1. {#1பாபிலோனைப் பற்றிய செய்தி } [PS][* பாபிலோனியர்கள் கல்தேயர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள் ]பாபிலோனியரைக் குறித்தும், பாபிலோன் நாட்டைக் குறித்தும் இறைவாக்கினன் எரேமியா மூலம் யெகோவா கூறிய வார்த்தை இதுவே: [PE]
2. [QS]“அறிவியுங்கள், நாடுகளின் மத்தியில் பிரசித்தப்படுத்துங்கள். [QE][QS2]கொடியை உயர்த்தி பிரசித்தப்படுத்துங்கள். [QE][QS2]ஒன்றையும் மறைக்காமல் நீங்கள் சொல்லவேண்டியதாவது: [QE][QS]‘பாபிலோன் கைப்பற்றப்படும். [QE][QS2]பேல் தெய்வம் வெட்கத்திற்குள்ளாக்கப்படும், [QE][QS2]மெரொதாக் தெய்வம் பயங்கரத்தினால் நிரப்பப்படும். [QE][QS]பாபிலோனின் உருவச்சிலைகள் வெட்கத்துக்குள்ளாகும். [QE][QS2]அவளுடைய விக்கிரகங்களும் பயங்கரத்தினால் நிரப்பப்படும்.’ [QE]
3. [QS]வடக்கிலிருந்து ஓர் தேசம் வந்து, [QE][QS2]அதைத் தாக்கி அதன் நாட்டைப் பாழாக்கும். [QE][QS]ஒருவனும் அதில் வாழமாட்டான். [QE][QS2]மனிதரும் மிருகங்களும் தப்பி ஓடிவிடுவார்கள். [QE][PBR]
4. [QS]“அந்த நாட்களிலும், அந்தக் காலத்திலும் இஸ்ரயேல் மக்களும், [QE][QS]யூதா மக்களும் ஒன்றுசேர்ந்து, தங்கள் இறைவனாகிய யெகோவாவைத் தேடுவதற்குக் [QE][QS2]கண்ணீருடன் போவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]
5. [QS]“சீயோனுக்குப் போகும் வழியைக் கேட்டு [QE][QS2]அதை நோக்கி தங்கள் முகங்களைத் திருப்புவார்கள். [QE][QS]அவர்கள் அங்கே வந்து மறக்கப்படாத [QE][QS2]ஒரு நித்திய உடன்படிக்கையினால் [QE][QS2]தங்களை யெகோவாவுடன் இணைத்துக்கொள்வார்கள். [QE][PBR]
6. [QS]“என் மக்கள் காணாமற்போன செம்மறியாடுகளாய் இருக்கிறார்கள். [QE][QS2]அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைத் தவறாய் வழிநடத்தி, [QE][QS2]மலைகளில் அலைந்து திரியப் பண்ணினார்கள். [QE][QS]அவர்கள் மலையின்மேலும் குன்றின்மேலும் அலைந்து திரிந்து, [QE][QS2]தங்கள் இளைப்பாறும் சொந்த இடத்தை மறந்துவிட்டார்கள். [QE]
7. [QS]அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் அவர்களை விழுங்கிப் போட்டார்கள். [QE][QS2]அவர்களுடைய பகைவர்களோ, ‘நாங்கள் குற்றமற்றவர்கள்; [QE][QS]ஏனெனில் அவர்கள் தங்கள் உண்மையான மேய்ச்சலிடமான [QE][QS2]யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். [QE][QS]தங்கள் முற்பிதாக்கள் நம்பியிருந்த யெகோவாவுக்கு [QE][QS2]விரோதமாகவே பாவம் செய்தார்கள்’ என்றார்கள். [QE][PBR]
8. [QS]“பாபிலோனைவிட்டுத் தப்பி ஓடுங்கள், [QE][QS2]பாபிலோனியரின் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்; [QE][QS2]மந்தைக்கு முன்செல்லும் வெள்ளாடுகளைப்போல் இருங்கள். [QE]
