] அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது: [QBR]
2. “நான் இதுபோன்ற அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்; [QBR2] நீங்கள் எல்லோரும் துன்பத்துக்குள்ளாக்கும் தேற்றரவாளர்கள்! [QBR]
3. காற்றைப்போன்ற உங்கள் வீண் வார்த்தைகளுக்கு முடிவே இல்லையா? [QBR2] உங்களை இப்படித் தொடர்ந்து பேசவைப்பது என்ன? [QBR]
4. நீங்கள் என் நிலையில் இருந்தால், [QBR2] என்னாலும் உங்களைப்போல் பேசமுடியும்; [QBR] நான் உங்களுக்கு விரோதமாய்ச் சிறந்த சொற்பொழிவாற்றி, [QBR2] உங்களுக்கு எதிரே என் தலையை ஏளனமாய் அசைக்கவும் முடியும். [QBR]
5. ஆனால் என் வாயினால் உங்களைத் தைரியப்படுத்துவேன், [QBR2] என் உதடுகளிலிருந்து வரும் ஆறுதல் உங்கள் துன்பத்தை ஆற்றும்.
6. “நான் பேசினாலும் என் துயரம் என்னைவிட்டு நீங்காது; [QBR2] பேசாவிட்டால் அது அகன்று போவதுமில்லை. [QBR]
7. இறைவனே, நீர் என்னை இளைக்கப் பண்ணிவிட்டீர்; [QBR2] என் குடும்பத்தையும் நீர் பாழாக்கிவிட்டீர். [QBR]
8. நீர் என்னை ஒடுங்கப்பண்ணினீர், அதுவே சாட்சியாகிவிட்டது; [QBR2] என் மெலிவு எனக்கு விரோதமாக எழுந்து சாட்சி கூறுகிறது. [QBR]
9. இறைவன் என்னைத் தாக்கி, தமது கோபத்தில் என்னைக் கிழித்து, [QBR2] என்னைப் பார்த்து தமது பற்களை கடிக்கிறார்; [QBR2] என் எதிரி தமது கண்களால் என்னை கூர்ந்து பார்க்கிறார். [QBR]
10. மனிதர் என்னைக் கேலிசெய்யத் தங்கள் வாய்களைத் திறக்கிறார்கள்; [QBR2] ஏளனத்துடன் என்னைக் கன்னத்தில் அறைந்து [QBR2] எனக்கு விரோதமாய் ஒன்றுகூடுகிறார்கள். [QBR]
11. இறைவன் என்னைத் தீய மனிதரிடம் ஒப்புக்கொடுத்து, [QBR2] கொடியவர்களின் பிடிக்குள் என்னை சிக்கவைத்தார். [QBR]
12. நான் நலமாய் இருந்தேன், அவர் என்னைச் சிதறடித்தார்; [QBR2] அவர் என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கினார். [QBR] அவர் என்னைத் தமது இலக்காக ஆக்கினார்; [QBR2]
13. அவருடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள். [QBR] இரக்கமின்றி, அவர் என் ஈரலைக் குத்தி [QBR2] எனது பித்தத்தை நிலத்தில் சிந்தப்பண்ணுகிறார். [QBR]
14. திரும்பத்திரும்ப அவர் என்னை நொறுக்கி, [QBR2] ஒரு போர்வீரனைப்போல் என்னைத் தாக்குகிறார்.
15. “நான் துக்கவுடையைத் தைத்து என் உடலுக்குப் போர்த்தினேன்; [QBR2] என் மேன்மையைப் தூசியில் புதைத்தேன். [QBR]
16. என் முகம் அழுகையால் சிவந்து, [QBR2] என் கண்கள் இருளடைந்தது; [QBR]
17. இருப்பினும், என் கைகள் வன்செயலுக்கு உட்படாதவை; [QBR2] என் ஜெபம் தூய்மையானது.
18. “பூமியே என் இரத்தத்தை மூடி மறைக்காதே [*மூடி மறைக்காதே அல்லது எனக்கு செய்த தவறுகளை மறைக்காதே.] ; [QBR2] என் கதறல் ஒருபோதும் ஓய்ந்து போகாதிருக்கட்டும்! [QBR]
19. இப்போதும் என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது; [QBR2] எனக்காக வழக்காடுபவர் உன்னதத்தில் இருக்கிறார். [QBR]
20. என் கண்கள் இறைவனை நோக்கிக் கண்ணீர் வடிக்கிறபோது, [QBR2] எனக்காகப் பரிந்துபேசுகிறவர் என் சிநேகிதர். [QBR]
21. ஒருவன் தன் சிநேகிதனுக்காகப் பரிந்துபேசுகிறதுபோல, [QBR2] அவரும் மனிதனுக்காக இறைவனுடன் பேசுகிறார்.
22. “நான் திரும்பி வரமுடியாத பயணத்திற்குப் போவதற்கு, [QBR2] இன்னும் சில வருடங்களே இருக்கின்றன. [PE]