1. {#1இஸ்ரயேல் இறைவனை கைவிடுதல் } [PS]யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2. “நீ போய் எருசலேமிலுள்ளவர்கள் கேட்கத்தக்கதாய் இதை பிரசித்தப்படுத்து: [PE][PBR] [PS]“யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“ ‘உன் வாலிப காலத்தில் உனக்கிருந்த பக்தி எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. [QE][QS2]நீ மணமகளாய் இருந்தபோது என்னில் நீ எவ்வளவாய் அன்பு வைத்தாய். [QE][QS]பாலைவனத்திலும், [QE][QS2]விதைக்கப்படாத நிலத்திலும் நீ என்னைப் பின்பற்றினாய். [QE]
3. [QS]இஸ்ரயேல் யெகோவாவுக்குப் பரிசுத்தமும், [QE][QS2]அவருடைய அறுவடையின் முதற்கனியுமாயிருந்தது. [QE][QS]இஸ்ரயேலை விழுங்கினவர்கள் யாவரும் குற்றவாளிகள் ஆக்கப்பட்டார்கள், [QE][QS2]பெருந்துன்பமும் அவர்களை மேற்கொண்டது,’ ” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][PBR]
4. [QS]யாக்கோபின் வீட்டாரே! இஸ்ரயேல் வீட்டு வம்சங்களே! [QE][QS2]நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். [QE]
5. [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“உங்கள் முற்பிதாக்கள் என்னில் என்ன குற்றத்தைக் கண்டார்கள், [QE][QS2]அவர்கள் என்னைவிட்டு ஏன் இவ்வளவு தூரமாய் போனார்கள்? [QE][QS]அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைப் பின்பற்றி, [QE][QS2]தாங்களும் பயனற்றவர்களானார்கள். [QE]
6. [QS]‘எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்த யெகோவா எங்கே? [QE][QS2]பள்ளங்களும், பாலைவனங்களும் உள்ள [QE][QS]நாடாகிய வறண்ட வனாந்திரத்தின் வழியாக எங்களை வழிநடத்தியவர் எங்கே? [QE][QS2]ஒருவரும் பிரயாணம் செய்யாததும், ஒருவரும் குடியிராததுமான [QE][QS]வறட்சியும் இருளும் உள்ள நாட்டின் வழியாக வழிநடத்திய யெகோவா எங்கே?’ [QE][QS2]என்று அவர்கள் கேட்கவில்லையே? [QE]
7. [QS]நான் உங்களை ஒரு செழிப்பான நாட்டின் பலனையும், [QE][QS2]அதன் நிறைவான விளைச்சலையும் சாப்பிடும்படி அங்கு கொண்டுவந்தேன். [QE][QS]ஆனால் நீங்களோ, வந்து என்னுடைய நாட்டைக் கறைப்படுத்தி, [QE][QS2]என் உரிமைச்சொத்தையும் அருவருப்பாக்கினீர்கள். [QE]
8. [QS]‘யெகோவா எங்கே?’ [QE][QS2]என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை; [QE][QS]வேதத்தை போதிக்கிறவர்கள் என்னை அறியவில்லை; [QE][QS2]தலைவர்கள் எனக்கெதிராக கலகம் செய்தார்கள். [QE][QS]இறைவாக்கு உரைப்போர் பயனற்ற விக்கிரகங்களைப் பின்பற்றி, [QE][QS2]பாகாலின் பெயரால் இறைவாக்கு கூறினார்கள். [QE][PBR]
