தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
எரேமியா
1. {#1பெலிஸ்தியரைப் பற்றிய செய்தி } [PS]பார்வோன், காசாவைத் தாக்குவதற்கு முன் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: [PE][PBR]
2. [PS]யெகோவா கூறுவது இதுவே: [PE][QS]“பாருங்கள், வடக்கிலே வெள்ளம் எவ்வளவாய் பொங்கி எழுகிறது. [QE][QS2]அது கரைபுரண்டோடும் வெள்ளமாகும். [QE][QS]அது நாட்டின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும் புரண்டோடும். [QE][QS2]பட்டணங்கள்மேலும், அதில் வாழும் யாவர்மேலும் புரண்டோடும். [QE][QS]மக்கள் அலறி அழுவார்கள். [QE][QS2]நாட்டில் குடியிருப்போர் எல்லோரும் புலம்புவார்கள். [QE]
3. [QS]பாய்ந்தோடும் குதிரைகளின் குளம்புகளின் ஒலியையும், [QE][QS2]பகைவர்களின் தேர்களின் சத்தத்தையும், [QE][QS2]தேர்ச்சக்கரங்களின் இரைச்சலையும் கேட்டு ஓலமிடுவார்கள். [QE][QS]தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்யும்படி திரும்பமாட்டார்கள். [QE][QS2]அவர்களுடைய கைகள் சோர்ந்துபோகும். [QE]
4. [QS]ஏனெனில் பெலிஸ்தியர் அனைவரையும் [QE][QS2]அழிக்கும் நாள் வந்திருக்கிறது. [QE][QS]தீருவுக்கும் சீதோனுக்கும் உதவிசெய்யக்கூடிய, [QE][QS2]இன்னும் தப்பியிருப்பவர்களை அழிப்பதற்கான நாள் வந்திருக்கிறது. [QE][QS]கப்தோரின் கரையோரத்தில் மீதியாயிருக்கும் [QE][QS2]பெலிஸ்தியரை யெகோவா அழிக்கப்போகிறார். [QE]
5. [QS]காசா துக்கங்கொண்டாடுதலுக்காக தன் தலையை மொட்டையடிக்கும். [QE][QS2]அஸ்கலோன் மவுனமாய் இருக்கும். [QE][QS]சமவெளியில் மீதியாயிருப்பவர்களே, [QE][QS2]எவ்வளவு காலத்திற்கு உங்களை நீங்களே வெட்டிக்கொள்வீர்கள்? [QE][PBR]
6. [QS]“ ‘ஐயோ! யெகோவாவின் வாளே! [QE][QS2]நீ ஓய்வதற்கு எவ்வளவு காலம் செல்லும்? [QE][QS]உறைக்குத் திரும்பி அங்கு ஓய்ந்திரு [QE][QS2]என்று நீங்கள் கதறுகிறீர்களே!’ [QE]
7. [QS]ஆனால் அஸ்கலோனையும், [QE][QS2]கரையோரப் பகுதிகளையும் தாக்கும்படி, [QE][QS]யெகோவா கட்டளையிட்டு உத்தரவு கொடுத்திருக்க [QE][QS2]அது எப்படி ஓய்ந்திருக்கும்?” [QE]
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 47 / 52
பெலிஸ்தியரைப் பற்றிய செய்தி 1 பார்வோன், காசாவைத் தாக்குவதற்கு முன் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: 2 யெகோவா கூறுவது இதுவே: “பாருங்கள், வடக்கிலே வெள்ளம் எவ்வளவாய் பொங்கி எழுகிறது. அது கரைபுரண்டோடும் வெள்ளமாகும். அது நாட்டின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும் புரண்டோடும். பட்டணங்கள்மேலும், அதில் வாழும் யாவர்மேலும் புரண்டோடும். மக்கள் அலறி அழுவார்கள். நாட்டில் குடியிருப்போர் எல்லோரும் புலம்புவார்கள். 3 பாய்ந்தோடும் குதிரைகளின் குளம்புகளின் ஒலியையும், பகைவர்களின் தேர்களின் சத்தத்தையும், தேர்ச்சக்கரங்களின் இரைச்சலையும் கேட்டு ஓலமிடுவார்கள். தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்யும்படி திரும்பமாட்டார்கள். அவர்களுடைய கைகள் சோர்ந்துபோகும். 4 ஏனெனில் பெலிஸ்தியர் அனைவரையும் அழிக்கும் நாள் வந்திருக்கிறது. தீருவுக்கும் சீதோனுக்கும் உதவிசெய்யக்கூடிய, இன்னும் தப்பியிருப்பவர்களை அழிப்பதற்கான நாள் வந்திருக்கிறது. கப்தோரின் கரையோரத்தில் மீதியாயிருக்கும் பெலிஸ்தியரை யெகோவா அழிக்கப்போகிறார். 5 காசா துக்கங்கொண்டாடுதலுக்காக தன் தலையை மொட்டையடிக்கும். அஸ்கலோன் மவுனமாய் இருக்கும். சமவெளியில் மீதியாயிருப்பவர்களே, எவ்வளவு காலத்திற்கு உங்களை நீங்களே வெட்டிக்கொள்வீர்கள்? 6 “ ‘ஐயோ! யெகோவாவின் வாளே! நீ ஓய்வதற்கு எவ்வளவு காலம் செல்லும்? உறைக்குத் திரும்பி அங்கு ஓய்ந்திரு என்று நீங்கள் கதறுகிறீர்களே!’ 7 ஆனால் அஸ்கலோனையும், கரையோரப் பகுதிகளையும் தாக்கும்படி, யெகோவா கட்டளையிட்டு உத்தரவு கொடுத்திருக்க அது எப்படி ஓய்ந்திருக்கும்?”
மொத்தம் 52 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 47 / 52
×

Alert

×

Tamil Letters Keypad References