1. “இவை எல்லாவற்றையும் என் கண் கண்டிருக்கின்றது, [QBR2] என் காது கேட்டு அறிந்திருக்கிறது. [QBR]
2. உங்களுக்குத் தெரிந்தவையெல்லாம் எனக்கும் தெரியும்; [QBR2] நான் உங்களைவிட தாழ்ந்தவனல்ல. [QBR]
3. ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு பேசவும், [QBR2] இறைவனோடு என் வழக்கை வாதாடவும் விரும்புகிறேன். [QBR]
4. எப்படியும் நீங்கள் என்னைப் பொய்களால் மழுப்புகிறீர்கள்; [QBR2] நீங்கள் எல்லோரும் ஒன்றுக்கும் உதவாத மருத்துவர்கள். [QBR]
5. நீங்கள் பேசாமல் மட்டும் இருப்பீர்களானால், [QBR2] அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். [QBR]
6. இப்பொழுது என் விவாதத்தைக் கேளுங்கள்; [QBR2] என் உதடுகளின் முறையிடுதலுக்குச் செவிகொடுங்கள். [QBR]
7. இறைவனின் சார்பாக கொடுமையாய்ப் பேசுவீர்களோ? [QBR2] அவருக்காக நீங்கள் வஞ்சகமாய்ப் பேசுவீர்களோ? [QBR]
8. அவருக்கு நீங்கள் பட்சபாதம் காட்டுவீர்களோ? [QBR2] இறைவனுக்காக வழக்கை வாதாடுவீர்களோ? [QBR]
9. அவர் உங்களைச் சோதித்தால், உங்களுக்கு நலமாகுமோ? [QBR2] மனிதரை ஏமாற்றுவதுபோல் அவரை ஏமாற்ற முடியமோ? [QBR]
10. நீங்கள் இரகசியமாய் பட்சபாதம் காட்டினாலும், [QBR2] அவர் நிச்சயமாக உங்களைக் கண்டிப்பார். [QBR]
11. அவருடைய மகத்துவம் உங்களுக்குத் திகிலூட்டாதோ? [QBR2] அவருடைய பயங்கரம் உங்கள்மேல் வராதோ? [QBR]
12. உங்கள் கொள்கைகள் சாம்பலை ஒத்த பழமொழிகள்; [QBR2] உங்கள் எதிர்வாதங்களும் களிமண்ணுக்கு ஒப்பானது.
13. “பேசாமல் இருங்கள், என்னைப் பேசவிடுங்கள்; [QBR2] அதின்பின் எனக்கு வருவது வரட்டும். [QBR]
14. ஏன் நான் என்னையே இடரில் மாட்டி, [QBR2] உயிரைக் கையில் பிடித்துக்கொள்ள வேண்டும். [QBR]
15. அவர் என்னைக் கொன்றாலும், நான் இன்னும் அவரிலேயே நம்பிக்கையாயிருப்பேன்; [QBR2] ஆனாலும் என் வழிகளை அவர்முன் குற்றமற்றவை என வாதாடுவேன். [QBR]
16. இது என் விடுதலைக்குக் காரணமாகும், [QBR2] இறைவனற்றவன் அவர்முன் சேரமாட்டான். [QBR]
17. நான் பேசப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்; [QBR2] நான் சொல்வதை உங்கள் செவி ஏற்றுக்கொள்ளட்டும். [QBR]
18. எனது வழக்கு ஆயத்தம், [QBR2] நான் குற்றமற்றவனென நிரூபிக்கப்படுவேன் என்பது எனக்குத் தெரியும். [QBR]
19. எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர யாரால் முடியும்? [QBR2] அப்படியானால், நான் மவுனமாயிருந்தே சாவேன்.
20. “இறைவனே, இந்த இரண்டு காரியங்களை மட்டும் கொடுத்தருளும், [QBR2] அப்பொழுது நான் உம்மிடமிருந்து மறைந்து கொள்ளமாட்டேன்: [QBR]
21. உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும், [QBR2] உமது பயங்கரங்களால் என்னைத் திகிலடையச் செய்யாதீர். [QBR]
22. அதின்பின் என்னைக் கூப்பிடும்; நான் பதில் சொல்வேன், [QBR2] அல்லது என்னைப் பேசவிட்டு நீர் பதில் கொடும். [QBR]
23. அநேக பிழைகளையும் பாவங்களையும் நான் செய்திருக்கிறேன்? [QBR2] என் குற்றத்தையும், என் பாவத்தையும் எனக்குக் காட்டும். [QBR]
24. நீர் ஏன் உமது முகத்தை மறைத்து, [QBR2] என்னை உமது பகைவனாகக் கருதுகிறீர்? [QBR]
25. காற்றில் பறக்கும் சருகை வேதனைப்படுத்துவீரோ? [QBR2] பதரைப் பின்னால் துரத்திச்செல்வீரோ? [QBR]
26. ஏனெனில் எனக்கெதிராகக் கசப்பானவற்றை நீர் எழுதுகிறீர்; [QBR2] என் வாலிப காலத்தின் பாவங்களை எனக்குப் அறுக்கச்செய்கிறீர். [QBR]
27. நீர் எனது கால்களில் விலங்குகளை மாட்டுகிறீர், [QBR2] அடிச்சுவடுகளில் அடையாளமிட்டு [QBR2] என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனிக்கிறீர்.
28. “ஆகவே அழுகிப்போன ஒன்றைப் போலவும், [QBR2] பூச்சி அரித்த உடையைப்போலவும் மனிதன் உருக்குலைந்து போகிறான். [PE]