1. {பாபிலோனைப் பற்றிய செய்தி} [PS] [*பாபிலோனியர்கள் கல்தேயர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள்] பாபிலோனியரைக் குறித்தும், பாபிலோன் நாட்டைக் குறித்தும் இறைவாக்கினன் எரேமியா மூலம் யெகோவா கூறிய வார்த்தை இதுவே: [QBR]
2. “அறிவியுங்கள், நாடுகளின் மத்தியில் பிரசித்தப்படுத்துங்கள். [QBR2] கொடியை உயர்த்தி பிரசித்தப்படுத்துங்கள். [QBR2] ஒன்றையும் மறைக்காமல் நீங்கள் சொல்லவேண்டியதாவது: [QBR] ‘பாபிலோன் கைப்பற்றப்படும். [QBR2] பேல் தெய்வம் வெட்கத்திற்குள்ளாக்கப்படும், [QBR2] மெரொதாக் தெய்வம் பயங்கரத்தினால் நிரப்பப்படும். [QBR] பாபிலோனின் உருவச்சிலைகள் வெட்கத்துக்குள்ளாகும். [QBR2] அவளுடைய விக்கிரகங்களும் பயங்கரத்தினால் நிரப்பப்படும்.’ [QBR]
3. வடக்கிலிருந்து ஓர் தேசம் வந்து, [QBR2] அதைத் தாக்கி அதன் நாட்டைப் பாழாக்கும். [QBR] ஒருவனும் அதில் வாழமாட்டான். [QBR2] மனிதரும் மிருகங்களும் தப்பி ஓடிவிடுவார்கள்.
4. “அந்த நாட்களிலும், அந்தக் காலத்திலும் இஸ்ரயேல் மக்களும், [QBR] யூதா மக்களும் ஒன்றுசேர்ந்து, தங்கள் இறைவனாகிய யெகோவாவைத் தேடுவதற்குக் [QBR2] கண்ணீருடன் போவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR]
5. “சீயோனுக்குப் போகும் வழியைக் கேட்டு [QBR2] அதை நோக்கி தங்கள் முகங்களைத் திருப்புவார்கள். [QBR] அவர்கள் அங்கே வந்து மறக்கப்படாத [QBR2] ஒரு நித்திய உடன்படிக்கையினால் [QBR2] தங்களை யெகோவாவுடன் இணைத்துக்கொள்வார்கள்.
6. “என் மக்கள் காணாமற்போன செம்மறியாடுகளாய் இருக்கிறார்கள். [QBR2] அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைத் தவறாய் வழிநடத்தி, [QBR2] மலைகளில் அலைந்து திரியப் பண்ணினார்கள். [QBR] அவர்கள் மலையின்மேலும் குன்றின்மேலும் அலைந்து திரிந்து, [QBR2] தங்கள் இளைப்பாறும் சொந்த இடத்தை மறந்துவிட்டார்கள். [QBR]
7. அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் அவர்களை விழுங்கிப் போட்டார்கள். [QBR2] அவர்களுடைய பகைவர்களோ, ‘நாங்கள் குற்றமற்றவர்கள்; [QBR] ஏனெனில் அவர்கள் தங்கள் உண்மையான மேய்ச்சலிடமான [QBR2] யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். [QBR] தங்கள் முற்பிதாக்கள் நம்பியிருந்த யெகோவாவுக்கு [QBR2] விரோதமாகவே பாவம் செய்தார்கள்’ என்றார்கள்.