9. [QS]ஏனெனில் நான் வடதிசை நாட்டிலிருந்து பெரிய தேசத்தாரின் [QE][QS2]ஒரு கூட்டத்தைப் பாபிலோனுக்கு விரோதமாகத் தூண்டி, எழுப்பிக் கொண்டுவருவேன். [QE][QS]அவர்கள் அதற்கு விரோதமாக அணிவகுத்து வருவார்கள். [QE][QS2]வடக்கிலிருந்து அது சிறைப்பிடிக்கப்படும். [QE][QS]அவர்களுடைய அம்புகள் வெறுங்கையுடன் [QE][QS2]திரும்பிவராத திறமைவாய்ந்த போர் வீரரைப்போல் இருக்கும். [QE]
10. [QS]பாபிலோன் சூறையாடப்படும். [QE][QS2]அதைச் சூறையாடுபவர்கள் யாவரும் நிறைவாகப் பெற்றுக்கொள்வார்கள்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][PBR]
11. [QS]என் உரிமைச்சொத்தாகிய என் மக்களை கொள்ளையிடுகிற பாபிலோனியரே! [QE][QS2]நீங்கள் மகிழ்ந்து சந்தோஷப்படுகிறீர்கள். [QE][QS]சூடுமிதிக்கும் இளம் பசுவைப்போல் துள்ளிக் குதிக்கிறீர்கள்; [QE][QS2]ஆண் குதிரைகளைப்போல் கனைக்கிறீர்கள். [QE]
12. [QS]ஆனால், உங்கள் தாய் அதிக வெட்கத்துக்குள்ளாவாள். [QE][QS2]உங்களைப் பெற்றவள் அவமானப்படுவாள். [QE][QS]அவள் நாடுகளுக்குள் மிகச் சிறியவளாயும், [QE][QS2]வனாந்திரமாயும், வறண்ட நிலமாயும், பாலைவனமாயும் இருப்பாள். [QE]
13. [QS]அந்த நாடு, யெகோவாவின் கோபத்தினால், [QE][QS2]இனி குடியேற்றப்படாமல், முற்றிலும் கைவிடப்பட்டிருக்கும். [QE][QS]பாபிலோனைக் கடந்து போகிறவர்கள் அதிர்ச்சியடைந்து [QE][QS2]அதற்கு நேரிட்டவைகளைப் பார்த்துக் கேலி செய்வார்கள். [QE][PBR]
14. [QS]வில் பிடிக்கிறவர்களே! நீங்கள் யாவரும் பாபிலோனைச் சுற்றி நிலைகொள்ளுங்கள். [QE][QS2]ஒரு அம்பையேனும் விட்டுவைக்காமல் [QE][QS]எல்லாவற்றையும் அவள்மேல் எய்திடுங்கள். [QE][QS2]ஏனெனில் அவள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறாள். [QE]
15. [QS]எல்லாப் பக்கங்களிலுமிருந்து அவளுக்கு விரோதமாகச் சத்தமிடுங்கள். [QE][QS2]அவள் சரணடைகிறாள். அவளது கோபுரங்கள் விழுகின்றன. [QE][QS2]மதில்கள் இடித்து வீழ்த்தப்படுகின்றன. [QE][QS]இது யெகோவாவின் பழிவாங்குதல். [QE][QS2]ஆதலால் அவளிடத்தில் பழிவாங்குங்கள். [QE][QS2]அவள் மற்றவர்களுக்குச் செய்ததுபோலவே, அவளுக்கும் செய்யுங்கள். [QE]
16. [QS]விதைப்பவனை பாபிலோனிலிருந்து வெட்டிப்போடுங்கள். [QE][QS2]அறுப்புக் காலத்தில் அறுப்பவனை அவனுடைய அரிவாளுடன் வெட்டிப்போடுங்கள். [QE][QS]ஒடுக்குகிறவனுடைய வாளின் நிமித்தம் ஒவ்வொருவனும் [QE][QS2]தன் சொந்த மக்களிடம் திரும்பிப் போகட்டும், [QE][QS2]ஒவ்வொருவனும் தன் சொந்த நாட்டிற்குத் தப்பியோடட்டும். [QE][PBR]
17. [QS]இஸ்ரயேல் சிங்கங்களால் துரத்துண்டு [QE][QS2]சிதறுகிற ஆட்டைப்போல் இருக்கிறது. [QE][QS]முதலில் அசீரிய அரசனே [QE][QS2]அதை விழுங்கியவன். [QE][QS]கடைசியாக பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரே [QE][QS2]அவனுடைய எலும்புகளை நொறுக்கியவன். [QE]
