1. {#1அம்மோனைப் பற்றிய செய்தி } [PS]அம்மோனியரைப் பற்றியது: [PE][PBR] [PS]யெகோவா கூறுவது இதுவே: [PE][QS]“இஸ்ரயேலுக்கு மகன்கள் இல்லையோ? [QE][QS2]அவளுக்கு வாரிசுகள் இல்லையோ? [QE][QS]அப்படியானால், மோளேக்[* மோளேக் என்றால் அம்மோனிய தெய்வம், இதை வணங்குபவர்கள் மில்க்கோம் என்று அழைக்கப்பட்டனர் ] தெய்வம் காத் நாட்டை உரிமையாக்கிக் கொண்டது ஏன்? [QE][QS2]அதனை வணங்குகிறவர்கள் ஏன் அதன் பட்டணங்களில் வாழ்கின்றனர்? [QE]
2. [QS]ஆயினும், நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][QS]“அம்மோனியரின் ரப்பா பட்டணத்துக்கெதிராக [QE][QS2]நான் போரின் முழக்கத்தை எழுப்புவேன். [QE][QS]அந்த இடம் இடிபாடுகளின் குவியலாகும். [QE][QS2]அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் நெருப்பினால் எரிக்கப்படும். [QE][QS]அப்பொழுது தங்களை வெளியே துரத்திவிட்டவர்களை, [QE][QS2]இஸ்ரயேலர் வெளியே துரத்திவிடுவார்கள்” [QE][QS2]என்று யெகோவா சொல்கிறார். [QE]
3. [QS]“எஸ்போனே! புலம்பி அழு! ஏனெனில், ஆயி பட்டணம் அழிக்கப்பட்டது. [QE][QS2]ரப்பாவின் குடிகளே! கதறியழுங்கள். [QE][QS]துக்கவுடை உடுத்தித் துக்கங்கொண்டாடுங்கள். [QE][QS2]வேலிகளுக்குள்ளே இங்கும் அங்கும் விரைந்தோடுங்கள். [QE][QS]ஏனெனில், மோளேகு தெய்வம் தனது பூசாரிகளுடனும் [QE][QS2]அலுவலர்களுடனும் நாடுகடத்தப்படும். [QE]
4. [QS]உண்மையற்ற மகளே! [QE][QS2]உன் பள்ளத்தாக்குகளைப் பற்றி ஏன் பெருமையாய்ப் பேசுகிறாய்? [QE][QS]உன் வளம் நிறைந்த பள்ளத்தாக்குகளைப் பற்றி ஏன் பெருமை பேசுகிறாய்? [QE][QS2]நீ உன் செல்வங்களில் நம்பிக்கை வைத்து, [QE][QS2]‘என்னைத் தாக்குபவன் யார்’ என்கிறாயே! [QE]
5. [QS]உன்னைச் சுற்றியுள்ள எல்லோரிடமிருந்தும், [QE][QS2]உனக்குப் பயங்கரத்தைக் கொண்டுவருவேன்” [QE][QS2]என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். [QE][QS]“உங்களில் ஒவ்வொருவரும் வெளியே துரத்தப்படுவீர்கள். [QE][QS2]தப்பியோடுகிறவர்களை ஒன்றுசேர்ப்பார் ஒருவருமில்லை. [QE][PBR]
6. [QS]“இருந்தும் பிற்பாடு அம்மோனியரின் செல்வங்களை நான் திரும்பவும் கொடுப்பேன்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]
7. {#1ஏதோமைப் பற்றிய செய்தி } [PS]ஏதோமைப் பற்றியது: [PE][PBR] [PS]சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: [PE][QS]“தேமானிலே ஞானம் இல்லையோ? [QE][QS2]விவேகமுள்ளவர்களிடமிருந்து ஆலோசனை இல்லாமல் போயிற்றோ? [QE][QS2]அவர்களுடைய ஞானம் சிதைந்து போயிற்றோ? [QE]
8. [QS]தேதானில் குடியிருப்பவர்களே! [QE][QS2]திரும்பி தப்பியோடுங்கள். [QE][QS]பள்ளங்களின் நடுவிலே ஒளிந்துகொள்ளுங்கள். [QE][QS2]ஏனெனில் ஏசாவை நான் தண்டிக்கும் காலத்தில் அவன்மேல் பேராபத்தைக் கொண்டுவருவேன். [QE]
