1. {#1இறைவனும் விக்கிரகங்களும் } [PS]இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவா உங்களுக்குச் சொல்வதைக் கேளுங்கள்.
2. யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]பிறதேசத்தாரின் வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டாம். [QE][QS2]ஆகாயத்தின் அடையாளங்களைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள், [QE][QS2]நீங்களோ அவற்றிற்கு பயப்படாமல் இருங்கள். [QE]
3. [QS]ஏனெனில் அந்த மக்கள் கூட்டங்களின் வழக்கங்கள் பயனற்றவை. [QE][QS2]அவர்கள் காட்டிலிருக்கிற ஒரு மரத்தை வெட்டுகிறார்கள், [QE][QS2]தச்சன் அதைத் தன் உளியினால் வடிவமைக்கிறான். [QE]
4. [QS]அவர்கள் அதை வெள்ளியாலும், தங்கத்தாலும் அலங்கரித்து, [QE][QS2]சுத்தியலாலும், ஆணிகளாலும் அடித்து [QE][QS2]அது சாய்ந்து விழாதபடி இறுக்குகிறார்கள். [QE]
5. [QS]அவை வெள்ளரித் தோட்டத்தின் பொம்மையைப்போல காணப்படுகின்றன. [QE][QS2]அவர்களின் விக்கிரகங்கள் பேசமாட்டாது, [QE][QS]அவைகளால் நடக்கவும் முடியாது. [QE][QS2]ஆகையால் அவைகளைச் சுமந்து செல்லவேண்டும். [QE][QS]அவைகள் நன்மையானதையோ, [QE][QS2]தீமையானதையோ செய்ய முடியாதவை. [QE][QS2]ஆகையால் அவைகளுக்குப் பயப்படாதிருங்கள் என்றார். [QE][PBR]
6. [QS]யெகோவாவே, உம்மைப்போல் ஒருவருமில்லை. [QE][QS2]நீர் வலிமை மிக்கவர். [QE][QS2]உம்முடைய பெயர் ஆற்றலில் வலிமையுள்ளது. [QE]
7. [QS]நாடுகளின் அரசரே! [QE][QS2]உம்மிடத்தில் பயபக்தியில்லாமல் யார்தான் இருப்பார்கள்? [QE][QS2]இது உமக்கு மட்டுமே உரியது. [QE][QS]நாடுகளிலுள்ள எல்லா ஞானிகள் மத்தியிலும், [QE][QS2]அவர்களுடைய எல்லா அரசுகளுக்குள்ளும், [QE][QS2]உம்மைப் போன்றவர் எவருமே இல்லை. [QE][PBR]
8. [QS]அவர்கள் எல்லோரும் உணர்ச்சியற்றவர்களும் மூடருமாய் இருக்கிறார்கள். [QE][QS2]பயனற்ற மரத்தாலான விக்கிரகங்களால் அவர்கள் போதிக்கப்பட்டிருக்கிறார்கள். [QE]
9. [QS]வெள்ளித்தகடு தர்ஷீசிலிருந்தும், [QE][QS2]தங்கம் ஊப்பாசிலிருந்தும் கொண்டுவரப்படுகின்றன. [QE][QS]கைவினைஞனாலும், கொல்லனாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களுக்கு நீலநிற உடைகளும், [QE][QS2]ஊதாநிற உடைகளும் உடுத்தப்பட்டிருக்கின்றன. [QE][QS2]இவை எல்லாம் சிறந்த தொழிலாளிகளினால் செய்யப்பட்டவை. [QE]
10. [QS]ஆனாலும், யெகோவாவே உண்மையான இறைவன். [QE][QS2]அவரே வாழும் இறைவன்; நித்திய அரசர். [QE][QS]அவர் கோபங்கொள்ளும்போது பூமி நடுங்குகிறது. [QE][QS2]அவருடைய கடுங்கோபத்தை நாடுகள் தாங்கிக்கொள்ள மாட்டாது. [QE]
11. [PS]வானங்களையும், பூமியையும் படைக்காத இந்த தெய்வங்கள் பூமியிலிருந்தும், வானங்களின் கீழிருந்தும் அழிந்துவிடும் என்பதை அவர்களுக்குச் சொல்.[* மூலபிரதியில் இவ்வசனம் அராமிய மொழியில் உள்ளது. ] [PE]
12. [QS]ஆனால் இறைவன் தமது வல்லமையினால் பூமியைப் படைத்து, [QE][QS2]தமது ஞானத்தினால் உலகத்தை நிறுவி, [QE][QS2]தமது அறிவாற்றலினால் வானங்களை விரித்தார். [QE]
13. [QS]அவர் முழங்கும்போது, வானங்களிலுள்ள திரளான தண்ணீர் இரைகின்றன. [QE][QS2]அவர் பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணுகிறார். [QE][QS]அவர் மழையுடன் மின்னலை அனுப்பி, [QE][QS2]தமது களஞ்சியங்களிலிருந்து காற்றை வெளியே கொண்டுவருகிறார். [QE][PBR]
