1. {#1எருசலேமின் முற்றுகை } [QS]“பென்யமீன் மக்களே, பாதுகாப்புக்காக தப்பி ஓடுங்கள். [QE][QS2]எருசலேமைவிட்டுத் தப்பி ஓடுங்கள்! [QE][QS]தெக்கோவாவில் எக்காளத்தை ஊதுங்கள்! [QE][QS2]பெத்கேரேமில் சைகை காட்டுங்கள்! [QE][QS]ஏனெனில் ஒரு பேராபத்து வடக்கிலிருந்து வருகிறது. [QE][QS2]அது பயங்கர பேரழிவாய் வருகிறது. [QE]
2. [QS]அழகும் மென்மையுமுள்ள [QE][QS2]சீயோன் மகளை நான் அழிப்பேன். [QE]
3. [QS]மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு அவளுக்கெதிராக வருவார்கள். [QE][QS2]அவளைச் சுற்றித் தங்கள் கூடாரங்களை அடித்து, [QE][QS2]அவனவன் தான் தெரிந்துகொண்ட பகுதியில் தன் மந்தைகளை மேய்ப்பான்.” [QE][PBR]
4. [QS]“அவளுக்கெதிராக ஒரு யுத்தத்தை ஆயத்தப்படுத்துங்கள், [QE][QS2]எழுந்திருங்கள், நண்பகலில் தாக்குவோம். [QE][QS]ஆனால் ஐயோ! பகல் வெளிச்சம் மங்குகிறது. [QE][QS2]அந்திப்பொழுதும் சாய்கிறது. [QE]
5. [QS]ஆகவே எழும்புங்கள். [QE][QS2]நாம் இரவில் தாக்கி அவளுடைய கோட்டைகளை அழிப்போம்.” [QE]
6. [PS]சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“மரங்களை வெட்டி வீழ்த்தி [QE][QS2]எருசலேமிற்கு எதிராக முற்றுகைக் கொத்தளங்களைக் கட்டுங்கள். [QE][QS]இந்தப் பட்டணம் தண்டிக்கப்பட வேண்டும்; [QE][QS2]அது அடக்கு முறையால் நிறைந்திருக்கிறது. [QE]
7. [QS]ஊற்றிலிருந்து தண்ணீர் சுரப்பதுபோல, [QE][QS2]அவளிலிருந்து கொடுமை சுரந்துகொண்டே இருக்கிறது. [QE][QS]வன்செயலும், அழிவுமே அப்பட்டணத்தின் வீதிகளில் எதிரொலிக்கின்றன; [QE][QS2]அவளுடைய நோய்களும், காயங்களும் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கின்றன. [QE]
8. [QS]எருசலேமே, இந்த எச்சரிப்பைக் கவனி. [QE][QS2]இல்லாவிட்டால் நான் உன்னைவிட்டுப் போய்விடுவேன், [QE][QS]ஒருவரும் அதில் குடியிருக்கமாட்டார்கள். [QE][QS2]அப்பொழுது உன் நாடு பாழாகும்.” [QE]
9. [PS]சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“திராட்சைக்கொடிகளில் பறிக்காமல் விடப்பட்ட பழங்களை திரும்ப சேர்த்தெடுப்பதுபோல், [QE][QS2]இஸ்ரயேலில் மீதியாயிருப்பவர்களை சேர்த்தெடுங்கள். [QE][QS]திராட்சைப் பழங்களைச் சேர்க்கிறவனைப்போல, [QE][QS2]திரும்பவும் கிளைகளுக்கு இடையில் உனது கையைப் போடு.” [QE][PBR]
10. [QS]நான் யாரோடு பேசி எச்சரிக்கை கொடுப்பேன்? [QE][QS2]யார் எனக்குச் செவிகொடுப்பான்? [QE][QS]கேட்க முடியாதபடி அவர்களின் [QE][QS2]காதுகள் மூடப்பட்டிருக்கின்றன[* மூடப்பட்டிருக்கின்றன மூல மொழியில் விருத்தசேதனமில்லாமல் என உள்ளது. ]. [QE][QS]யெகோவாவின் வார்த்தை அவர்களுக்கு வெறுப்பாயிருக்கிறது. [QE][QS2]அதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்ளவில்லை. [QE]