9. [QS]“ஆகையினால் திரும்பவும் உனக்கெதிராக குற்றம் சுமத்துகிறேன்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][QS2]மேலும் அவர், “உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கெதிராகவும் குற்றம் சுமத்துவேன். [QE]
10. [QS]சைப்பிரஸின் கரைக்குக் கடந்துபோய்ப் பாருங்கள். [QE][QS2]கேதாருக்கு ஆள் அனுப்பி உற்றுக் கவனியுங்கள். [QE][QS2]இதைப்போன்ற ஒரு காரியம் எப்பொழுதாவது நடந்திருந்ததோ என்று பாருங்கள்: [QE]
11. [QS]எந்த நாடாவது தனது தெய்வங்களை மாற்றியதுண்டா? [QE][QS2]ஆனால் என் மக்களோ, அவர்களுடைய மகிமையாகிய எனக்குரிய இடத்தில் [QE][QS]பயனற்ற விக்கிரகங்களை எனக்கு பதிலாக மாற்றிக்கொண்டார்கள். [QE][QS2]ஆயினும் அவை தெய்வங்கள் அல்லவே. [QE]
12. [QS]வானங்களே, இதைக்குறித்து வியப்படையுங்கள். [QE][QS2]பெரிதான பயங்கரத்தினால் நடுங்குங்கள்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]
13. [QS]“என் மக்கள் இரண்டு பாவங்களைச் செய்திருக்கிறார்கள்: [QE][QS]ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய [QE][QS2]என்னை கைவிட்டார்கள். [QE][QS]தங்களுக்கென சொந்தமான தொட்டிகளை வெட்டிக்கொண்டார்கள். [QE][QS2]அவைகளோ தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகள். [QE]
14. [QS]இஸ்ரயேல் ஒரு கூலியாளோ? அவன் பிறப்பிலே அடிமையாகவே பிறந்தானோ? [QE][QS2]பின் ஏன் அவன் இவ்வாறு கொள்ளைப்பொருளானான்? [QE]
15. [QS]சிங்கங்கள் கர்ஜித்தன; [QE][QS2]அவைகள் அவனைப் பார்த்து உறுமியது. [QE][QS]இஸ்ரயேலுடைய நாட்டை அவை பாழாக்கிவிட்டன; [QE][QS2]அவனுடைய பட்டணங்கள் எரிக்கப்பட்டுக் கைவிடப்பட்டுள்ளன. [QE]
16. [QS]அத்துடன், தக்பானேஸ் மெம்பிஸ் பட்டணங்களின் மனிதர் [QE][QS2]உன்னுடைய தலையின் உச்சியையும் நொறுக்கினார்கள். [QE]
17. [QS]உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வழிநடத்தியபோது, [QE][QS2]அவரை நீங்கள் கைவிட்டதினால் அல்லவா [QE][QS2]இவற்றை நீங்களே உங்கள்மேல் கொண்டுவந்தீர்கள்? [QE]
18. [QS]இப்போது நைல் நதியின்[* எபிரெயத்தில் நைல் நதியின் அல்லது சீகோரின் தண்ணீர் சீகோர் என்பது நைல் நதியின் ஒரு கிளை ஆகும் ] தண்ணீரைக் குடிக்க [QE][QS2]ஏன் எகிப்திற்குப் போகிறீர்கள்? [QE][QS]ஐபிராத்து நதியின் தண்ணீரைக் குடிக்க [QE][QS2]ஏன் அசீரியாவுக்குப் போகிறீர்கள்? [QE]
19. [QS]உன் கொடுமை உன்னைத் தண்டிக்கும்; [QE][QS2]உன் பின்மாற்றம் உன்னைக் கண்டிக்கும். [QE][QS]உன் இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டு, [QE][QS2]அவருக்குப் பயமின்றி நடப்பது [QE][QS]எவ்வளவு தீமையும், கசப்புமான செயல் [QE][QS2]என்பதைக் கவனித்து உணர்ந்துகொள்” [QE][QS2]என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். [QE][PBR]