14. [QS]ஒவ்வொரு மனிதனும் உணர்வற்றவனும், அறிவற்றவனுமாயிருக்கிறான். [QE][QS2]ஒவ்வொரு கொல்லனும் தன் விக்கிரகங்களால் வெட்கமடைகிறான். [QE][QS]ஏனெனில் அவனுடைய உருவச்சிலைகள் போலியானவை. [QE][QS2]அவைகளில் சுவாசமில்லை. [QE]
15. [QS]அவைகள் பயனற்றவையாகவும், கேலிக்குரிய பொருட்களாகவும் இருக்கின்றன. [QE][QS2]அவைகளுக்குரிய தண்டனை வரும்போது அவை அழிந்துபோகும். [QE]
16. [QS]யாக்கோபின் பங்காயிருப்பவர் இவைகளைப் போன்றவர் அல்ல. [QE][QS2]ஏனெனில், அவரே எல்லாவற்றையும் படைத்தவர். [QE][QS]அவருடைய உரிமைச்சொத்தான இஸ்ரயேல் கோத்திரத்தையும் அவரே படைத்தார். [QE][QS2]சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர். [QE]
17. {#1வரப்போகும் அழிவு } [QS]கைதிகளாக வாழும் எருசலேம் மக்களே! [QE][QS2]நாட்டைவிட்டுப் போவதற்கு உங்கள் பொருட்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். [QE]
18. [QS]ஏனெனில் யெகோவா சொல்வது இதுவே: [QE][QS2]“அந்த நாட்டில் குடியிருப்பவர்களை [QE][QS2]நான் இப்போதே அகற்றிவிடுவேன். [QE][QS]நான் அவர்கள்மீது துன்பத்தைக் கொண்டுவருவேன். [QE][QS2]அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவார்கள்.” [QE][PBR]
19. [QS]என் காயத்தினால் எனக்கு எவ்வளவு வேதனை! [QE][QS2]என் காயம் குணமாக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. [QE][QS]ஆனால் நானோ, [QE][QS2]“இது என் வருத்தம்; நானே அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்” என எனக்குள் கூறினேன். [QE]
20. [QS]என் கூடாரம் அழிந்துவிட்டது. [QE][QS2]அதன் கயிறுகளும் அறுந்துபோயின. [QE][QS]என் மகன்கள் என்னைவிட்டு போய்விட்டார்கள். அவர்கள் என்னிடம் இல்லை. [QE][QS2]இப்போது என்னுடைய கூடாரத்தைப் போடவோ, [QE][QS2]என் புகலிடத்தை அமைக்கவோ யாருமில்லை. [QE]
21. [QS]மேய்ப்பர்கள் உணர்வற்றவர்களாய் இருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் யெகோவாவிடம் விசாரிக்கிறதில்லை. [QE][QS]ஆகையினால் அவர்கள் செழித்தோங்கவில்லை. [QE][QS2]அவர்கள் மந்தைகளும் சிதறிப்போயின. [QE]
22. [QS]கேளுங்கள்! செய்தி ஒன்று வருகிறது. [QE][QS2]வடநாட்டிலிருந்து ஒரு பெரும் அமளியின் சத்தம் கேட்கிறது. [QE][QS]அது யூதாவின் பட்டணங்களைப் பாழாக்கி, [QE][QS2]அவைகளை நரிகளின் இருப்பிடமாக்கும். [QE]
23. {#1எரேமியாவின் மன்றாட்டு } [QS]யெகோவாவே, ஒரு மனிதனின் உயிர் அவன் வசத்தில் இல்லை என்பதையும், [QE][QS2]தன் வழிகளை அமைத்துக்கொள்வதற்கு மனிதனால் இயலாது என்பதையும் நான் அறிவேன். [QE]
24. [QS]யெகோவாவே, என்னை நீதியுடன் சீர்திருத்தும். [QE][QS2]நான் அழிந்துபோகாதபடி [QE][QS2]உம்முடைய கோபத்தில் தண்டியாதிரும். [QE]
25. [QS]உமது கடுங்கோபத்தை உம்மை ஏற்றுக்கொள்ளாத நாட்டினர்மேலும், [QE][QS2]உமது பெயரைச்சொல்லிக் கூப்பிடாத [QE][QS2]மக்கள்மேலும் ஊற்றும். [QE][QS]ஏனெனில் அவர்கள் யாக்கோபை விழுங்கினார்கள். [QE][QS2]அவனை முற்றிலுமாக விழுங்கி, [QE][QS2]அவனுடைய தாய் நாட்டையும் அழித்துப்போட்டார்கள். [QE]