11. [QS]நான் யெகோவாவினுடைய கடுங்கோபத்தினால் நிறைந்திருக்கிறேன், [QE][QS2]என்னால் அதை அடக்கிக்கொண்டிருக்க முடியாது. [QE][PBR] [QS]“அதை வீதிகளில் இருக்கும் பிள்ளைகள் மேலும், [QE][QS2]ஒன்று கூடியிருக்கும் இளைஞர் மேலும் ஊற்றிவிடு; [QE][QS]கணவனும் மனைவியும் முதியவர்களும் வயது சென்றவர்களுங்கூட [QE][QS2]அதில் அகப்படுவார்கள். [QE]
12. [QS]அவர்களுடைய வீடுகளும் வயல்களும் மற்றவர்களுக்குச் சொந்தமாகும். [QE][QS2]மனைவிகளுங்கூட மற்றவர்களுக்குச் சொந்தமாவார்கள். [QE][QS]நாட்டில் குடியிருப்பவர்களுக்கு எதிராக [QE][QS2]நான் என்னுடைய கையை நீட்டும்போது, இது நிகழும்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]
13. [QS]ஏனெனில், “தாழ்ந்தோர்முதல் உயர்ந்தோர்வரை, [QE][QS2]எல்லோரும் அநியாய இலாபம் பெற பேராசைப்படுகிறார்கள். [QE][QS]இறைவாக்கினர்முதல் ஆசாரியர்வரை அனைவரும் [QE][QS2]ஒருமித்து வஞ்சனையே செய்கிறார்கள். [QE]
14. [QS]என் மக்களின் கடுமையான காயத்தை, [QE][QS2]கடுமையற்றதைப்போல் மருந்திட்டுக் கட்டுகிறார்கள். [QE][QS]சமாதானம், சமாதானம் என்று சொல்கிறார்கள், [QE][QS2]ஆனால் சமாதானமோ அங்கே இல்லை. [QE]
15. [QS]அவர்கள் தங்களுடைய அருவருக்கத்தக்க நடத்தையைக் குறித்து [QE][QS2]வெட்கப்படுகிறார்களா? [QE][QS]இல்லை, அவர்களுக்குச் சிறிதளவும் வெட்கம் இல்லை; [QE][QS2]நாணங்கொள்ளவும் அவர்கள் அறியார்கள். [QE][QS]ஆதலால் அவர்கள் விழுந்தவர்கள் மத்தியில் விழுவார்கள்; [QE][QS2]நான் அவர்களைத் தண்டிக்கும்போது, தள்ளுண்டு போவார்கள்” [QE][QS2]என்று யெகோவா சொல்கிறார். [QE]
16. [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“வழியின் நாற்சந்திகளில் நின்று பாருங்கள். [QE][QS2]முன்னோர்களின் வழிகளைக் கேட்டு விசாரியுங்கள். [QE][QS]நன்மையான வழி எங்கே என்று கேட்டு அதிலே நடவுங்கள். [QE][QS2]அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு ஆறுதல் கிடைக்கும். [QE][QS2]ஆனால் நீங்களோ, ‘நாங்கள் அதில் நடக்கமாட்டோம்’ என்றீர்கள். [QE]
17. [QS]நான் உங்கள்மேல் காவற்காரரை நியமித்து, [QE][QS2]‘எக்காள சத்தத்தைக் கவனித்துக் கேளுங்கள்!’ என்று சொன்னேன். [QE][QS2]ஆனால் நீங்களோ, ‘நாங்கள் அதைக் கேட்க மாட்டோம்’ என்றீர்கள். [QE]
18. [QS]ஆகையால் நாடுகளே! கேளுங்கள்; [QE][QS2]கூடியிருப்போரே! அவர்களுக்கு [QE][QS2]என்ன நடக்கப்போகிறது என்பதைக் கவனியுங்கள். [QE]
19. [QS]பூமியே கேள்: [QE][QS2]இந்த மக்கள்மேல் பேராபத்தைக் கொண்டுவரப் போகிறேன். [QE][QS2]அவர்களுடைய சதித்திட்டங்களின் பலனே இது. [QE][QS]அவர்கள் என் வார்த்தைகளைக் கவனித்துக் கேட்கவில்லை. [QE][QS2]என் சட்டத்தையும் புறக்கணித்துவிட்டார்கள். [QE]
