1. {நியாயத்தீர்ப்பும் இரட்சிப்பும்} [PS] “என்னைப்பற்றி விசாரிக்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன். [QBR2] என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள். [QBR] என் பெயரைச் சொல்லி மன்றாடாத மக்களிடம், [QBR2] ‘இதோ நான், இதோ நான்’ என்று சொன்னேன். [QBR]
2. நான் பிடிவாதமான மக்களுக்கு [QBR2] நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன். [QBR] அவர்கள் தமது கற்பனைகளையே பின்பற்றி, [QBR2] நலமற்ற வழியில் நடக்கிறவர்கள். [QBR]
3. அவர்கள் தோட்டங்களில் பலிசெலுத்தி, [QBR2] தங்கள் செங்கல் பீடங்களில் தூபம் எரித்து, [QBR] தொடர்ந்து என்னை என் முகத்துக்கு [QBR2] முன்பாகவே கோபமூட்டுகிறார்கள். [QBR]
4. அவர்கள் கல்லறைகள் மத்தியில் உட்கார்ந்து, [QBR2] இரகசியமாய் விழித்திருந்து ஆவிகளை வணங்கி, இரவைக் கழிக்கிறார்கள். [QBR] பன்றியின் இறைச்சியைச் சாப்பிடுகிறார்கள். [QBR2] அவர்களுடைய பானைகளில் அசுத்த இறைச்சியின் குழம்பு இருக்கிறது. [QBR]
5. அவர்கள் ஒருவருக்கொருவர், ‘தள்ளி நில்லுங்கள்; எனக்கு அருகே வராதீர்கள்; [QBR2] ஏனெனில் நான் உங்களிலும் மிகத் தூய்மையானவன்’ என்கிறார்கள். [QBR] இப்படிப்பட்ட மக்கள் எனது நாசியின் துவாரங்களில் புகையாயும் [QBR2] நாள்முழுவதும் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பாயும் இருக்கிறார்கள்.
6. “பாருங்கள், அது என்முன் எழுதப்பட்டிருக்கிறது: [QBR2] நான் மவுனமாய் இருக்கமாட்டேன், முழுவதுமாக பதில் செய்வேன்; [QBR2] அவர்களுடைய மடியில் அதைத் திருப்பிக் கொட்டுவேன். [QBR]
7. உங்களுடைய பாவங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களின் பாவங்களுக்கும் [QBR2] பதில் செய்வேன்” என்று யெகோவா சொல்கிறார். [QBR] “அவர்கள் மலைகளின்மேல் பலிகளை எரித்து, [QBR2] குன்றுகளின்மேல் என்னை எதிர்த்து நின்றார்கள். [QBR] அவர்களின் முந்திய செயல்களுக்கான பலனை முழுமையாக [QBR2] அவர்களின் மடியில் அளந்துகொடுப்பேன்.” [PE][PS]
8. யெகோவா சொல்வது இதுவே: [QBR] “திராட்சைக் குலையில் சாறு இருக்கையில், [QBR2] ‘அதை அழிக்காதே, [QBR2] அதில் இன்னும் பலன் உண்டு’ என்று மனிதர் சொல்வார்களல்லவா? [QBR] அதுபோல, என் ஊழியரின் நிமித்தம் நான் இப்படிச் செய்வேன். [QBR2] அவர்கள் எல்லோரையும் அழிக்கமாட்டேன். [QBR]
9. யாக்கோபிலிருந்து சந்ததிகளையும், [QBR2] யூதாவிலிருந்து என் மலையை சுதந்தரிப்பவர்களையும் கொண்டுவருவேன்; [QBR] நான் தெரிந்துகொண்ட மக்கள் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள், [QBR2] எனது ஊழியர்கள் அங்கே வசிப்பார்கள். [QBR]
10. என்னைத் தேடும் என் மக்களுக்கு [QBR2] சாரோன் ஆட்டு மந்தைகளின் மேய்ச்சலிடமாகவும், [QBR2] ஆகோர் பள்ளத்தாக்கும் மாட்டு மந்தைகளின் தொழுவமாகவும் இருக்கும்.