8. “பாபிலோனைவிட்டுத் தப்பி ஓடுங்கள், [QBR2] பாபிலோனியரின் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்; [QBR2] மந்தைக்கு முன்செல்லும் வெள்ளாடுகளைப்போல் இருங்கள். [QBR]
9. ஏனெனில் நான் வடதிசை நாட்டிலிருந்து பெரிய தேசத்தாரின் [QBR2] ஒரு கூட்டத்தைப் பாபிலோனுக்கு விரோதமாகத் தூண்டி, எழுப்பிக் கொண்டுவருவேன். [QBR] அவர்கள் அதற்கு விரோதமாக அணிவகுத்து வருவார்கள். [QBR2] வடக்கிலிருந்து அது சிறைப்பிடிக்கப்படும். [QBR] அவர்களுடைய அம்புகள் வெறுங்கையுடன் [QBR2] திரும்பிவராத திறமைவாய்ந்த போர் வீரரைப்போல் இருக்கும். [QBR]
10. பாபிலோன் சூறையாடப்படும். [QBR2] அதைச் சூறையாடுபவர்கள் யாவரும் நிறைவாகப் பெற்றுக்கொள்வார்கள்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார்.
11. என் உரிமைச்சொத்தாகிய என் மக்களை கொள்ளையிடுகிற பாபிலோனியரே! [QBR2] நீங்கள் மகிழ்ந்து சந்தோஷப்படுகிறீர்கள். [QBR] சூடுமிதிக்கும் இளம் பசுவைப்போல் துள்ளிக் குதிக்கிறீர்கள்; [QBR2] ஆண் குதிரைகளைப்போல் கனைக்கிறீர்கள். [QBR]
12. ஆனால், உங்கள் தாய் அதிக வெட்கத்துக்குள்ளாவாள். [QBR2] உங்களைப் பெற்றவள் அவமானப்படுவாள். [QBR] அவள் நாடுகளுக்குள் மிகச் சிறியவளாயும், [QBR2] வனாந்திரமாயும், வறண்ட நிலமாயும், பாலைவனமாயும் இருப்பாள். [QBR]
13. அந்த நாடு, யெகோவாவின் கோபத்தினால், [QBR2] இனி குடியேற்றப்படாமல், முற்றிலும் கைவிடப்பட்டிருக்கும். [QBR] பாபிலோனைக் கடந்து போகிறவர்கள் அதிர்ச்சியடைந்து [QBR2] அதற்கு நேரிட்டவைகளைப் பார்த்துக் கேலி செய்வார்கள்.
14. வில் பிடிக்கிறவர்களே! நீங்கள் யாவரும் பாபிலோனைச் சுற்றி நிலைகொள்ளுங்கள். [QBR2] ஒரு அம்பையேனும் விட்டுவைக்காமல் [QBR] எல்லாவற்றையும் அவள்மேல் எய்திடுங்கள். [QBR2] ஏனெனில் அவள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறாள். [QBR]
15. எல்லாப் பக்கங்களிலுமிருந்து அவளுக்கு விரோதமாகச் சத்தமிடுங்கள். [QBR2] அவள் சரணடைகிறாள். அவளது கோபுரங்கள் விழுகின்றன. [QBR2] மதில்கள் இடித்து வீழ்த்தப்படுகின்றன. [QBR] இது யெகோவாவின் பழிவாங்குதல். [QBR2] ஆதலால் அவளிடத்தில் பழிவாங்குங்கள். [QBR2] அவள் மற்றவர்களுக்குச் செய்ததுபோலவே, அவளுக்கும் செய்யுங்கள். [QBR]
16. விதைப்பவனை பாபிலோனிலிருந்து வெட்டிப்போடுங்கள். [QBR2] அறுப்புக் காலத்தில் அறுப்பவனை அவனுடைய அரிவாளுடன் வெட்டிப்போடுங்கள். [QBR] ஒடுக்குகிறவனுடைய வாளின் நிமித்தம் ஒவ்வொருவனும் [QBR2] தன் சொந்த மக்களிடம் திரும்பிப் போகட்டும், [QBR2] ஒவ்வொருவனும் தன் சொந்த நாட்டிற்குத் தப்பியோடட்டும்.
