1. {எலிப்பாஸ் பேசுதல்} [PS] பின்பு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது: [QBR]
2. “ஞானவான் அர்த்தமற்ற நியாயங்களைச் சொல்லி, [QBR2] கொண்டல் காற்றினால் தன் வயிற்றை நிரப்புவானோ? [QBR]
3. பயனற்ற வார்த்தைகளினாலும், [QBR2] மதிப்பற்றப் பேச்சுக்களினாலும் அவன் வாதாடுவானோ? [QBR]
4. ஆனால் நீயோ பயபக்தியை வேரறுக்கிறாய்; [QBR2] இறைவனுக்கு முன்பாக தியானத்தையும் தடைசெய்கிறாய். [QBR]
5. உன் பாவமே உன் வாயைப் பேசப்பண்ணுகிறது; [QBR2] தந்திரக்காரரின் நாவை நீ பயன்படுத்துகிறாய். [QBR]
6. என் வாயல்ல, உன் வாயே உன்னைக் குற்றவாளியாக்குகிறது; [QBR2] உன் உதடுகளே உனக்கு விரோதமாய்ச் சாட்சி கூறுகிறது.
7. “மனிதருக்குள் முதன்முதல் பிறந்தவன் நீயோ? [QBR2] மலைகளுக்கு முன்பே நீ உருவாக்கப்பட்டாயோ? [QBR]
8. நீ இறைவனுடைய ஆலோசனையைக் கேட்கிறாயோ? [QBR2] ஞானத்தை உனக்கு மட்டுமே உரிமையானதாக்கிக் கொள்கிறாயோ? [QBR]
9. நாங்கள் அறியாத எதை நீ அறிந்திருக்கிறாய்? [QBR2] நாங்கள் பெற்றிராத எந்த நுண்ணறிவை நீ பெற்றிருக்கிறாய்? [QBR]
10. தலைமுடி நரைத்தோரும், முதியோரும் எங்கள் சார்பில் இருக்கிறார்கள்; [QBR2] அவர்கள் உன் தகப்பனைவிட வயதானவர்கள். [QBR]
11. இறைவனது ஆறுதல்களும், [QBR2] அவர் தயவாக உன்னிடம் பேசிய வார்த்தைகளும் உனக்குப் போதாதோ? [QBR]
12. நீ உன் உள்ளத்து உணர்வுகளால் இழுபட்டுப் போனது ஏன்? [QBR2] உன் கண்களில் ஏன் அனல் தெறிக்கிறது? [QBR]
13. இறைவனுக்கு விரோதமாகச் சீற்றங்கொண்டு [QBR2] இவ்வாறான வார்த்தைகளை நீ பேசுவானேன்?
14. “தூய்மையானவனாய் இருப்பதற்கு மனிதன் யார்? [QBR2] பெண்ணிடத்தில் பிறந்தவன் நேர்மையுள்ளவனாயிருப்பது எப்படி? [QBR]
15. இறைவன் தமது பரிசுத்தவான்களையும் நம்புகிறதில்லை; [QBR2] வானங்களே அவருடைய பார்வைக்குத் தூய்மையற்றதாய் இருக்கிறதென்றால், [QBR]
16. தீமையைத் தண்ணீரைப்போல் குடிக்கும், [QBR2] இழிவானவனும் சீர்கெட்டவனுமாகிய மனிதனில் இறைவன் குற்றம் காணாதிருப்பாரா?
