1. “பெண்ணினால் பெற்றெடுக்கப்பட்ட மனிதன் சில நாட்களே வாழ்கிறான், [QBR2] அவையும் கஷ்டம் நிறைந்தவையே. [QBR]
2. அவன் ஒரு பூவைப்போல் பூத்து வாடிப்போகிறான்; [QBR2] அவன் நிழலைப்போல் நிலையற்று மறைந்துபோகிறான். [QBR]
3. அப்படிப்பட்டவனை நீர் கூர்ந்து கவனிப்பீரோ? [QBR2] அவனை நியாயந்தீர்ப்பதற்காக உமக்கு முன்பாகக் கொண்டுவருவீரோ? [QBR]
4. அசுத்தத்தில் இருந்து சுத்தத்தை உருவாக்க யாரால் முடியும்? [QBR2] யாராலுமே முடியாது! [QBR]
5. மனிதனுடைய நாட்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன; [QBR2] அவனுடைய மாதங்களையும் நீரே நிர்ணயித்திருக்கிறீர், [QBR2] அவன் கடக்கமுடியாத எல்லைகளைக் குறித்திருக்கிறீர். [QBR]
6. ஒரு கூலியாள் தன் அன்றாட வேலை முடிந்தது என்று நிம்மதியாய் இருக்கிறானே. [QBR2] அதுபோல் நீரும் மனிதன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.
7. “மரத்திற்குக்கூட ஒரு எதிர்பார்ப்பு உண்டு: [QBR2] அது வெட்டிப்போடப்பட்டாலும் மீண்டும் தழைக்கும்; [QBR2] அதின் புதிய தளிர்கள் தவறாது முளைக்கும். [QBR]
8. அதின் வேர் நிலத்தினடியில் பழையதாகி, [QBR2] அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், [QBR]
9. தண்ணீர் பட்டவுடனே அது துளிர்விட்டு [QBR2] ஒரு செடியைப்போல் கிளைவிட்டு வளரும். [QBR]
10. மனிதனோ இறந்தபின், [QBR2] தன் இறுதி மூச்சைவிட்டு இல்லாதொழிந்து போகிறான். [QBR]
11. கடல் தண்ணீர் வற்றி, [QBR2] வெள்ளம் வறண்டு கிடப்பதுபோலவும் [QBR]
12. மனிதன் படுத்துக்கிடக்கிறான், [QBR2] அவன் வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை; [QBR2] தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை.
13. “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, [QBR2] உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து, [QBR] நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து, [QBR2] அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே! [QBR]
14. ஒரு மனிதன் இறந்துபோனால் திரும்பவும் அவன் வாழ்வானோ? [QBR2] ஆனாலும் என் கடின உழைப்பின் நாட்களிலெல்லாம் [QBR2] நான் எனது விடுதலைக்காகக் காத்திருப்பேன். [QBR]
15. அப்பொழுது நீர் கூப்பிடுவீர், நான் பதில் கொடுப்பேன், [QBR2] நீர் உமது கரங்களின் படைப்பாகிய என்மேல் வாஞ்சையாயிருப்பீர். [QBR]
16. நிச்சயமாக நீர் என் காலடிகளைக் கணக்கிடுவீர்; [QBR2] என் பாவத்தையோ கவனத்தில் கொள்ளமாட்டீர். [QBR]
17. எனது குற்றங்கள் பையில் இடப்பட்டு முத்திரையிடப்படும்; [QBR2] நீர் எனது பாவங்களை மூடி மறைப்பீர்.
18. “ஆனால் மலை இடிந்து விழுந்து கரைவதுபோலவும், [QBR2] பாறை தன் இடத்தைவிட்டு நகருவதுபோலவும், [QBR]
19. தண்ணீர் கற்களை அரிப்பதுபோலவும், [QBR2] வெள்ளம் மணலை அடித்துச்செல்வது போலவும் [QBR2] மனிதனின் எதிர்பார்ப்பை நீர் அழித்துப் போடுகிறீர். [QBR]
20. நீர் அவனை ஒரேயடியாக மேற்கொள்கிறீர், அவன் இல்லாமல் போகிறான்; [QBR2] நீர் அவன் முகத்தோற்றத்தை வேறுபடுத்தி, அவனை விரட்டிவிடுகிறீர். [QBR]
21. அவனுடைய மகன்கள் மேன்மையடைந்தாலும், அவன் அதை அறியான்; [QBR2] அவர்கள் தாழ்த்தப்பட்டாலும், அதையும் அவன் காணமாட்டான். [QBR]
22. ஆனால் தன் சொந்த உடலின் நோவை மட்டுமே அறிவான், [QBR2] அவன் தனக்காக மாத்திரமே துக்கப்படுகிறான்.” [PE]