17. இஸ்ரயேல் சிங்கங்களால் துரத்துண்டு [QBR2] சிதறுகிற ஆட்டைப்போல் இருக்கிறது. [QBR] முதலில் அசீரிய அரசனே [QBR2] அதை விழுங்கியவன். [QBR] கடைசியாக பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரே [QBR2] அவனுடைய எலும்புகளை நொறுக்கியவன். [PE][PS]
18. ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: [QBR] அசீரிய அரசனைத் தண்டித்ததுபோல, [QBR2] நான் பாபிலோன் அரசனையும் அவனுடைய நாட்டையும் தண்டிப்பேன். [QBR]
19. இஸ்ரயேலையோ நான் திரும்பவும் [QBR2] அவனுடைய சொந்த மேய்ச்சலிடத்துக்குக் கொண்டுவருவேன்; [QBR2] அவன் கர்மேலிலும், பாசானிலும் மேய்வான். [QBR] எப்பிராயீம் மலைநாட்டிலும், [QBR2] கீலேயாத்திலும் தன் பசியைத் தீர்ப்பான். [QBR]
20. அந்தக் காலத்தில், அந்த நாட்களிலே இஸ்ரயேலின் குற்றம் தேடப்படும். [QBR] அங்கு ஒன்றும் இராது. [QBR2] யூதாவின் பாவங்களும் தேடிப்பார்க்கப்படும். [QBR] ஒன்றும் காணப்படமாட்டாது. [QBR2] ஏனெனில் நான் தப்பவைத்து மீந்திருப்பவர்களை [QBR2] மன்னிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
21. மெரதாயீம் நாட்டையும் பேகோதில் வாழ்கிறவர்களையும் தாக்குங்கள். [QBR2] அவர்களை தொடர்ந்து சென்று, [QBR] கொன்று முற்றிலும் அழித்துவிடுங்கள் [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR2] நான் உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்யுங்கள். [QBR]
22. நாட்டில் யுத்த சத்தம் உண்டாயிருக்கிறது. [QBR2] அது ஒரு பேரழிவின் சத்தம். [QBR]
23. முழு பூமியையும் அடித்த சம்மட்டி [QBR2] இப்பொழுது எவ்வளவாய் உடைந்து நொறுங்கிப் போயிற்று. [QBR] நாடுகளுக்குள் எவ்வளவாய் [QBR2] பாபிலோன் கைவிடப்பட்டிருக்கிறது? [QBR]
24. பாபிலோனே! நான் உனக்கு ஒரு பொறி வைத்தேன். [QBR2] நீ அதை அறியும் முன்னே அகப்பட்டாய். [QBR] நீ யெகோவாவுக்கு எதிர்த்து நின்றபடியினால் [QBR2] கண்டுபிடிக்கப்பட்டுக் கைதியாக்கப்பட்டாய். [QBR]
25. யெகோவா தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, [QBR2] தமது கோபத்தின் ஆயுதங்களை வெளியே கொண்டுவந்துள்ளார். [QBR] ஏனெனில் பாபிலோன் நாட்டில் [QBR2] ஆண்டவராகிய சேனைகளின் யெகோவாவுக்கு செய்வதற்கு ஒரு வேலை உண்டு. [QBR]
26. வெகுதூரத்திலிருந்து அதற்கு விரோதமாய் வாருங்கள். [QBR2] அவளது தானிய களஞ்சியங்களை உடைத்துத் திறவுங்கள். [QBR2] அவளைத் தானியக் குவியலைப்போல் குவித்துவிடுங்கள். [QBR] ஒன்றும் மீந்திராதபடி அவளை [QBR2] முழுவதுமாக அழித்துவிடுங்கள். [QBR]
27. அவளுடைய இளங்காளைகள் எல்லாவற்றையும் கொன்றுவிடுங்கள். [QBR2] அவை வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படட்டும். [QBR] அவற்றிற்கு ஐயோ கேடு! ஏனெனில் அவைகளின் நாள் வந்துவிட்டது. [QBR2] அவைகளைத் தண்டிக்கும் வேளை வந்துவிட்டது. [QBR]
28. பாபிலோனிலிருந்து தப்பி வந்தவர்களும், [QBR2] அகதிகளும் சீயோனில் அறிவிக்கிறதைக் கேளுங்கள். [QBR] “எங்களுடைய இறைவனாகிய யெகோவா தம்முடைய ஆலயத்திற்காகப் [QBR2] பழிவாங்க எப்படிப் பழி தீர்த்துள்ளார்?” என்கிறார்கள்.