20. [QS]சேபாவிலிருந்து வரும் தூபவர்க்கமும், [QE][QS2]தூரதேசத்திலிருந்து வரும் நறுமணப் பொருட்களும் எனக்கு எதற்கு? [QE][QS]உங்கள் தகனபலிகள் எனக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல; [QE][QS2]உங்கள் பலிகளும் என்னை மகிழ்விப்பதில்லை.” [QE]
21. [PS]ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“நான் இந்த மக்களுக்கு முன்பாக தடைகளை வைப்பேன். [QE][QS2]தந்தையரும், மகன்களும் அவைகளின்மேல் இடறி விழுவார்கள்; [QE][QS2]அயலவரும், சிநேகிதரும் அழிந்துபோவார்கள்.” [QE]
22. [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“பாருங்கள்! வடதிசை நாட்டிலிருந்து [QE][QS2]ஒரு படை வருகிறது. [QE][QS]ஒரு பெரிய நாடு [QE][QS2]பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து எழும்புகிறது. [QE]
23. [QS]அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்; [QE][QS2]அவர்கள் இரக்கமற்ற கொடியவர்கள். [QE][QS]அவர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்யும்போது அவர்களின் சத்தம், [QE][QS]இரைகிற கடலைப் போலிருக்கிறது; [QE][QS2]சீயோன் மகளே! அவர்கள் போருக்கு அணிவகுத்த மனிதரைப்போல் [QE][QS2]உன்னைத் தாக்க வருகிறார்கள்.” [QE][PBR]
24. [QS]அவர்களைப்பற்றிய செய்தியை நாங்கள் கேள்விப்பட்டோம்; [QE][QS2]எங்கள் கைகள் தளர்ந்து செயலிழந்தன. [QE][QS]பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணைப்போல [QE][QS2]பயமும் வேதனையும் எங்களைப் பற்றிக்கொண்டது. [QE]
25. [QS]வயல்வெளி இடங்களுக்குப் போகவோ [QE][QS2]வீதிகளில் நடக்கவோ வேண்டாம். [QE][QS]ஏனெனில் பகைவன் வாளை வைத்திருக்கிறான். [QE][QS2]நாற்புறமும் பயங்கரம் இருக்கிறது. [QE]
26. [QS]என் மக்களே, நீங்கள் துக்கவுடை உடுத்தி, [QE][QS2]சாம்பலில் புரளுங்கள்; [QE][QS]ஒரே மகனுக்காக மனங்கசந்து [QE][QS2]அழுவதைப்போல் துக்கப்படுங்கள். [QE][QS]ஏனெனில் அழிக்கிறவன் [QE][QS2]நம்மேல் திடீரென வருவான். [QE][PBR]
27. [QS]“எரேமியாவே! உன்னை உலோகங்களைப் பரிசோதிப்பவனாகவும், [QE][QS2]என் மக்களை உலோகத் துகள்களாகவும் ஆக்கினேன். [QE][QS]நீயே என் மக்களுடைய வழிகளைக் கவனித்து, [QE][QS2]பரிசோதித்துப் பார்க்கவேண்டும். [QE]
28. [QS]அவர்கள் யாவரும் மனக்கடினமுள்ள கலகக்காரர். [QE][QS2]தூற்றுவதற்காக சுற்றித் திரிகிறார்கள். [QE][QS]அவர்கள் வெண்கலமும் இரும்புமே; [QE][QS2]அவர்கள் எல்லோரும் சீர்கேடாய் நடக்கிறார்கள். [QE]
29. [QS]நெருப்பினால் ஈயத்தை எரித்துப்போடுவதற்கு [QE][QS2]உலைத்துருத்தி பயங்கரமான காற்றை ஊதுகிறது; [QE][QS]ஆனால் புடமிடுதல் பலனின்றி வீணாய்ப் போகிறது. [QE][QS2]கொடுமை அவர்களிடமிருந்து அகற்றப்படவில்லை. [QE]
30. [QS]அவர்கள் புறக்கணித்து விடப்பட்ட வெள்ளி என அழைக்கப்படுகிறார்கள். [QE][QS2]ஏனெனில் யெகோவா அவர்களைப் புறக்கணித்துவிட்டார்.” [QE]