1. {இஸ்ரயேல் இறைவனை கைவிடுதல்} [PS] யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2. “நீ போய் எருசலேமிலுள்ளவர்கள் கேட்கத்தக்கதாய் இதை பிரசித்தப்படுத்து: [PS] “யெகோவா சொல்வது இதுவே: [QBR] “ ‘உன் வாலிப காலத்தில் உனக்கிருந்த பக்தி எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. [QBR2] நீ மணமகளாய் இருந்தபோது என்னில் நீ எவ்வளவாய் அன்பு வைத்தாய். [QBR] பாலைவனத்திலும், [QBR2] விதைக்கப்படாத நிலத்திலும் நீ என்னைப் பின்பற்றினாய். [QBR]
3. இஸ்ரயேல் யெகோவாவுக்குப் பரிசுத்தமும், [QBR2] அவருடைய அறுவடையின் முதற்கனியுமாயிருந்தது. [QBR] இஸ்ரயேலை விழுங்கினவர்கள் யாவரும் குற்றவாளிகள் ஆக்கப்பட்டார்கள், [QBR2] பெருந்துன்பமும் அவர்களை மேற்கொண்டது,’ ” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார்.
4. யாக்கோபின் வீட்டாரே! இஸ்ரயேல் வீட்டு வம்சங்களே! [QBR2] நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். [PE][PS]
5. யெகோவா சொல்வது இதுவே: [QBR] “உங்கள் முற்பிதாக்கள் என்னில் என்ன குற்றத்தைக் கண்டார்கள், [QBR2] அவர்கள் என்னைவிட்டு ஏன் இவ்வளவு தூரமாய் போனார்கள்? [QBR] அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைப் பின்பற்றி, [QBR2] தாங்களும் பயனற்றவர்களானார்கள். [QBR]
6. ‘எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்த யெகோவா எங்கே? [QBR2] பள்ளங்களும், பாலைவனங்களும் உள்ள [QBR] நாடாகிய வறண்ட வனாந்திரத்தின் வழியாக எங்களை வழிநடத்தியவர் எங்கே? [QBR2] ஒருவரும் பிரயாணம் செய்யாததும், ஒருவரும் குடியிராததுமான [QBR] வறட்சியும் இருளும் உள்ள நாட்டின் வழியாக வழிநடத்திய யெகோவா எங்கே?’ [QBR2] என்று அவர்கள் கேட்கவில்லையே? [QBR]
7. நான் உங்களை ஒரு செழிப்பான நாட்டின் பலனையும், [QBR2] அதன் நிறைவான விளைச்சலையும் சாப்பிடும்படி அங்கு கொண்டுவந்தேன். [QBR] ஆனால் நீங்களோ, வந்து என்னுடைய நாட்டைக் கறைப்படுத்தி, [QBR2] என் உரிமைச்சொத்தையும் அருவருப்பாக்கினீர்கள். [QBR]
8. ‘யெகோவா எங்கே?’ [QBR2] என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை; [QBR] வேதத்தை போதிக்கிறவர்கள் என்னை அறியவில்லை; [QBR2] தலைவர்கள் எனக்கெதிராக கலகம் செய்தார்கள். [QBR] இறைவாக்கு உரைப்போர் பயனற்ற விக்கிரகங்களைப் பின்பற்றி, [QBR2] பாகாலின் பெயரால் இறைவாக்கு கூறினார்கள்.
9. “ஆகையினால் திரும்பவும் உனக்கெதிராக குற்றம் சுமத்துகிறேன்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR2] மேலும் அவர், “உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கெதிராகவும் குற்றம் சுமத்துவேன். [QBR]
10. சைப்பிரஸின் கரைக்குக் கடந்துபோய்ப் பாருங்கள். [QBR2] கேதாருக்கு ஆள் அனுப்பி உற்றுக் கவனியுங்கள். [QBR2] இதைப்போன்ற ஒரு காரியம் எப்பொழுதாவது நடந்திருந்ததோ என்று பாருங்கள்: [QBR]
11. எந்த நாடாவது தனது தெய்வங்களை மாற்றியதுண்டா? [QBR2] ஆனால் என் மக்களோ, அவர்களுடைய மகிமையாகிய எனக்குரிய இடத்தில் [QBR] பயனற்ற விக்கிரகங்களை எனக்கு பதிலாக மாற்றிக்கொண்டார்கள். [QBR2] ஆயினும் அவை தெய்வங்கள் அல்லவே. [QBR]
12. வானங்களே, இதைக்குறித்து வியப்படையுங்கள். [QBR2] பெரிதான பயங்கரத்தினால் நடுங்குங்கள்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR]