29. வில்வீரர்களை அழைப்பியுங்கள். [QBR2] வில் வளைக்கும் யாவரையும் [QBR] பாபிலோனுக்கு விரோதமாக அழைப்பியுங்கள். [QBR2] அவளைச்சுற்றி முகாமிட்டு [QBR] ஒருவரையும் தப்பவிடாதிருங்கள். [QBR2] அவள் செய்த செய்கைகளுக்குத்தக்க பலனைக் கொடுங்கள்; [QBR] அவள் செய்தவாறே அவளுக்கும் செய்யுங்கள். [QBR2] ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரான யெகோவாவுக்கு விரோதமாய் அவள் எதிர்த்து நின்றாள். [QBR]
30. ஆதலால் அவளுடைய வாலிபர் வீதிகளில் விழுவார்கள். [QBR2] அப்பட்டணத்தின் எல்லா இராணுவவீரரும் அந்த நாளில் அழிந்துபோவார்கள் [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR]
31. “பார்! அகங்காரம் கொண்டவளே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்!” [QBR2] என்று யெகோவா, சேனைகளின் யெகோவா கூறுகிறார். [QBR] “உன் நாள் வந்துவிட்டது; [QBR2] நீ தண்டிக்கப்படும் வேளை வந்துவிட்டது. [QBR]
32. அகங்காரி இடறி விழுவாள்; [QBR2] அவள் எழுந்திருக்க ஒருவரும் உதவமாட்டார்கள். [QBR] நான் அவளுடைய பட்டணங்களில் நெருப்பு வைப்பேன். [QBR2] அது அவளைச் சுற்றியுள்ள யாவரையும் எரித்துப்போடும்.” [PE][PS]
33. மேலும் சேனைகளின் யெகோவா கூறுவதாவது: [QBR] இஸ்ரயேல் மக்களோடு யூதா மக்களும் [QBR2] ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். [QBR] அவர்களைச் சிறைப்படுத்தினோர் யாவரும் அவர்களைப் போகவிட மறுத்து, [QBR2] இறுகப் பிடித்துக்கொள்கிறார்கள். [QBR]
34. ஆயினும் அவர்களுடைய மீட்பர் பலம் மிக்கவர். [QBR2] சேனைகளின் வல்லமையுள்ள யெகோவா என்பது அவருடைய பெயர். [QBR] அவர்களுடைய நிலத்திற்கு ஆறுதலையும், [QBR2] பாபிலோனில் வாழ்பவர்களுக்கோ ஓய்வின்மையையும் கொண்டுவரும்படி, [QBR2] அவர்கள் சார்பாக உறுதியாய் வழக்காடுவார்.
35. பாபிலோனியருக்கு விரோதமாக ஒரு வாள் வரும் [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR] பாபிலோனில் வாழ்பவர்களுக்கும், அவளுடைய அதிகாரிகளுக்கும், [QBR2] அவளுடைய ஞானிகளுக்கும் விரோதமாக ஒரு வாள் வரும். [QBR]
36. அவளுடைய பொய்யான இறைவாக்கினருக்கு விரோதமாகவும் வாள் வரும். [QBR2] அவர்கள் மூடர்களாவார்கள். [QBR] அவளுடைய போர்வீரருக்கு விரோதமாகவும் வாள் வரும். [QBR2] அவர்கள் பயங்கரத்தால் நிரப்பப்படுவார்கள். [QBR]
37. அவளுடைய குதிரைகளுக்கும் தேர்களுக்கும் விரோதமாகவும், [QBR2] அவளுடைய படைப் பிரிவில் இருக்கும் பிறநாட்டினருக்கு விரோதமாகவும் வாள் வரும். [QBR2] அவர்கள் பெண்களைப் போலாவார்கள். [QBR] அவளுடைய செல்வங்களுக்கு விரோதமாகவும் வாள் வரும். [QBR2] அவை சூறையாடப்படும். [QBR]
38. அவளுடைய நீர்நிலைகளின்மேல் வறட்சி வரும். [QBR2] அவை வறண்டுபோகும். [QBR] ஏனெனில் அது விக்கிரகங்கள் நிறைந்த ஒரு நாடு. [QBR2] அந்த விக்கிரகங்கள் பயங்கரத்தினால் பைத்தியம் பிடித்தவையாகும்.