9. [QS]திராட்சைப் பழங்களை பறிக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், [QE][QS2]சில பழங்களை விட்டுச்செல்லமாட்டார்களோ? [QE][QS]இரவுவேளையில் திருடர்கள் வந்தால், [QE][QS2]தங்கள் மனம் விரும்பிய அளவு மட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவா? [QE]
10. [QS]ஆனால் நானோ ஏசாவை வெறுமையாக்குவேன். [QE][QS2]அவன் தன்னை மறைத்துக் கொள்ளமுடியாத அளவுக்கு [QE][QS2]அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்துவேன். [QE][QS]அவனுடைய பிள்ளைகளும், உறவினர்களும், [QE][QS2]அயலவர்களும் அழிந்துபோவார்கள். [QE][QS2]அவனும் இல்லாமற்போவான். [QE]
11. [QS]‘நீ உன் அநாதைகளை விட்டுவிடு; நான் அவர்களைப் பாதுகாப்பேன். [QE][QS2]உன்னுடைய விதவைகளும் என்னில் நம்பிக்கையாய் இருக்கலாம்.’ ” [QE]
12. [PS]யெகோவா கூறுவது இதுவே: “தண்டனையின் பாத்திரத்தில் குடிக்க வேண்டியதல்லாதவர்களும், அதில் கட்டாயமாய் குடிக்க வேண்டியிருக்கும்போது, நீ மட்டும் தண்டனையின்றி தப்பலாமோ? நீ தண்டிக்கப்படாமல் விடப்படமாட்டாய்; நீ கண்டிப்பாக குடிக்கவேண்டும்.
13. போஸ்றா பாழாக்கப்பட்டு, பயங்கரத்திற்கும், நிந்தைக்கும், சாபத்திற்கும் உள்ளாகும். அதன் பட்டணங்கள் யாவும் என்றும் பாழாகவே கிடக்கும் என்று நான் என்னைக்கொண்டு ஆணையிடுகிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். [PE]
14. [QS]நான் யெகோவாவிடமிருந்து ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். [QE][QS2]ஜனங்களிடம் ஒரு தூதுவன், “அதைத் தாக்குவதற்கு நீங்கள் ஒன்றுகூடுங்கள்! [QE][QS]யுத்தம் செய்ய எழும்புங்கள்!” [QE][QS2]என்று சொல்லுவதற்காக அனுப்பப்பட்டான். [QE][PBR]
15. [QS]இப்பொழுது நான் உன்னை நாடுகளுக்குள்ளே சிறியதும், [QE][QS2]மனிதரால் அவமதிக்கப்பட்டதுமாக்குவேன். [QE]
16. [QS]கற்பாறை பிளவுகளில் வாழ்ந்து, [QE][QS2]மேடுகளின் உயரங்களில் இடம்பிடித்துக்கொண்டிருக்கிற உன்னை, [QE][QS]நீ விளைவிக்கும் பயங்கரமும், [QE][QS2]உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கியது. [QE][QS]நீ கழுகின் கூட்டைப்போல் உன் கூட்டை மிக உயரத்தில் கட்டினாலும், [QE][QS2]அங்கிருந்தும் நான் உன்னை கீழே விழத்தள்ளுவேன் [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]
17. [QS]ஏதோம் ஒரு பாழான பொருளாகும். [QE][QS2]அதைக் கடந்துபோகிற யாவரும் பிரமித்து, [QE][QS2]அதற்கு ஏற்பட்ட எல்லா காயங்களைக் கண்டு ஏளனம் செய்வார்கள். [QE]
18. [QS]சோதோமும், கொமோராவும் அவைகளுக்கு அடுத்திருந்த [QE][QS2]பட்டணங்களுடன் கவிழ்க்கப்பட்டதுபோல, [QE][QS]அங்கு ஒருவனும் வாழ்வதுமில்லை. [QE][QS2]ஒரு மனிதனும் குடியிருப்பதுமில்லை என்று யெகோவா சொல்கிறார். [QE][PBR]
