1. {எருசலேமின் முற்றுகை} [PS] “பென்யமீன் மக்களே, பாதுகாப்புக்காக தப்பி ஓடுங்கள். [QBR2] எருசலேமைவிட்டுத் தப்பி ஓடுங்கள்! [QBR] தெக்கோவாவில் எக்காளத்தை ஊதுங்கள்! [QBR2] பெத்கேரேமில் சைகை காட்டுங்கள்! [QBR] ஏனெனில் ஒரு பேராபத்து வடக்கிலிருந்து வருகிறது. [QBR2] அது பயங்கர பேரழிவாய் வருகிறது. [QBR]
2. அழகும் மென்மையுமுள்ள [QBR2] சீயோன் மகளை நான் அழிப்பேன். [QBR]
3. மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு அவளுக்கெதிராக வருவார்கள். [QBR2] அவளைச் சுற்றித் தங்கள் கூடாரங்களை அடித்து, [QBR2] அவனவன் தான் தெரிந்துகொண்ட பகுதியில் தன் மந்தைகளை மேய்ப்பான்.”
4. “அவளுக்கெதிராக ஒரு யுத்தத்தை ஆயத்தப்படுத்துங்கள், [QBR2] எழுந்திருங்கள், நண்பகலில் தாக்குவோம். [QBR] ஆனால் ஐயோ! பகல் வெளிச்சம் மங்குகிறது. [QBR2] அந்திப்பொழுதும் சாய்கிறது. [QBR]
5. ஆகவே எழும்புங்கள். [QBR2] நாம் இரவில் தாக்கி அவளுடைய கோட்டைகளை அழிப்போம்.” [PE][PS]
6. சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: [QBR] “மரங்களை வெட்டி வீழ்த்தி [QBR2] எருசலேமிற்கு எதிராக முற்றுகைக் கொத்தளங்களைக் கட்டுங்கள். [QBR] இந்தப் பட்டணம் தண்டிக்கப்பட வேண்டும்; [QBR2] அது அடக்கு முறையால் நிறைந்திருக்கிறது. [QBR]
7. ஊற்றிலிருந்து தண்ணீர் சுரப்பதுபோல, [QBR2] அவளிலிருந்து கொடுமை சுரந்துகொண்டே இருக்கிறது. [QBR] வன்செயலும், அழிவுமே அப்பட்டணத்தின் வீதிகளில் எதிரொலிக்கின்றன; [QBR2] அவளுடைய நோய்களும், காயங்களும் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கின்றன. [QBR]
8. எருசலேமே, இந்த எச்சரிப்பைக் கவனி. [QBR2] இல்லாவிட்டால் நான் உன்னைவிட்டுப் போய்விடுவேன், [QBR] ஒருவரும் அதில் குடியிருக்கமாட்டார்கள். [QBR2] அப்பொழுது உன் நாடு பாழாகும்.” [PE][PS]
9. சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: [QBR] “திராட்சைக்கொடிகளில் பறிக்காமல் விடப்பட்ட பழங்களை திரும்ப சேர்த்தெடுப்பதுபோல், [QBR2] இஸ்ரயேலில் மீதியாயிருப்பவர்களை சேர்த்தெடுங்கள். [QBR] திராட்சைப் பழங்களைச் சேர்க்கிறவனைப்போல, [QBR2] திரும்பவும் கிளைகளுக்கு இடையில் உனது கையைப் போடு.”