39. ஆகவே பாலைவனப் பிராணிகளும், கழுதைப்புலிகளுமே அங்கு குடிகொள்ளும்; [QBR2] ஆந்தையும் அங்கு வசிக்கும். [QBR] அது மீண்டும் ஒருபோதும் குடியேற்றப்படவுமாட்டாது. [QBR2] மக்கள் அங்கு சந்ததி சந்ததியாய் வாழவுமாட்டார்கள். [QBR]
40. இறைவன் சோதோமையும், கொமோராவையும் [QBR2] அதனை அடுத்திருந்த பட்டணங்களுடன் [QBR2] கவிழ்த்ததைப்போலவே, [QBR] அங்கு ஒருவனும் வாழ்வதுமில்லை. [QBR2] ஒரு மனிதனும் குடியிருப்பதுமில்லை என்று யெகோவா அறிவிக்கிறார்.
41. “இதோ! வடதிசையிலிருந்து ஒரு படை வருகிறது; [QBR2] ஒரு பெரிய நாடும், அநேக அரசர்களும், [QBR2] பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து எழும்புகிறது. [QBR]
42. அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்; [QBR2] அவர்கள் இரக்கமற்ற கொடியவர்கள். [QBR] அவர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்யும்போது அவர்களின் சத்தம், [QBR2] இரைகிற கடலைப் போலிருக்கிறது. [QBR] பாபிலோன் மகளே! [QBR2] அவர்கள் போருக்கு அணிவகுத்த மனிதரைப்போல் உன்னைத் தாக்க வருகிறார்கள். [QBR]
43. அவர்களைப்பற்றிய செய்தியை பாபிலோன் அரசன் கேள்விப்பட்டான். [QBR2] அவனுடைய கைகள் தளர்ந்து செயலிழந்தன. [QBR] பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணைப்போல, [QBR2] பயமும் வேதனையும் அவனைப் பற்றிக்கொண்டது. [QBR]
44. யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் [QBR2] செழிப்பான மேய்ச்சலிடத்திற்கு ஏறிவருவதுபோல நான் வந்து, [QBR] பாபிலோனை அதன் நாட்டிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் துரத்துவேன். [QBR2] அதற்கென நியமிப்பதற்கு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? [QBR] என்னைப் போன்றவன் யார்? எனக்கு அறைகூவல் விடுப்பவன் யார்? [QBR2] எனக்கெதிராக எந்த மேய்ப்பன் நிற்பான்?” என்கிறார்.
45. “ஆகையால், யெகோவா பாபிலோனுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும், [QBR2] பாபிலோனியரின் நாட்டுக்கு விரோதமான அவரது நோக்கங்களையும் கேளுங்கள். [QBR] மந்தையில் இளமையானவை இழுத்துச் செல்லப்படும். [QBR2] அவைகளின் நிமித்தம் அவைகளின் மேய்ச்சல் நிலத்தை முற்றுமாய் அழித்துப் போடுவான். [QBR]
46. பாபிலோன் கைப்பற்றப்படும் சத்தத்தால் பூமி நடுங்கும்; [QBR2] அதன் அழுகுரல் நாடுகளின் மத்தியிலே எதிரொலிக்கும்.” [PE]