20. [QS]“வெகுகாலத்துக்கு முன்பே உன்னுடைய நுகத்தை முறித்து, [QE][QS2]உன் கட்டுகளை அறுத்துவிட்டேன். [QE][QS2]‘நான் உமக்குப் பணிசெய்யமாட்டேன்’ என்று நீ சொன்னாய். [QE][QS]உண்மையாகவே நீ ஒவ்வொரு உயர்ந்த குன்றின்மேலும், [QE][QS2]ஒவ்வொரு பச்சையான மரத்தின் கீழும், [QE][QS2]ஒரு வேசியாகக் கிடந்தாய். [QE]
21. [QS]நான் உன்னை திறமையானதும், [QE][QS2]தவறாது பலன் தருவதுமான சிறந்த திராட்சைக் கொடியாக நாட்டியிருந்தேனே. [QE][QS]அப்படியிருக்க நீ எப்படி எனக்கு விரோதமாக [QE][QS2]ஒரு பயனற்ற காட்டுத் திராட்சையாக மாறினாய்? [QE]
22. [QS]நீ உன்னை உப்புச் சோடாவினால் கழுவி, [QE][QS2]அதிக சவுக்காரத்தை உபயோகித்தாலும், [QE][QS2]உன் குற்றத்தின் கறை நீங்காமல் என் முன்னே இருக்கிறது” [QE][QS2]என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். [QE]
23. [QS]“ ‘நான் கறைப்படவில்லை; [QE][QS2]பாகால் தெய்வங்களின் பின்னே ஓடவில்லை’ [QE][QS]என்று நீ எப்படிச் சொல்லலாம்? [QE][QS2]பள்ளத்தாக்கில் எவ்வாறு நடந்துகொண்டாய் என்று பார். [QE][QS]நீ செய்தவற்றை எண்ணிப்பார்; [QE][QS2]நீ எல்லா திக்குகளிலும் ஓடித்திரிகிற பெண் ஒட்டகம். [QE]
24. [QS]நீ காமவெறியால் காற்றை மோப்பம் பிடித்துத் திரிந்து, [QE][QS2]பாலைவனத்திற்குப் பழகிப்போன ஒரு காட்டுக் கழுதை. [QE][QS2]அது வேட்கைகொள்ளும் காலத்தில் அதை அடக்குகிறவன் யார்? [QE][QS]அதற்குப்பின் செல்லும் எந்த ஆண் கழுதையும் களைப்படைய வேண்டியதில்லை; [QE][QS2]புணரும் காலத்தில் அவைகள் அதைக் கண்டுகொள்ளும். [QE]
25. [QS]உன் பாதங்கள் வெறுமையாகி உன் தொண்டை வறளும்வரையும் [QE][QS2]அந்நிய தெய்வங்களைத் தேடி ஓடாதே என்றேன். [QE][QS]ஆனால் நீயோ, ‘அது பிரயோசனமற்றது! [QE][QS2]நான் அந்நிய தெய்வங்களையே நேசிக்கிறேன். [QE][QS2]அவற்றிற்குப் பின்னாலேயே நான் போவேன்’ என்று சொன்னாய். [QE][PBR]
26. [QS]“ஒரு திருடன் தான் பிடிபடும்போது அவமானப்படுவதுபோல், [QE][QS2]இஸ்ரயேல் வீடும் அவமானப்பட்டது. [QE][QS]அவர்களும், அவர்களுடைய அரசர்களும், அவர்களின் அதிகாரிகளும், [QE][QS2]ஆசாரியரும், இறைவாக்கு உரைப்போரும் அவமானப்பட்டிருக்கிறார்கள். [QE]
27. [QS]அவர்கள் ஒரு மரத்துண்டைப் பார்த்து, ‘நீ என் தந்தை’ என்றும், [QE][QS2]ஒரு கல்லைப் பார்த்து, ‘நீ என்னைப் பெற்றாய்’ என்றும் சொல்கிறார்கள். [QE][QS]அவர்கள் தங்கள் முகங்களையல்ல, [QE][QS2]முதுகுகளையே எனக்கு திருப்பிக் காட்டினார்கள்; [QE][QS]இப்படியிருந்தும் அவர்கள் ஆபத்திலிருக்கும்போது, [QE][QS2]‘நீர் வந்து எங்களைக் காப்பாற்றும்’ என்று சொல்கிறார்கள். [QE]
