1. [QS]“நான் என் வாழ்வை வெறுக்கிறேன்; [QE][QS2]அதினால் எனது குற்றச்சாட்டைத் தாராளமாகச் சொல்வேன், [QE][QS2]எனது ஆத்துமக் கசப்பைப் பேசுவேன். [QE]
2. [QS]நான் இறைவனிடம், நீர் என்னைக் குற்றவாளியாகத் தீர்க்காதிரும், [QE][QS2]எனக்கெதிராக என்ன குற்றச்சாட்டு உண்டு என எனக்குச் சொல்லும் எனக் கேட்பேன். [QE]
3. [QS]கொடியவர்களின் சூழ்ச்சிகளைப் புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டு, [QE][QS2]உமது கைகளினால் நீர் படைத்த [QE][QS2]என்னை ஒடுக்குவது உமக்குப் பிரியமாயிருக்கிறதோ? [QE]
4. [QS]உமக்கு மானிடக் கண்கள் உண்டோ? [QE][QS2]நீர் மனிதன் பார்ப்பதுபோல் பார்க்கிறீரோ? [QE]
5. [QS]உமது நாட்கள் மனிதனின் நாட்களைப்போலவும், [QE][QS2]உமது வருடங்கள் பலவானுடைய வருடங்களைப்போலவும் இருக்கிறதோ? [QE]
6. [QS]அதினால்தானோ நீர் எனது தவறுதல்களைத் தேடுகிறீர்? [QE][QS2]எனது பாவங்களைத் துருவி ஆராய்கிறீர்? [QE]
7. [QS]நான் குற்றமற்றவன் என்பது உமக்குத் தெரியும், [QE][QS2]உமது கையினின்று என்னை விடுவிக்க ஒருவராலும் முடியாது என்றும் தெரியும். [QE][PBR]
8. [QS]“உமது கரங்களே என்னை உருவாக்கிப் படைத்தன. [QE][QS2]இப்பொழுது திரும்பி என்னை நீர் அழிப்பீரோ? [QE]
9. [QS]களிமண்ணைப்போல நீர் என்னை உருவாக்கியதை நினைத்துக்கொள்ளும். [QE][QS2]இப்பொழுது திரும்பவும் என்னைத் தூசிக்கே போகப்பண்ணுவீரோ? [QE]
10. [QS]நீர் என்னைப் பால்போல வார்த்து [QE][QS2]வெண்ணெய்க் கட்டிபோல உறையச் செய்தீரல்லவோ? [QE]
11. [QS]தோலையும் சதையையும் எனக்கு உடுத்தி, [QE][QS2]எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை பின்னினீர் அல்லவோ? [QE]
12. [QS]நீரே எனக்கு வாழ்வு கொடுத்து, எனக்கு இரக்கம் காட்டினீர், [QE][QS2]உமது தயவினால் என் ஆவியைக் காத்திருந்தீர். [QE][PBR]
13. [QS]“ஆனாலும் நீர் உமது இருதயத்தில் மறைத்து வைத்தது இதுவே, [QE][QS2]இது உமது மனதில் இருந்தது என்பதை நான் அறிவேன். [QE]
14. [QS]நான் பாவம்செய்தால், நீர் என்னைக் கவனித்து, [QE][QS2]என் குற்றங்களைத் தண்டிக்காமல் விடமாட்டீர் என நான் அறிந்திருக்கிறேன். [QE]
15. [QS]நான் குற்றவாளியாய் இருந்தால் எனக்கு ஐயோ கேடு! [QE][QS2]நான் குற்றமற்றவனாய் இருந்தாலும் என்னால் தலைதூக்க முடியாது. [QE][QS]ஏனெனில், நான் அவமானத்தால் நிறைந்து, [QE][QS2]வேதனையில் அமிழ்ந்து போயிருக்கிறேன். [QE]
16. [QS]நான் தலைநிமிர்ந்து நின்றால், சிங்கத்தைப்போல் என்னைப் பிடித்து, [QE][QS2]திகிலூட்டும் வல்லமையைக் காண்பிக்கிறீர். [QE]
17. [QS]நீர் எனக்கெதிராக புதிய சாட்சிகளைக் கொண்டுவந்து, [QE][QS2]என்மேலுள்ள உமது கோபத்தை அதிகரிக்கிறீர், [QE][QS2]அலைமேல் அலையாக உமது படைகள் எனக்கு விரோதமாய் வருகின்றன. [QE][PBR]
18. [QS]“அப்படியானால் ஏன் என்னைக் கர்ப்பத்தில் இருந்து வெளியே கொண்டுவந்தீர்? [QE][QS2]யாரும் என்னைப் பார்க்குமுன் நான் இறந்திருக்கலாமே. [QE]
19. [QS]நான் உருவாகாமலேயே இருந்திருக்கலாம்; [QE][QS2]கருவறையிலிருந்து கல்லறைக்கே போயிருக்கலாம்! [QE]
20. [QS]என் வாழ்நாட்கள் முடிகிறது, [QE][QS2]நான் மகிழ்ந்திருக்கும்படி சில மணித்துளிகள் நீர் விலகியிரும். [QE]
21. [QS]பின்னர், மந்தாரமும் மரண இருளும் சூழ்ந்த, [QE][QS2]போனால் திரும்பி வரமுடியாத நாட்டிற்குப் போவேன். [QE]
22. [QS]மரண இருள்சூழ்ந்த அந்நாட்டில் ஒழுங்கில்லை, [QE][QS2]ஒளியும் இருளாய்த் தோன்றும்.” [QE]