19. [QS]யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் செழிப்பான [QE][QS2]மேய்ச்சலிடத்திற்கு ஏறிவருவதுபோல நான் வந்து, [QE][QS]ஏதோமை அதன் நாட்டிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் துரத்துவேன். [QE][QS2]அதற்கென நான் நியமிப்பதற்கு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? [QE][QS]என்னைப் போன்றவன் யார்? என்னை எதிர்க்கக் கூடியவன் யார்? [QE][QS2]எந்த மேய்ப்பன் எனக்கெதிராக நிற்பான்? [QE][PBR]
20. [QS]ஆகையால், யெகோவா ஏதோமுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும், [QE][QS2]தேமானில் வாழ்கிறவர்களுக்கு விரோதமான அவரது நோக்கங்களையும் கேளுங்கள். [QE][QS]மந்தையில் இளமையானவை இழுத்துச் செல்லப்படும். [QE][QS2]அவைகளின் நிமித்தம் அவைகளின் மேய்ச்சல் நிலத்தை முற்றுமாய் அழித்துப் போடுவான். [QE]
21. [QS]அவைகளின் விழுகையின் சத்தத்தால் பூமி நடுங்கும். [QE][QS2]அவைகளின் அழுகுரல் செங்கடல்வரை எதிரொலிக்கும். [QE]
22. [QS]இதோ! ஒருவன் கழுகைப்போல உயரப் பறந்து, [QE][QS2]போஸ்றாவின் மேலாக தனது சிறகுகளை விரித்து, அதை தாக்கும்படி கீழே வருகிறான். [QE][QS]அந்த நாளில் ஏதோமின் போர்வீரருடைய இருதயங்கள் [QE][QS2]பிரசவிக்கிற ஒரு பெண்ணின் இருதயத்தைப்போல் இருக்கும். [QE]
23. {#1தமஸ்குவைப் பற்றிய செய்தி } [PS]தமஸ்குவைப் பற்றியது: [PE][QS]“ஆமாத்தும், அர்பாத்தும், கெட்ட செய்தியைக் [QE][QS2]கேட்டதினால் மனமுடைந்து போயின. அவர்கள் [QE][QS]மனந்தளர்ந்து, [QE][QS2]அமைதியற்ற கடலைப்போல் குழப்பமடைந்து இருக்கிறார்கள். [QE]
24. [QS]தமஸ்கு தளர்ந்துவிட்டது. [QE][QS2]அது தப்பி ஓடுவதற்குத் திரும்பி விட்டது. [QE][QS2]திகில் அதைப்பற்றிப் பிடித்துக்கொண்டது. [QE][QS]பிரசவிக்கும் பெண்ணின் வேதனையைப்போன்ற வேதனையும், [QE][QS2]துக்கமும் அதை ஆட்கொண்டன. [QE]
25. [QS]புகழ்ப்பெற்ற பட்டணம் கைவிடப்படாமல் இருப்பதேன்? [QE][QS2]நான் மகிழ்ச்சிகொள்ளும் நகரம் ஏன் கைவிடப்படாமல் இருக்கிறது. [QE]
26. [QS]நிச்சயமாக அதன் வாலிபர்கள் தெருக்களில் விழுவார்கள். [QE][QS2]அந்நாளில் எல்லாப் போர்வீரர்களும் அழிக்கப்படுவார்கள் [QE][QS2]என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். [QE]
27. [QS]நான் தமஸ்குவின் மதில்களுக்கு நெருப்பு வைப்பேன். [QE][QS2]அது பெனாதாத்தின் கோட்டைகளை எரிக்கும்.” [QE]
28. {#1கேதாரையும், காத்சோரையும் பற்றிய செய்தி } [PS]பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் தாக்கிய கேதாரையும், காத்சோர் அரசுகளையும் பற்றியது: [PE][PBR] [PS]யெகோவா கூறுவது இதுவே: [PE][QS]“நீ எழுந்து கேதாரைத் தாக்கி [QE][QS2]கிழக்கிலுள்ள மக்களை அழித்துவிடு. [QE]
29. [QS]அவர்களுடைய கூடாரங்களும், அவர்களுடைய மந்தைகளும் எடுத்துச் செல்லப்படும்; [QE][QS2]அவர்களுடைய எல்லா பொருட்களுடனும் ஒட்டகங்களுடனும் [QE][QS2]அவர்களுடைய குடிமனைகள் எடுத்துச் செல்லப்படும். [QE][QS]மனிதர் அவர்களைப் பார்த்து, [QE][QS2]‘எல்லாப் பக்கங்களிலும் பயங்கரம்’ என்று சொல்லிக் கூக்குரலிடுவார்கள். [QE][PBR]