10. நான் யாரோடு பேசி எச்சரிக்கை கொடுப்பேன்? [QBR2] யார் எனக்குச் செவிகொடுப்பான்? [QBR] கேட்க முடியாதபடி அவர்களின் [QBR2] காதுகள் மூடப்பட்டிருக்கின்றன [*மூடப்பட்டிருக்கின்றன மூல மொழியில் விருத்தசேதனமில்லாமல் என உள்ளது.] . [QBR] யெகோவாவின் வார்த்தை அவர்களுக்கு வெறுப்பாயிருக்கிறது. [QBR2] அதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்ளவில்லை. [QBR]
11. நான் யெகோவாவினுடைய கடுங்கோபத்தினால் நிறைந்திருக்கிறேன், [QBR2] என்னால் அதை அடக்கிக்கொண்டிருக்க முடியாது. “அதை வீதிகளில் இருக்கும் பிள்ளைகள் மேலும், [QBR2] ஒன்று கூடியிருக்கும் இளைஞர் மேலும் ஊற்றிவிடு; [QBR] கணவனும் மனைவியும் முதியவர்களும் வயது சென்றவர்களுங்கூட [QBR2] அதில் அகப்படுவார்கள். [QBR]
12. அவர்களுடைய வீடுகளும் வயல்களும் மற்றவர்களுக்குச் சொந்தமாகும். [QBR2] மனைவிகளுங்கூட மற்றவர்களுக்குச் சொந்தமாவார்கள். [QBR] நாட்டில் குடியிருப்பவர்களுக்கு எதிராக [QBR2] நான் என்னுடைய கையை நீட்டும்போது, இது நிகழும்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR]
13. ஏனெனில், “தாழ்ந்தோர்முதல் உயர்ந்தோர்வரை, [QBR2] எல்லோரும் அநியாய இலாபம் பெற பேராசைப்படுகிறார்கள். [QBR] இறைவாக்கினர்முதல் ஆசாரியர்வரை அனைவரும் [QBR2] ஒருமித்து வஞ்சனையே செய்கிறார்கள். [QBR]
14. என் மக்களின் கடுமையான காயத்தை, [QBR2] கடுமையற்றதைப்போல் மருந்திட்டுக் கட்டுகிறார்கள். [QBR] சமாதானம், சமாதானம் என்று சொல்கிறார்கள், [QBR2] ஆனால் சமாதானமோ அங்கே இல்லை. [QBR]
15. அவர்கள் தங்களுடைய அருவருக்கத்தக்க நடத்தையைக் குறித்து [QBR2] வெட்கப்படுகிறார்களா? [QBR] இல்லை, அவர்களுக்குச் சிறிதளவும் வெட்கம் இல்லை; [QBR2] நாணங்கொள்ளவும் அவர்கள் அறியார்கள். [QBR] ஆதலால் அவர்கள் விழுந்தவர்கள் மத்தியில் விழுவார்கள்; [QBR2] நான் அவர்களைத் தண்டிக்கும்போது, தள்ளுண்டு போவார்கள்” [QBR2] என்று யெகோவா சொல்கிறார். [PE][PS]
16. யெகோவா சொல்வது இதுவே: [QBR] “வழியின் நாற்சந்திகளில் நின்று பாருங்கள். [QBR2] முன்னோர்களின் வழிகளைக் கேட்டு விசாரியுங்கள். [QBR] நன்மையான வழி எங்கே என்று கேட்டு அதிலே நடவுங்கள். [QBR2] அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு ஆறுதல் கிடைக்கும். [QBR2] ஆனால் நீங்களோ, ‘நாங்கள் அதில் நடக்கமாட்டோம்’ என்றீர்கள். [QBR]
17. நான் உங்கள்மேல் காவற்காரரை நியமித்து, [QBR2] ‘எக்காள சத்தத்தைக் கவனித்துக் கேளுங்கள்!’ என்று சொன்னேன். [QBR2] ஆனால் நீங்களோ, ‘நாங்கள் அதைக் கேட்க மாட்டோம்’ என்றீர்கள். [QBR]
18. ஆகையால் நாடுகளே! கேளுங்கள்; [QBR2] கூடியிருப்போரே! அவர்களுக்கு [QBR2] என்ன நடக்கப்போகிறது என்பதைக் கவனியுங்கள். [QBR]