13. “என் மக்கள் இரண்டு பாவங்களைச் செய்திருக்கிறார்கள்: [QBR] ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய [QBR2] என்னை கைவிட்டார்கள். [QBR] தங்களுக்கென சொந்தமான தொட்டிகளை வெட்டிக்கொண்டார்கள். [QBR2] அவைகளோ தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகள். [QBR]
14. இஸ்ரயேல் ஒரு கூலியாளோ? அவன் பிறப்பிலே அடிமையாகவே பிறந்தானோ? [QBR2] பின் ஏன் அவன் இவ்வாறு கொள்ளைப்பொருளானான்? [QBR]
15. சிங்கங்கள் கர்ஜித்தன; [QBR2] அவைகள் அவனைப் பார்த்து உறுமியது. [QBR] இஸ்ரயேலுடைய நாட்டை அவை பாழாக்கிவிட்டன; [QBR2] அவனுடைய பட்டணங்கள் எரிக்கப்பட்டுக் கைவிடப்பட்டுள்ளன. [QBR]
16. அத்துடன், தக்பானேஸ் மெம்பிஸ் பட்டணங்களின் மனிதர் [QBR2] உன்னுடைய தலையின் உச்சியையும் நொறுக்கினார்கள். [QBR]
17. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வழிநடத்தியபோது, [QBR2] அவரை நீங்கள் கைவிட்டதினால் அல்லவா [QBR2] இவற்றை நீங்களே உங்கள்மேல் கொண்டுவந்தீர்கள்? [QBR]
18. இப்போது நைல் நதியின் [*எபிரெயத்தில் நைல் நதியின் அல்லது சீகோரின் தண்ணீர் சீகோர் என்பது நைல் நதியின் ஒரு கிளை ஆகும்] தண்ணீரைக் குடிக்க [QBR2] ஏன் எகிப்திற்குப் போகிறீர்கள்? [QBR] ஐபிராத்து நதியின் தண்ணீரைக் குடிக்க [QBR2] ஏன் அசீரியாவுக்குப் போகிறீர்கள்? [QBR]
19. உன் கொடுமை உன்னைத் தண்டிக்கும்; [QBR2] உன் பின்மாற்றம் உன்னைக் கண்டிக்கும். [QBR] உன் இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டு, [QBR2] அவருக்குப் பயமின்றி நடப்பது [QBR] எவ்வளவு தீமையும், கசப்புமான செயல் [QBR2] என்பதைக் கவனித்து உணர்ந்துகொள்” [QBR2] என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
20. “வெகுகாலத்துக்கு முன்பே உன்னுடைய நுகத்தை முறித்து, [QBR2] உன் கட்டுகளை அறுத்துவிட்டேன். [QBR2] ‘நான் உமக்குப் பணிசெய்யமாட்டேன்’ என்று நீ சொன்னாய். [QBR] உண்மையாகவே நீ ஒவ்வொரு உயர்ந்த குன்றின்மேலும், [QBR2] ஒவ்வொரு பச்சையான மரத்தின் கீழும், [QBR2] ஒரு வேசியாகக் கிடந்தாய். [QBR]
21. நான் உன்னை திறமையானதும், [QBR2] தவறாது பலன் தருவதுமான சிறந்த திராட்சைக் கொடியாக நாட்டியிருந்தேனே. [QBR] அப்படியிருக்க நீ எப்படி எனக்கு விரோதமாக [QBR2] ஒரு பயனற்ற காட்டுத் திராட்சையாக மாறினாய்? [QBR]
22. நீ உன்னை உப்புச் சோடாவினால் கழுவி, [QBR2] அதிக சவுக்காரத்தை உபயோகித்தாலும், [QBR2] உன் குற்றத்தின் கறை நீங்காமல் என் முன்னே இருக்கிறது” [QBR2] என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். [QBR]
23. “ ‘நான் கறைப்படவில்லை; [QBR2] பாகால் தெய்வங்களின் பின்னே ஓடவில்லை’ [QBR] என்று நீ எப்படிச் சொல்லலாம்? [QBR2] பள்ளத்தாக்கில் எவ்வாறு நடந்துகொண்டாய் என்று பார். [QBR] நீ செய்தவற்றை எண்ணிப்பார்; [QBR2] நீ எல்லா திக்குகளிலும் ஓடித்திரிகிற பெண் ஒட்டகம். [QBR]
24. நீ காமவெறியால் காற்றை மோப்பம் பிடித்துத் திரிந்து, [QBR2] பாலைவனத்திற்குப் பழகிப்போன ஒரு காட்டுக் கழுதை. [QBR2] அது வேட்கைகொள்ளும் காலத்தில் அதை அடக்குகிறவன் யார்? [QBR] அதற்குப்பின் செல்லும் எந்த ஆண் கழுதையும் களைப்படைய வேண்டியதில்லை; [QBR2] புணரும் காலத்தில் அவைகள் அதைக் கண்டுகொள்ளும். [QBR]
25. உன் பாதங்கள் வெறுமையாகி உன் தொண்டை வறளும்வரையும் [QBR2] அந்நிய தெய்வங்களைத் தேடி ஓடாதே என்றேன். [QBR] ஆனால் நீயோ, ‘அது பிரயோசனமற்றது! [QBR2] நான் அந்நிய தெய்வங்களையே நேசிக்கிறேன். [QBR2] அவற்றிற்குப் பின்னாலேயே நான் போவேன்’ என்று சொன்னாய்.