18. [PS]ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: [PE][QS]அசீரிய அரசனைத் தண்டித்ததுபோல, [QE][QS2]நான் பாபிலோன் அரசனையும் அவனுடைய நாட்டையும் தண்டிப்பேன். [QE]
19. [QS]இஸ்ரயேலையோ நான் திரும்பவும் [QE][QS2]அவனுடைய சொந்த மேய்ச்சலிடத்துக்குக் கொண்டுவருவேன்; [QE][QS2]அவன் கர்மேலிலும், பாசானிலும் மேய்வான். [QE][QS]எப்பிராயீம் மலைநாட்டிலும், [QE][QS2]கீலேயாத்திலும் தன் பசியைத் தீர்ப்பான். [QE]
20. [QS]அந்தக் காலத்தில், அந்த நாட்களிலே இஸ்ரயேலின் குற்றம் தேடப்படும். [QE][QS]அங்கு ஒன்றும் இராது. [QE][QS2]யூதாவின் பாவங்களும் தேடிப்பார்க்கப்படும். [QE][QS]ஒன்றும் காணப்படமாட்டாது. [QE][QS2]ஏனெனில் நான் தப்பவைத்து மீந்திருப்பவர்களை [QE][QS2]மன்னிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][PBR]
21. [QS]மெரதாயீம் நாட்டையும் பேகோதில் வாழ்கிறவர்களையும் தாக்குங்கள். [QE][QS2]அவர்களை தொடர்ந்து சென்று, [QE][QS]கொன்று முற்றிலும் அழித்துவிடுங்கள் [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][QS2]நான் உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்யுங்கள். [QE]
22. [QS]நாட்டில் யுத்த சத்தம் உண்டாயிருக்கிறது. [QE][QS2]அது ஒரு பேரழிவின் சத்தம். [QE]
23. [QS]முழு பூமியையும் அடித்த சம்மட்டி [QE][QS2]இப்பொழுது எவ்வளவாய் உடைந்து நொறுங்கிப் போயிற்று. [QE][QS]நாடுகளுக்குள் எவ்வளவாய் [QE][QS2]பாபிலோன் கைவிடப்பட்டிருக்கிறது? [QE]
24. [QS]பாபிலோனே! நான் உனக்கு ஒரு பொறி வைத்தேன். [QE][QS2]நீ அதை அறியும் முன்னே அகப்பட்டாய். [QE][QS]நீ யெகோவாவுக்கு எதிர்த்து நின்றபடியினால் [QE][QS2]கண்டுபிடிக்கப்பட்டுக் கைதியாக்கப்பட்டாய். [QE]
25. [QS]யெகோவா தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, [QE][QS2]தமது கோபத்தின் ஆயுதங்களை வெளியே கொண்டுவந்துள்ளார். [QE][QS]ஏனெனில் பாபிலோன் நாட்டில் [QE][QS2]ஆண்டவராகிய சேனைகளின் யெகோவாவுக்கு செய்வதற்கு ஒரு வேலை உண்டு. [QE]
26. [QS]வெகுதூரத்திலிருந்து அதற்கு விரோதமாய் வாருங்கள். [QE][QS2]அவளது தானிய களஞ்சியங்களை உடைத்துத் திறவுங்கள். [QE][QS2]அவளைத் தானியக் குவியலைப்போல் குவித்துவிடுங்கள். [QE][QS]ஒன்றும் மீந்திராதபடி அவளை [QE][QS2]முழுவதுமாக அழித்துவிடுங்கள். [QE]
27. [QS]அவளுடைய இளங்காளைகள் எல்லாவற்றையும் கொன்றுவிடுங்கள். [QE][QS2]அவை வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படட்டும். [QE][QS]அவற்றிற்கு ஐயோ கேடு! ஏனெனில் அவைகளின் நாள் வந்துவிட்டது. [QE][QS2]அவைகளைத் தண்டிக்கும் வேளை வந்துவிட்டது. [QE]
28. [QS]பாபிலோனிலிருந்து தப்பி வந்தவர்களும், [QE][QS2]அகதிகளும் சீயோனில் அறிவிக்கிறதைக் கேளுங்கள். [QE][QS]“எங்களுடைய இறைவனாகிய யெகோவா தம்முடைய ஆலயத்திற்காகப் [QE][QS2]பழிவாங்க எப்படிப் பழி தீர்த்துள்ளார்?” என்கிறார்கள். [QE][PBR]