28. [QS]அப்படியெனில் நீங்கள் உங்களுக்கு உருவாக்கிக்கொண்ட தெய்வங்கள் எங்கே? [QE][QS2]நீங்கள் ஆபத்திலிருக்கும்போது [QE][QS2]அவை வந்து உங்களைக் காப்பாற்றட்டும்! [QE][QS]ஏனெனில் யூதாவே, உன்னிடம் அநேக பட்டணங்கள் இருப்பதுபோல் [QE][QS2]அநேக தெய்வங்களும் உன்னிடத்தில் உண்டு. [QE][PBR]
29. [QS]“எனக்கெதிராக ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்? [QE][QS2]நீங்கள் எல்லோரும் எனக்கெதிராக கலகம் செய்தீர்கள்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]
30. [QS]“உன் மக்களை நான் வீணாய் தண்டித்தேன்; [QE][QS2]நான் அவர்களை திருத்தியபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. [QE][QS]பசிகொண்ட ஒரு சிங்கத்தைப்போல உங்களுடைய வாளே [QE][QS2]உங்கள் இறைவாக்கினரை இரையாக்கி விழுங்கியது. [QE]
31. [PS]“இந்தச் சந்ததியிலுள்ள நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கவனியுங்கள்: [PE][QS]“நான் இஸ்ரயேலுக்கு ஒரு பாலைவனமாய் இருந்தேனோ? [QE][QS2]அவர்களுக்கு நான் காரிருள் நிறைந்த நாடாக இருந்தேனோ? [QE][QS]‘நாங்கள் சுற்றித்திரிய சுதந்திரமுடையவர்கள்; [QE][QS2]இனி ஒருபோதும் உம்மிடம் வரமாட்டோம்’ என்று ஏன் என்னுடைய மக்கள் சொல்கிறார்கள்? [QE]
32. [QS]ஒரு இளம்பெண் தன் நகைகளை மறந்துவிடுவாளோ, [QE][QS2]ஒரு மணமகள் தனது திருமண ஆடைகளை மறந்துவிடுவாளோ? [QE][QS]ஆயினும் என் மக்களோ [QE][QS2]எண்ணற்ற நாட்களாய் என்னை மறந்தார்கள். [QE]
33. [QS]நீ காதலர்களைத் தேடுவதில் எவ்வளவு கைதேர்ந்தவள்! [QE][QS2]பெண்களில் மிகவும் கேடானவர்களும் உன்னுடைய வழிகளிலிருந்து கற்றுக்கொள்ளலாம். [QE]
34. [QS]உன் உடைகளிலே குற்றமற்ற [QE][QS2]ஏழைகளின் உயிர் இரத்தத்தை மனிதர் காண்கிறார்கள். [QE][QS2]இது, உன் வீட்டை அவர்கள் கன்னமிடும்போது சிந்தப்பட்ட இரத்தமல்ல. [QE][QS]இப்படியெல்லாம் இருக்கும்போதும், [QE]
[QS2]35. நீ, ‘நான் குற்றமற்றவள்; [QE][QS2]அவரும் என்னுடன் கோபமாயிருக்கவில்லை’ என்று சொல்கிறாய். [QE][QS]ஆனால், ‘நான் பாவம் செய்யவில்லை’ என்று நீ சொல்வதால் [QE][QS2]நான் உன்னை நியாயந்தீர்பேன். [QE]
36. [QS]நீ உன் வழிகளை மாற்றிக்கொண்டு, [QE][QS2]அங்குமிங்குமாக ஏன் திரிகிறாய்? [QE][QS]அசீரியாவினால் ஏமாற்றமடைந்ததுபோல, [QE][QS2]எகிப்தினாலும் ஏமாற்றமடைவாய். [QE]
37. [QS]உன் தலையில் கைகளை வைத்துக்கொண்டு, [QE][QS2]அவ்விடத்தையும்விட்டுப் போவாய். [QE][QS]ஏனெனில் நீ நம்பியிருக்கிறவர்களை யெகோவா புறக்கணித்துவிட்டார்; [QE][QS2]அவர்கள் உனக்கு ஒரு உதவியும் செய்யமாட்டார்கள். [QE][PBR] [PBR]