1. {பெலிஸ்தியரைப் பற்றிய செய்தி} [PS] பார்வோன், காசாவைத் தாக்குவதற்கு முன் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: [PS]
2. யெகோவா கூறுவது இதுவே: [QBR] “பாருங்கள், வடக்கிலே வெள்ளம் எவ்வளவாய் பொங்கி எழுகிறது. [QBR2] அது கரைபுரண்டோடும் வெள்ளமாகும். [QBR] அது நாட்டின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும் புரண்டோடும். [QBR2] பட்டணங்கள்மேலும், அதில் வாழும் யாவர்மேலும் புரண்டோடும். [QBR] மக்கள் அலறி அழுவார்கள். [QBR2] நாட்டில் குடியிருப்போர் எல்லோரும் புலம்புவார்கள். [QBR]
3. பாய்ந்தோடும் குதிரைகளின் குளம்புகளின் ஒலியையும், [QBR2] பகைவர்களின் தேர்களின் சத்தத்தையும், [QBR2] தேர்ச்சக்கரங்களின் இரைச்சலையும் கேட்டு ஓலமிடுவார்கள். [QBR] தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்யும்படி திரும்பமாட்டார்கள். [QBR2] அவர்களுடைய கைகள் சோர்ந்துபோகும். [QBR]
4. ஏனெனில் பெலிஸ்தியர் அனைவரையும் [QBR2] அழிக்கும் நாள் வந்திருக்கிறது. [QBR] தீருவுக்கும் சீதோனுக்கும் உதவிசெய்யக்கூடிய, [QBR2] இன்னும் தப்பியிருப்பவர்களை அழிப்பதற்கான நாள் வந்திருக்கிறது. [QBR] கப்தோரின் கரையோரத்தில் மீதியாயிருக்கும் [QBR2] பெலிஸ்தியரை யெகோவா அழிக்கப்போகிறார். [QBR]
5. காசா துக்கங்கொண்டாடுதலுக்காக தன் தலையை மொட்டையடிக்கும். [QBR2] அஸ்கலோன் மவுனமாய் இருக்கும். [QBR] சமவெளியில் மீதியாயிருப்பவர்களே, [QBR2] எவ்வளவு காலத்திற்கு உங்களை நீங்களே வெட்டிக்கொள்வீர்கள்?
6. “ ‘ஐயோ! யெகோவாவின் வாளே! [QBR2] நீ ஓய்வதற்கு எவ்வளவு காலம் செல்லும்? [QBR] உறைக்குத் திரும்பி அங்கு ஓய்ந்திரு [QBR2] என்று நீங்கள் கதறுகிறீர்களே!’ [QBR]
7. ஆனால் அஸ்கலோனையும், [QBR2] கரையோரப் பகுதிகளையும் தாக்கும்படி, [QBR] யெகோவா கட்டளையிட்டு உத்தரவு கொடுத்திருக்க [QBR2] அது எப்படி ஓய்ந்திருக்கும்?” [PE]