30. [QS]“காத்சோரில் வாழ்பவர்களே நீங்கள் விரைவாகத் தப்பி ஓடுங்கள்; [QE][QS2]ஆழமான குகைகளிலே தங்குங்கள்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][QS]ஏனெனில், “பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் [QE][QS2]உனக்கெதிராகச் சதித்திட்டமிட்டிருக்கிறான்; [QE][QS2]அவன் உனக்கெதிராகத் திட்டமிட்டு சூழ்ச்சி செய்திருக்கிறான். [QE][PBR]
31. [QS]“தன்னம்பிக்கையுடன் [QE][QS2]சுகவாழ்வு வாழ்கிற நாட்டை எழுந்து தாக்கு” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][QS]“அது கதவோ, தாழ்ப்பாளோ இல்லாத ஒரு இனம். [QE][QS2]அதன் மக்கள் தனிமையாய் வாழ்கிறார்கள். [QE]
32. [QS]அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளைப்பொருளாகும். [QE][QS2]அவர்களுடைய பெரும் மந்தைகளும் சூறைப்பொருளாகும். [QE][QS]தூரமான இடங்களில் இருக்கிறவர்களை நான்கு திசைகளிலும் சிதறடித்து, [QE][QS2]ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் பேராபத்தைக் கொண்டுவருவேன்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]
33. [QS]“காத்சோர், நரிகளுக்கு உறைவிடமாகி [QE][QS2]என்றைக்கும் பாழடைந்திருக்கும். [QE][QS]ஒருவரும் அங்கு வாழமாட்டார்கள். [QE][QS2]ஒரு மனிதரும் அங்கு குடியிருக்கவுமாட்டார்கள்.” [QE]
34. {#1ஏலாமைப் பற்றிய செய்தி } [PS]யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில், ஏலாமைக் குறித்து இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: [PE][PBR]
35. [PS]சேனைகளின் யெகோவா கூறுவதாவது: [PE][QS]“பாருங்கள், நான் ஏலாமின் வில்லை முறிப்பேன்; [QE][QS2]அவர்களின் பலத்தின் ஆதாரத்தையும் முறிப்பேன். [QE]
36. [QS]நான் வானத்தில் நான்கு திசைகளிலிருந்தும், [QE][QS2]நான்கு காற்றுகளை ஏலாமுக்கு எதிராகக் கொண்டுவருவேன். [QE][QS]நான் அவர்களை நான்கு திசைகளிலும் சிதறடிப்பேன். [QE][QS2]ஏலாம் மக்கள் நாடுகடத்தப்பட்டு போகாத [QE][QS2]ஒரு நாடும் இருக்கமாட்டாது. [QE]
37. [QS]தங்கள் உயிரை வாங்கத் தேடுகிற [QE][QS2]எதிரிகளுக்கு முன்பாக நான் ஏலாமை நொறுக்குவேன். [QE][QS]என்னுடைய கடுங்கோபத்தினால் [QE][QS2]பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவருவேன்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][QS]“அவர்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும்வரை [QE][QS2]வாளுடன் அவர்களைப் பின்தொடர்வேன். [QE]
38. [QS]நான் ஏலாமில் என்னுடைய அரியணையை அமைப்பேன்; [QE][QS2]அதன் அரசர்களையும், அதிகாரிகளையும் அழிப்பேன்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][PBR]
39. [QS]“ஆனாலும் வரும் நாட்களில், ஏலாமின் [QE][QS2]செல்வங்களை மீண்டும் கொடுப்பேன்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]