26. “ஒரு திருடன் தான் பிடிபடும்போது அவமானப்படுவதுபோல், [QBR2] இஸ்ரயேல் வீடும் அவமானப்பட்டது. [QBR] அவர்களும், அவர்களுடைய அரசர்களும், அவர்களின் அதிகாரிகளும், [QBR2] ஆசாரியரும், இறைவாக்கு உரைப்போரும் அவமானப்பட்டிருக்கிறார்கள். [QBR]
27. அவர்கள் ஒரு மரத்துண்டைப் பார்த்து, ‘நீ என் தந்தை’ என்றும், [QBR2] ஒரு கல்லைப் பார்த்து, ‘நீ என்னைப் பெற்றாய்’ என்றும் சொல்கிறார்கள். [QBR] அவர்கள் தங்கள் முகங்களையல்ல, [QBR2] முதுகுகளையே எனக்கு திருப்பிக் காட்டினார்கள்; [QBR] இப்படியிருந்தும் அவர்கள் ஆபத்திலிருக்கும்போது, [QBR2] ‘நீர் வந்து எங்களைக் காப்பாற்றும்’ என்று சொல்கிறார்கள். [QBR]
28. அப்படியெனில் நீங்கள் உங்களுக்கு உருவாக்கிக்கொண்ட தெய்வங்கள் எங்கே? [QBR2] நீங்கள் ஆபத்திலிருக்கும்போது [QBR2] அவை வந்து உங்களைக் காப்பாற்றட்டும்! [QBR] ஏனெனில் யூதாவே, உன்னிடம் அநேக பட்டணங்கள் இருப்பதுபோல் [QBR2] அநேக தெய்வங்களும் உன்னிடத்தில் உண்டு.
29. “எனக்கெதிராக ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்? [QBR2] நீங்கள் எல்லோரும் எனக்கெதிராக கலகம் செய்தீர்கள்” [QBR2] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR]
30. “உன் மக்களை நான் வீணாய் தண்டித்தேன்; [QBR2] நான் அவர்களை திருத்தியபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. [QBR] பசிகொண்ட ஒரு சிங்கத்தைப்போல உங்களுடைய வாளே [QBR2] உங்கள் இறைவாக்கினரை இரையாக்கி விழுங்கியது. [PE][PS]
31. “இந்தச் சந்ததியிலுள்ள நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கவனியுங்கள்: [QBR] “நான் இஸ்ரயேலுக்கு ஒரு பாலைவனமாய் இருந்தேனோ? [QBR2] அவர்களுக்கு நான் காரிருள் நிறைந்த நாடாக இருந்தேனோ? [QBR] ‘நாங்கள் சுற்றித்திரிய சுதந்திரமுடையவர்கள்; [QBR2] இனி ஒருபோதும் உம்மிடம் வரமாட்டோம்’ என்று ஏன் என்னுடைய மக்கள் சொல்கிறார்கள்? [QBR]
32. ஒரு இளம்பெண் தன் நகைகளை மறந்துவிடுவாளோ, [QBR2] ஒரு மணமகள் தனது திருமண ஆடைகளை மறந்துவிடுவாளோ? [QBR] ஆயினும் என் மக்களோ [QBR2] எண்ணற்ற நாட்களாய் என்னை மறந்தார்கள். [QBR]
33. நீ காதலர்களைத் தேடுவதில் எவ்வளவு கைதேர்ந்தவள்! [QBR2] பெண்களில் மிகவும் கேடானவர்களும் உன்னுடைய வழிகளிலிருந்து கற்றுக்கொள்ளலாம். [QBR]
34. உன் உடைகளிலே குற்றமற்ற [QBR2] ஏழைகளின் உயிர் இரத்தத்தை மனிதர் காண்கிறார்கள். [QBR2] இது, உன் வீட்டை அவர்கள் கன்னமிடும்போது சிந்தப்பட்ட இரத்தமல்ல. [QBR] இப்படியெல்லாம் இருக்கும்போதும், [QBR2]
35. நீ, ‘நான் குற்றமற்றவள்; [QBR2] அவரும் என்னுடன் கோபமாயிருக்கவில்லை’ என்று சொல்கிறாய். [QBR] ஆனால், ‘நான் பாவம் செய்யவில்லை’ என்று நீ சொல்வதால் [QBR2] நான் உன்னை நியாயந்தீர்பேன். [QBR]
36. நீ உன் வழிகளை மாற்றிக்கொண்டு, [QBR2] அங்குமிங்குமாக ஏன் திரிகிறாய்? [QBR] அசீரியாவினால் ஏமாற்றமடைந்ததுபோல, [QBR2] எகிப்தினாலும் ஏமாற்றமடைவாய். [QBR]
37. உன் தலையில் கைகளை வைத்துக்கொண்டு, [QBR2] அவ்விடத்தையும்விட்டுப் போவாய். [QBR] ஏனெனில் நீ நம்பியிருக்கிறவர்களை யெகோவா புறக்கணித்துவிட்டார்; [QBR2] அவர்கள் உனக்கு ஒரு உதவியும் செய்யமாட்டார்கள். [PE]