17. “நான் சொல்வதைக் கேள்; நான் உனக்கு விவரித்துச் சொல்வேன்; [QBR2] நான் கண்டதைச் சொல்லவிடு. [QBR]
18. ஞானிகள் தங்கள் முற்பிதாக்களிடமிருந்து பெற்று, [QBR2] ஒன்றையும் மறைக்காமல் அறிவித்ததைச் சொல்வேன். [QBR]
19. அந்த முற்பிதாக்கள் மத்தியில் வேறுநாட்டினர் நடமாடாதபோது, [QBR2] அவர்களுக்கு நாடு கொடுக்கப்பட்டது: [QBR]
20. கொடியவர் தன் வாழ்நாள் முழுவதும் வேதனையை அனுபவிப்பார்கள்; [QBR2] துன்பத்தின் வருடங்கள் இரக்கமற்றோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன. [QBR]
21. திகிலூட்டும் சத்தங்கள் அவன் காதுகளை நிரப்புகின்றன; [QBR2] எல்லாம் நலமாய்க் காணப்படும்போது கொள்ளைக்காரர் அவனைத் தாக்குகிறார்கள். [QBR]
22. அவன் இருளிலிருந்து தப்ப நம்பிக்கையில்லாமல் மனமுறிவடைகிறான்; [QBR2] வாளுக்கு இரையாவதற்கென்றே அவன் குறிக்கப்பட்டிருக்கிறான். [QBR]
23. அவன் கழுகைப்போல உணவு தேடி அலைகிறான்; [QBR2] இருளின் நாள் தனக்குச் சமீபித்திருக்கிறது என்பதையும் அவன் அறிவான். [QBR]
24. வேதனையும் கடுந்துயரமும் அவனைக் கலங்கச்செய்து, [QBR2] யுத்தத்திற்கு ஆயத்தமான அரசனைப்போல் அவனை மேற்கொள்கின்றன. [QBR]
25. ஏனெனில், அவன் தனது கையை இறைவனுக்கு விரோதமாக நீட்டி, [QBR2] எல்லாம் வல்லவருக்கு எதிராக இறுமாப்புடன் நடக்கிறான். [QBR]
26. அவன் தடித்த வலிமையான கேடயத்துடன், [QBR2] பணிவின்றி அவரை எதிர்த்துத் தாக்குகிறான்.
27. “அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது, [QBR2] அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது. [QBR]
28. அவன் பாழடைந்த பட்டணங்களிலும், [QBR2] கற்குவியலாக நொறுங்கி [QBR2] ஒருவரும் குடியிராத வீடுகளிலும் வாழ்வான். [QBR]
29. அவன் இனி ஒருபோதும் செல்வந்தனாவதுமில்லை; அவனுடைய செல்வமும் நிலைத்திராது, [QBR2] அவனுடைய உடைமைகளும் பூமியில் பெருகாது. [QBR]
30. அவன் இருளுக்குத் தப்புவதில்லை; [QBR2] அக்கினி ஜூவாலை அவன் தளிர்களை வாட்டும், [QBR2] இறைவனுடைய வாயின் சுவாசம் அவனை இல்லாதொழியப் பண்ணும். [QBR]
31. வீணானதை நம்பி, அவன் தன்னையே ஏமாற்றாதிருக்கட்டும்; [QBR2] அவன் பிரதிபலனைப் பெறமாட்டான். [QBR]
32. அவனுடைய வாழ்நாள் முடிவதற்கு முன்பே அவனுக்கேற்ற பலன் கொடுக்கப்படும்; [QBR2] அவனுடைய கிளைகளும் பசுமையாக இருக்காது. [QBR]
33. அவன் பழுக்கும் முன்னமே பழம் உதிர்ந்துபோன திராட்சைக் கொடியைப்போலவும், [QBR2] பூக்கள் உதிர்கின்ற ஒலிவமரத்தைப் போலவும் இருப்பான். [QBR]
34. இறைவனை மறுதலிக்கிற கூட்டத்தவர்கள் மலடாய்ப் போவார்கள்; [QBR2] இலஞ்சத்தை நாடுவோரின் கூடாரங்களை நெருப்பு பட்சிக்கும். [QBR]
35. அவர்கள் கஷ்டத்தைக் கர்ப்பந்தரித்து, தீமையைப் பெற்றெடுக்கிறார்கள், [QBR2] அவர்களுடைய கருப்பை வஞ்சனையை உருவாக்குகிறது.” [PE]