29. [QS]வில்வீரர்களை அழைப்பியுங்கள். [QE][QS2]வில் வளைக்கும் யாவரையும் [QE][QS]பாபிலோனுக்கு விரோதமாக அழைப்பியுங்கள். [QE][QS2]அவளைச்சுற்றி முகாமிட்டு [QE][QS]ஒருவரையும் தப்பவிடாதிருங்கள். [QE][QS2]அவள் செய்த செய்கைகளுக்குத்தக்க பலனைக் கொடுங்கள்; [QE][QS]அவள் செய்தவாறே அவளுக்கும் செய்யுங்கள். [QE][QS2]ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரான யெகோவாவுக்கு விரோதமாய் அவள் எதிர்த்து நின்றாள். [QE]
30. [QS]ஆதலால் அவளுடைய வாலிபர் வீதிகளில் விழுவார்கள். [QE][QS2]அப்பட்டணத்தின் எல்லா இராணுவவீரரும் அந்த நாளில் அழிந்துபோவார்கள் [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]
31. [QS]“பார்! அகங்காரம் கொண்டவளே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்!” [QE][QS2]என்று யெகோவா, சேனைகளின் யெகோவா கூறுகிறார். [QE][QS]“உன் நாள் வந்துவிட்டது; [QE][QS2]நீ தண்டிக்கப்படும் வேளை வந்துவிட்டது. [QE]
32. [QS]அகங்காரி இடறி விழுவாள்; [QE][QS2]அவள் எழுந்திருக்க ஒருவரும் உதவமாட்டார்கள். [QE][QS]நான் அவளுடைய பட்டணங்களில் நெருப்பு வைப்பேன். [QE][QS2]அது அவளைச் சுற்றியுள்ள யாவரையும் எரித்துப்போடும்.” [QE]
33. [PS]மேலும் சேனைகளின் யெகோவா கூறுவதாவது: [PE][QS]இஸ்ரயேல் மக்களோடு யூதா மக்களும் [QE][QS2]ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். [QE][QS]அவர்களைச் சிறைப்படுத்தினோர் யாவரும் அவர்களைப் போகவிட மறுத்து, [QE][QS2]இறுகப் பிடித்துக்கொள்கிறார்கள். [QE]
34. [QS]ஆயினும் அவர்களுடைய மீட்பர் பலம் மிக்கவர். [QE][QS2]சேனைகளின் வல்லமையுள்ள யெகோவா என்பது அவருடைய பெயர். [QE][QS]அவர்களுடைய நிலத்திற்கு ஆறுதலையும், [QE][QS2]பாபிலோனில் வாழ்பவர்களுக்கோ ஓய்வின்மையையும் கொண்டுவரும்படி, [QE][QS2]அவர்கள் சார்பாக உறுதியாய் வழக்காடுவார். [QE][PBR]
35. [QS]பாபிலோனியருக்கு விரோதமாக ஒரு வாள் வரும் [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][QS]பாபிலோனில் வாழ்பவர்களுக்கும், அவளுடைய அதிகாரிகளுக்கும், [QE][QS2]அவளுடைய ஞானிகளுக்கும் விரோதமாக ஒரு வாள் வரும். [QE]
36. [QS]அவளுடைய பொய்யான இறைவாக்கினருக்கு விரோதமாகவும் வாள் வரும். [QE][QS2]அவர்கள் மூடர்களாவார்கள். [QE][QS]அவளுடைய போர்வீரருக்கு விரோதமாகவும் வாள் வரும். [QE][QS2]அவர்கள் பயங்கரத்தால் நிரப்பப்படுவார்கள். [QE]
37. [QS]அவளுடைய குதிரைகளுக்கும் தேர்களுக்கும் விரோதமாகவும், [QE][QS2]அவளுடைய படைப் பிரிவில் இருக்கும் பிறநாட்டினருக்கு விரோதமாகவும் வாள் வரும். [QE][QS2]அவர்கள் பெண்களைப் போலாவார்கள். [QE][QS]அவளுடைய செல்வங்களுக்கு விரோதமாகவும் வாள் வரும். [QE][QS2]அவை சூறையாடப்படும். [QE]