11. “நீங்களோ யெகோவாவைவிட்டு, [QBR2] என் பரிசுத்த மலையை மறந்து, [QBR] காத் [*காத் என்றால் அதிர்ஷ்ட தேவதை என்று பொருள்] என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம் செய்து, [QBR2] மேனி தெய்வத்துக்கு திராட்சை இரசத்தைக் கிண்ணங்களில் நிறைக்கிறீர்கள். [QBR]
12. உங்களை நான் வாளுக்கு இரையாக்குவேன், [QBR2] நீங்கள் எல்லோரும் கொல்லப்படுவதற்கு குனிவீர்கள். [QBR] ஏனெனில் நான் கூப்பிட்டேன், நீங்கள் பதிலளிக்கவில்லை; [QBR2] நான் பேசினேன், நீங்கள் கேட்கவில்லை. [QBR] எனது பார்வையில் தீமையைச் செய்து [QBR2] நான் விரும்பாதவற்றைத் தெரிந்துகொண்டீர்கள்.” [PE][PS]
13. ஆகையால் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: [QBR] “எனது ஊழியர்கள் சாப்பிடுவார்கள், [QBR2] நீங்களோ பசியோடிருப்பீர்கள்; [QBR] எனது ஊழியர்கள் குடிப்பார்கள், [QBR2] நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; [QBR] எனது ஊழியர்கள் மகிழ்ச்சியாயிருப்பார்கள், [QBR2] நீங்களோ வெட்கத்திற்குள்ளாவீர்கள். [QBR]
14. எனது ஊழியர்கள் உள்ளத்தின் [QBR2] மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்; [QBR] நீங்களோ இதய வேதனையால் [QBR2] கதறி அழுவீர்கள்; [QBR2] உள்ளமுடைந்தவர்களாய் புலம்புவீர்கள். [QBR]
15. நான் தெரிந்துகொண்டவர்களுக்கு [QBR2] உங்களுடைய பெயரை ஒரு சாபமாய் விட்டுப்போவீர்கள்; [QBR] ஆண்டவராகிய யெகோவா உங்களைக் கொன்றுபோட்டு, [QBR2] ஆனால் தம்முடைய ஊழியருக்கோ அவர் வேறு பெயரைக் கொடுப்பார். [QBR]
16. நாட்டில் ஆசீர்வாதத்தை வேண்டிக்கொள்ளுகிறவன் எவனும், [QBR2] உண்மையின் இறைவனாலேயே ஆசி பெறுவான். [QBR] பூமியில் ஆணையிடுகிறவனும், [QBR2] உண்மையின் இறைவனைக்கொண்டே ஆணையிடுவான். [QBR] ஏனெனில் முந்திய தொல்லைகள் மறக்கப்பட்டு, [QBR2] எனது கண்களிலிருந்து அவை மறைக்கப்படும்.
17. {புதிய வானமும் புதிய பூமியும்} [PS] “இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் [QBR2] உண்டாக்குவேன். [QBR] முந்தியவைகள் நினைக்கப்படுவதுமில்லை, [QBR2] மனதில் தோன்றுவதுமில்லை. [QBR]
18. நான் உண்டாக்கப்போகிறதில் [QBR2] நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூருங்கள். [QBR] ஏனெனில், எருசலேமை அது மகிழ்ச்சிக்குரியதாகவும், [QBR2] அதன் மக்களை சந்தோஷமாகவும் படைப்பேன். [QBR]
19. நானும் எருசலேமில் மகிழ்ந்து, [QBR2] எனது மக்களில் பெருமகிழ்ச்சியடைவேன்; [QBR] அங்கு புலம்பலின் குரலும், [QBR2] அழுகையின் சத்தமும் இனி ஒருபோதும் கேட்பதில்லை.
20. “ஒருசில நாட்கள் மட்டும் வாழும் குழந்தையோ, [QBR2] தனக்குரிய காலம்வரை வாழாத முதியவனோ [QBR2] ஒருபோதும் அங்கு இருக்கமாட்டார்கள். [QBR] நூறு வயதில் இறக்கிறவன் [QBR2] வாலிபன் என்று எண்ணப்படுவான்; [QBR] பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் [QBR2] சபிக்கப்பட்டவன் என்று கருதப்படுவான். [QBR]
21. அவர்கள் வீடுகள் கட்டி அவைகளில் குடியிருப்பார்கள்; [QBR2] அவர்கள் திராட்சைத் தோட்டங்களையும் உண்டாக்கி, [QBR2] அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள். [QBR]
22. அவர்கள் கட்டும் வீடுகளில் இனிமேல் வேறெவரும் வாழமாட்டார்கள், [QBR2] அவர்கள் நடுகிறவைகளில் வேறொருவரும் சாப்பிடவுமாட்டார்கள். [QBR] ஏனெனில் ஒரு மரத்தின் காலத்தைப்போலவே [QBR2] எனது மக்களின் வாழ்நாட்களும் இருக்கும். [QBR] நான் தெரிந்துகொண்ட மக்களும் தங்கள் கைகளின் பலனில் [QBR2] நெடுநாளாய் மகிழ்ச்சிகொள்வார்கள். [QBR]
23. அவர்கள் வீணாக முயற்சி செய்யமாட்டார்கள், [QBR2] அவர்கள் அவலத்துக்குரிய பிள்ளைகளைப் பெறவுமாட்டார்கள். [QBR] ஏனெனில், அவர்கள் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களாயிருப்பார்கள்; [QBR2] அவர்களுடன் அவர்களின் சந்ததிகளும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள். [QBR]
24. அவர்கள் கூப்பிடுமுன்னே நான் பதிலளிப்பேன்; [QBR2] அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் கேட்பேன். [QBR]
25. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றுகூடி மேயும், [QBR2] சிங்கமும் எருதைப்போல் வைக்கோல் தின்னும், [QBR2] பாம்போ புழுதியைத் தின்னும். [QBR] எனது பரிசுத்த மலையெங்கும் [QBR2] அவை ஒரு தீங்கையோ, அழிவையோ செய்யமாட்டாது” [QBR2] என்று யெகோவா சொல்கிறார். [PE]