1. ஆயினும் முன்பு துயரப்பட்டவர்களுக்கு இனிமேல் பயங்கரம் இராது. முந்தின நாட்களில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் அவர் தாழ்த்தினார். ஆனால், வருங்காலத்திலே மத்திய தரைக்கடலிலிருந்து, யோர்தான் அருகேயுள்ள, பிறநாட்டினர் வாழும் கலிலேயாவை மேன்மைப்படுத்துவார். [QBR]
2. இருளில் நடக்கும் மக்கள் [QBR2] ஒரு பேரொளியைக் கண்டார்கள்; [QBR] மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் [QBR2] வெளிச்சம் பிரகாசித்தது. [QBR]
3. நீர் நாட்டைப் பெருகச்செய்து [QBR2] அவர்களுக்கு மகிழ்ச்சியையும் அதிகமாய் கொடுத்திருக்கிறீர். [QBR] அறுவடையின்போது மக்கள் மகிழ்வதைப்போல, [QBR2] அவர்கள் உமது முன்னிலையில் மகிழ்கிறார்கள். [QBR] கொள்ளையைப் பங்கிடும்போதும் மனிதர் மகிழ்வதுபோல, [QBR2] அவர்கள் மகிழ்கிறார்கள். [QBR]
4. மீதியானியர் தோற்கடிக்கப்பட்ட நாளில் செய்ததுபோல, [QBR2] நீர் அவர்களுக்குப் பாரமாயிருந்த [QBR] நுகத்தை உடைத்துப்போட்டீர். [QBR2] அவர்களுடைய தோள்களின் அழுத்திய பாரத்தையும், [QBR2] அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலையும் அகற்றிப்போட்டீர். [QBR]
5. ஒவ்வொரு வீரரும் போரில் பயன்படுத்திய காலணியும், [QBR2] இரத்தத்தில் தோய்ந்த உடைகள் அனைத்தும் [QBR] நெருப்புக்கு இரையாக [QBR2] சுட்டெரிக்கப்படும். [QBR]
6. ஏனெனில், “நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளார், [QBR2] நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார், [QBR2] அரசாட்சி அவர் தோளின்மேல் இருக்கும். [QBR] அவர் அதிசயமான ஆலோசகர், வல்லமையுள்ள இறைவன், [QBR2] நித்திய தகப்பன், சமாதானப்பிரபு” [QBR2] என அழைக்கப்படுவார். [QBR]
7. அவருடைய ஆட்சியின் பெருக்கத்திற்கும் சமாதானத்திற்கும் [QBR2] முடிவே இராது. [QBR] அவர் தாவீதின் சிங்காசனத்தையும் [QBR2] அவனது அரசையும் நிலைநாட்டுவார். [QBR] இதுமுதற்கொண்டு அதை என்றென்றைக்கும் [QBR2] நீதியோடும் நேர்மையோடும் [QBR2] நிலைநிறுத்தி உறுதிப்படுத்துவார். [QBR] எல்லாம் வல்ல யெகோவாவினுடைய வைராக்கியம் [QBR2] இதை நிறைவேற்றும்.
8. {இஸ்ரயேலின் அழிவு} [PS] யெகோவா யாக்கோபுக்கு விரோதமாக ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறார்; [QBR2] அது இஸ்ரயேல்மேல் வரும். [QBR]
9. எப்பிராயீமியரும், சமாரியாவில் குடியிருப்பவர்களுமான [QBR2] எல்லா மக்களும், [QBR] அதை அறிவார்கள். [QBR2] அவர்கள் இருதய இறுமாப்புடனும் பெருமையுடனும், [QBR]
10. “செங்கற்கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, [QBR2] ஆனாலும் திரும்பவும் நாம் நமது கட்டிடங்களை செதுக்கிய கற்களால் கட்டுவோம். [QBR] அத்திமரங்கள் வீழ்த்தப்பட்டன, [QBR2] ஆனால் நாங்கள் அவைகளுக்குப் பதிலாக, கேதுரு மரங்களை நடுவோம்” [QBR2] என்று சொல்கிறார்கள். [QBR]
11. ஆனால் யெகோவா ரேத்சீனின் பகைவர்களை அவர்களுக்கு விரோதமாகப் பலப்படுத்தி, [QBR2] அவர்களுடைய எதிரிகளைத் தூண்டிவிடுவார். [QBR]
12. கிழக்கிலிருந்து சீரியரும் மேற்கிலிருந்து பெலிஸ்தியரும், [QBR2] இஸ்ரயேலரை திறந்த வாயால் விழுங்கியிருக்கிறார்கள். இவையெல்லாம் நடந்தும், அவரது கோபம் தீராமல், [QBR2] அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.
13. எனினும் அந்த மக்கள் தங்களைத் தண்டித்த [QBR2] இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பவில்லை. [QBR2] எல்லாம் வல்ல யெகோவாவைத் தேடவுமில்லை. [QBR]
14. ஆகையால் யெகோவா இஸ்ரயேலின் தலையையும், வாலையும் [QBR2] ஓலையையும், நாணலையும் ஒரே நாளில் வெட்டிப்போடுவார். [QBR]
15. முதியோரும் பிரபலமானோருமே தலை, [QBR2] பொய்யைப் போதிக்கும் இறைவாக்கினரே வால். [QBR]
16. இந்த மக்களை வழிநடத்துகிறவர்கள் அவர்களை நெறிதவறச் செய்தார்கள்; [QBR2] வழிநடத்தப்பட்டவர்கள் அழிந்துபோனார்கள். [QBR]
17. ஆகையால் யெகோவா வாலிபர்களில் மகிழ்வதில்லை, [QBR2] அநாதைகள் மேலும், விதவைகள்மேலும் இரக்கம்கொள்ளவும் இல்லை. [QBR] ஏனெனில் அவர்கள் எல்லோரும் இறைப்பற்று இல்லாதவர்களும் [QBR2] பொல்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். [QBR2] எல்லோருடைய வாயும் மதிகேட்டைப் பேசுகின்றது. இவையெல்லாம் நடந்தும், அவரது கோபம் தீராமல், [QBR2] அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.
18. மெய்யாகவே, கொடுமை நெருப்பைப்போல் எரிகிறது; [QBR2] அது முட்செடியையும், நெருஞ்சில் செடியையும் தீய்த்து விடுகிறது. [QBR] அது அடர்த்தியான புதர்களையும் கொழுத்தி விடுகிறது, [QBR2] அதன் புகை சுருள் சுருளாக மேலே எழும்புகிறது. [QBR]
19. எல்லாம் வல்ல யெகோவாவின் கோபத்தினால் [QBR2] நாடு நெருப்புக்கு இறையாகும்; [QBR] மக்களும் நெருப்புக்கான எரிபொருளாவார்கள், [QBR2] ஒருவனுமே தன் சகோதரனைத் தப்பவிடமாட்டான். [QBR]
20. அவர்கள் வலப்புறத்தில் பறித்துத் தின்றும், [QBR2] பசியோடு இருப்பார்கள். [QBR] இடது புறத்தில் சாப்பிட்டும், [QBR2] திருப்தி அடையாதிருப்பார்கள். [QBR] ஒவ்வொருவனும் தன் சொந்த கரத்தின் மாமிசத்தையுங்கூடத் தின்பான்: [QBR2]
21. மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் தின்பார்கள்; [QBR2] இருவரும் ஒன்றுசேர்ந்து யூதாவை எதிர்ப்பார்கள். இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல், [QBR2] அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது. [PE]