38. [QS]அவளுடைய நீர்நிலைகளின்மேல் வறட்சி வரும். [QE][QS2]அவை வறண்டுபோகும். [QE][QS]ஏனெனில் அது விக்கிரகங்கள் நிறைந்த ஒரு நாடு. [QE][QS2]அந்த விக்கிரகங்கள் பயங்கரத்தினால் பைத்தியம் பிடித்தவையாகும். [QE][PBR]
39. [QS]ஆகவே பாலைவனப் பிராணிகளும், கழுதைப்புலிகளுமே அங்கு குடிகொள்ளும்; [QE][QS2]ஆந்தையும் அங்கு வசிக்கும். [QE][QS]அது மீண்டும் ஒருபோதும் குடியேற்றப்படவுமாட்டாது. [QE][QS2]மக்கள் அங்கு சந்ததி சந்ததியாய் வாழவுமாட்டார்கள். [QE]
40. [QS]இறைவன் சோதோமையும், கொமோராவையும் [QE][QS2]அதனை அடுத்திருந்த பட்டணங்களுடன் [QE][QS2]கவிழ்த்ததைப்போலவே, [QE][QS]அங்கு ஒருவனும் வாழ்வதுமில்லை. [QE][QS2]ஒரு மனிதனும் குடியிருப்பதுமில்லை என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][PBR]
41. [QS]“இதோ! வடதிசையிலிருந்து ஒரு படை வருகிறது; [QE][QS2]ஒரு பெரிய நாடும், அநேக அரசர்களும், [QE][QS2]பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து எழும்புகிறது. [QE]
42. [QS]அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்; [QE][QS2]அவர்கள் இரக்கமற்ற கொடியவர்கள். [QE][QS]அவர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்யும்போது அவர்களின் சத்தம், [QE][QS2]இரைகிற கடலைப் போலிருக்கிறது. [QE][QS]பாபிலோன் மகளே! [QE][QS2]அவர்கள் போருக்கு அணிவகுத்த மனிதரைப்போல் உன்னைத் தாக்க வருகிறார்கள். [QE]
43. [QS]அவர்களைப்பற்றிய செய்தியை பாபிலோன் அரசன் கேள்விப்பட்டான். [QE][QS2]அவனுடைய கைகள் தளர்ந்து செயலிழந்தன. [QE][QS]பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணைப்போல, [QE][QS2]பயமும் வேதனையும் அவனைப் பற்றிக்கொண்டது. [QE]
44. [QS]யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் [QE][QS2]செழிப்பான மேய்ச்சலிடத்திற்கு ஏறிவருவதுபோல நான் வந்து, [QE][QS]பாபிலோனை அதன் நாட்டிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் துரத்துவேன். [QE][QS2]அதற்கென நியமிப்பதற்கு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? [QE][QS]என்னைப் போன்றவன் யார்? எனக்கு அறைகூவல் விடுப்பவன் யார்? [QE][QS2]எனக்கெதிராக எந்த மேய்ப்பன் நிற்பான்?” என்கிறார். [QE][PBR]
45. [QS]“ஆகையால், யெகோவா பாபிலோனுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும், [QE][QS2]பாபிலோனியரின் நாட்டுக்கு விரோதமான அவரது நோக்கங்களையும் கேளுங்கள். [QE][QS]மந்தையில் இளமையானவை இழுத்துச் செல்லப்படும். [QE][QS2]அவைகளின் நிமித்தம் அவைகளின் மேய்ச்சல் நிலத்தை முற்றுமாய் அழித்துப் போடுவான். [QE]
46. [QS]பாபிலோன் கைப்பற்றப்படும் சத்தத்தால் பூமி நடுங்கும்; [QE][QS2]அதன் அழுகுரல் நாடுகளின் மத்தியிலே எதிரொலிக்கும்.” [QE]