19. பூமியே கேள்: [QBR2] இந்த மக்கள்மேல் பேராபத்தைக் கொண்டுவரப் போகிறேன். [QBR2] அவர்களுடைய சதித்திட்டங்களின் பலனே இது. [QBR] அவர்கள் என் வார்த்தைகளைக் கவனித்துக் கேட்கவில்லை. [QBR2] என் சட்டத்தையும் புறக்கணித்துவிட்டார்கள். [QBR]
20. சேபாவிலிருந்து வரும் தூபவர்க்கமும், [QBR2] தூரதேசத்திலிருந்து வரும் நறுமணப் பொருட்களும் எனக்கு எதற்கு? [QBR] உங்கள் தகனபலிகள் எனக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல; [QBR2] உங்கள் பலிகளும் என்னை மகிழ்விப்பதில்லை.” [PE][PS]
21. ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: [QBR] “நான் இந்த மக்களுக்கு முன்பாக தடைகளை வைப்பேன். [QBR2] தந்தையரும், மகன்களும் அவைகளின்மேல் இடறி விழுவார்கள்; [QBR2] அயலவரும், சிநேகிதரும் அழிந்துபோவார்கள்.” [PE][PS]
22. யெகோவா சொல்வது இதுவே: [QBR] “பாருங்கள்! வடதிசை நாட்டிலிருந்து [QBR2] ஒரு படை வருகிறது. [QBR] ஒரு பெரிய நாடு [QBR2] பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து எழும்புகிறது. [QBR]
23. அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்; [QBR2] அவர்கள் இரக்கமற்ற கொடியவர்கள். [QBR] அவர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்யும்போது அவர்களின் சத்தம், [QBR] இரைகிற கடலைப் போலிருக்கிறது; [QBR2] சீயோன் மகளே! அவர்கள் போருக்கு அணிவகுத்த மனிதரைப்போல் [QBR2] உன்னைத் தாக்க வருகிறார்கள்.”
24. அவர்களைப்பற்றிய செய்தியை நாங்கள் கேள்விப்பட்டோம்; [QBR2] எங்கள் கைகள் தளர்ந்து செயலிழந்தன. [QBR] பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணைப்போல [QBR2] பயமும் வேதனையும் எங்களைப் பற்றிக்கொண்டது. [QBR]
25. வயல்வெளி இடங்களுக்குப் போகவோ [QBR2] வீதிகளில் நடக்கவோ வேண்டாம். [QBR] ஏனெனில் பகைவன் வாளை வைத்திருக்கிறான். [QBR2] நாற்புறமும் பயங்கரம் இருக்கிறது. [QBR]
26. என் மக்களே, நீங்கள் துக்கவுடை உடுத்தி, [QBR2] சாம்பலில் புரளுங்கள்; [QBR] ஒரே மகனுக்காக மனங்கசந்து [QBR2] அழுவதைப்போல் துக்கப்படுங்கள். [QBR] ஏனெனில் அழிக்கிறவன் [QBR2] நம்மேல் திடீரென வருவான்.
27. “எரேமியாவே! உன்னை உலோகங்களைப் பரிசோதிப்பவனாகவும், [QBR2] என் மக்களை உலோகத் துகள்களாகவும் ஆக்கினேன். [QBR] நீயே என் மக்களுடைய வழிகளைக் கவனித்து, [QBR2] பரிசோதித்துப் பார்க்கவேண்டும். [QBR]
28. அவர்கள் யாவரும் மனக்கடினமுள்ள கலகக்காரர். [QBR2] தூற்றுவதற்காக சுற்றித் திரிகிறார்கள். [QBR] அவர்கள் வெண்கலமும் இரும்புமே; [QBR2] அவர்கள் எல்லோரும் சீர்கேடாய் நடக்கிறார்கள். [QBR]
29. நெருப்பினால் ஈயத்தை எரித்துப்போடுவதற்கு [QBR2] உலைத்துருத்தி பயங்கரமான காற்றை ஊதுகிறது; [QBR] ஆனால் புடமிடுதல் பலனின்றி வீணாய்ப் போகிறது. [QBR2] கொடுமை அவர்களிடமிருந்து அகற்றப்படவில்லை. [QBR]
30. அவர்கள் புறக்கணித்து விடப்பட்ட வெள்ளி என அழைக்கப்படுகிறார்கள். [QBR2] ஏனெனில் யெகோவா அவர்களைப் புறக்கணித்துவிட்டார்.” [PE]