1. [QS]“பெண்ணினால் பெற்றெடுக்கப்பட்ட மனிதன் சில நாட்களே வாழ்கிறான், [QE][QS2]அவையும் கஷ்டம் நிறைந்தவையே. [QE]
2. [QS]அவன் ஒரு பூவைப்போல் பூத்து வாடிப்போகிறான்; [QE][QS2]அவன் நிழலைப்போல் நிலையற்று மறைந்துபோகிறான். [QE]
3. [QS]அப்படிப்பட்டவனை நீர் கூர்ந்து கவனிப்பீரோ? [QE][QS2]அவனை நியாயந்தீர்ப்பதற்காக உமக்கு முன்பாகக் கொண்டுவருவீரோ? [QE]
4. [QS]அசுத்தத்தில் இருந்து சுத்தத்தை உருவாக்க யாரால் முடியும்? [QE][QS2]யாராலுமே முடியாது! [QE]
5. [QS]மனிதனுடைய நாட்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன; [QE][QS2]அவனுடைய மாதங்களையும் நீரே நிர்ணயித்திருக்கிறீர், [QE][QS2]அவன் கடக்கமுடியாத எல்லைகளைக் குறித்திருக்கிறீர். [QE]
6. [QS]ஒரு கூலியாள் தன் அன்றாட வேலை முடிந்தது என்று நிம்மதியாய் இருக்கிறானே. [QE][QS2]அதுபோல் நீரும் மனிதன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும். [QE][PBR]
7. [QS]“மரத்திற்குக்கூட ஒரு எதிர்பார்ப்பு உண்டு: [QE][QS2]அது வெட்டிப்போடப்பட்டாலும் மீண்டும் தழைக்கும்; [QE][QS2]அதின் புதிய தளிர்கள் தவறாது முளைக்கும். [QE]
8. [QS]அதின் வேர் நிலத்தினடியில் பழையதாகி, [QE][QS2]அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், [QE]
9. [QS]தண்ணீர் பட்டவுடனே அது துளிர்விட்டு [QE][QS2]ஒரு செடியைப்போல் கிளைவிட்டு வளரும். [QE]
10. [QS]மனிதனோ இறந்தபின், [QE][QS2]தன் இறுதி மூச்சைவிட்டு இல்லாதொழிந்து போகிறான். [QE]
11. [QS]கடல் தண்ணீர் வற்றி, [QE][QS2]வெள்ளம் வறண்டு கிடப்பதுபோலவும் [QE]
12. [QS]மனிதன் படுத்துக்கிடக்கிறான், [QE][QS2]அவன் வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை; [QE][QS2]தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை. [QE][PBR]
13. [QS]“நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, [QE][QS2]உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து, [QE][QS]நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து, [QE][QS2]அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே! [QE]
14. [QS]ஒரு மனிதன் இறந்துபோனால் திரும்பவும் அவன் வாழ்வானோ? [QE][QS2]ஆனாலும் என் கடின உழைப்பின் நாட்களிலெல்லாம் [QE][QS2]நான் எனது விடுதலைக்காகக் காத்திருப்பேன். [QE]
15. [QS]அப்பொழுது நீர் கூப்பிடுவீர், நான் பதில் கொடுப்பேன், [QE][QS2]நீர் உமது கரங்களின் படைப்பாகிய என்மேல் வாஞ்சையாயிருப்பீர். [QE]
16. [QS]நிச்சயமாக நீர் என் காலடிகளைக் கணக்கிடுவீர்; [QE][QS2]என் பாவத்தையோ கவனத்தில் கொள்ளமாட்டீர். [QE]
17. [QS]எனது குற்றங்கள் பையில் இடப்பட்டு முத்திரையிடப்படும்; [QE][QS2]நீர் எனது பாவங்களை மூடி மறைப்பீர். [QE][PBR]
18. [QS]“ஆனால் மலை இடிந்து விழுந்து கரைவதுபோலவும், [QE][QS2]பாறை தன் இடத்தைவிட்டு நகருவதுபோலவும், [QE]
19. [QS]தண்ணீர் கற்களை அரிப்பதுபோலவும், [QE][QS2]வெள்ளம் மணலை அடித்துச்செல்வது போலவும் [QE][QS2]மனிதனின் எதிர்பார்ப்பை நீர் அழித்துப் போடுகிறீர். [QE]
20. [QS]நீர் அவனை ஒரேயடியாக மேற்கொள்கிறீர், அவன் இல்லாமல் போகிறான்; [QE][QS2]நீர் அவன் முகத்தோற்றத்தை வேறுபடுத்தி, அவனை விரட்டிவிடுகிறீர். [QE]
21. [QS]அவனுடைய மகன்கள் மேன்மையடைந்தாலும், அவன் அதை அறியான்; [QE][QS2]அவர்கள் தாழ்த்தப்பட்டாலும், அதையும் அவன் காணமாட்டான். [QE]
22. [QS]ஆனால் தன் சொந்த உடலின் நோவை மட்டுமே அறிவான், [QE][QS2]அவன் தனக்காக மாத்திரமே துக்கப்படுகிறான்.” [QE]