1. {#1இறைவனுடைய பழிவாங்கும் மற்றும் மீட்கும் நாள் } [QS]ஏதோமிலிருந்து வருகிற இவர் யார்? [QE][QS2]கருஞ்சிவப்பு கறைபடிந்த உடையுடன் போஸ்றா பட்டணத்திலிருந்து வருகிற இவர் யார்? [QE][QS]தனது சிறப்பான அங்கியுடன் [QE][QS2]தமது வல்லமையின் மகத்துவத்தில் எழுந்தருளி வருகிற இவர் யார்? [QE][PBR] [QS]“நான்தான் அவர்! [QE][QS2]நியாயமாய் பேசி, இரட்சிக்க வல்லவர்.” [QE][PBR]
2. [QS]உமது உடைகள் சிவப்பாய், [QE][QS2]திராட்சையைப் பிழியும் ஆலையில் மிதிக்கிறவனுடைய உடையைப்போல் இருப்பது ஏன்? [QE][PBR]
3. [QS]“நான் தனியாய் திராட்சைப் பிழியும் ஆலையை மிதித்தேன்; [QE][QS2]மக்கள் கூட்டங்களில் ஒருவனும் என்னுடன் இருந்ததில்லை. [QE][QS]அவர்களை என் கோபத்தில் மிதித்து, [QE][QS2]என் கடுங்கோபத்தில் அவர்களை நசுக்கினேன்; [QE][QS]அவர்களுடைய இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது, [QE][QS2]என் உடைகளெல்லாம் கறைப்பட்டன. [QE]
4. [QS]பழிவாங்கும் நாள் என் உள்ளத்தில் இருந்தது; [QE][QS2]நான் மீட்டுக்கொள்ளும் வருடம் வந்துவிட்டது. [QE]
5. [QS]நான் பார்த்தேன், அங்கே என் மக்களுக்கு உதவி செய்வார் யாரும் இல்லை; [QE][QS2]ஆதரவு வழங்க ஒருவரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். [QE][QS]எனவே என் சொந்த புயமே வெற்றியைக் கொண்டுவர செயலாற்றியது; [QE][QS2]என் கடுங்கோபமே என்னைத் தாங்கிற்று. [QE]
6. [QS]நான் என் கோபத்தில் மக்களைக் கீழே மிதித்தேன்; [QE][QS2]எனது கடுங்கோபத்தில் அவர்களை வெறிக்கச்செய்து, [QE][QS2]அவர்களின் இரத்தத்தை நிலத்தில் ஊற்றினேன்.” [QE]
7. {#1துதியும் மன்றாட்டும் } [QS]யெகோவாவினுடைய இரக்கத்தையும், [QE][QS2]அவர் புகழப்பட வேண்டிய செயல்களையும் நான் எடுத்துரைப்பேன். [QE][QS2]யெகோவா எங்களுக்குச் செய்த எல்லா நன்மைகளுக்குத் தக்கதாகவும், [QE][QS]அவருடைய இரக்கத்தின்படியும், அவருடைய தயவுகளின் படியும், [QE][QS2]அவர் இஸ்ரயேல் குடும்பத்திற்குச் செய்த அநேக நற்செயல்களையும் [QE][QS2]நான் பறைசாற்றுவேன். [QE]
8. [QS]அவர், “இவர்கள் நிச்சயமாய் எனது மக்கள், [QE][QS2]எனக்கு வஞ்சனை செய்யாத பிள்ளைகள்” என்றார்; [QE][QS2]மேலும், அவர் அவர்களின் இரட்சகரானார். [QE]
9. [QS]அவர்களின் வேதனைகளிலெல்லாம் அவரும் வேதனைப்பட்டார்; [QE][QS2]அவருடைய சமுகத்தின் தூதன் அவர்களை இரட்சித்தான். [QE][QS]தமது அன்பினாலும் கருணையினாலும் அவர்களை மீட்டார்; [QE][QS2]அவர் பூர்வ நாட்களிலெல்லாம் [QE][QS2]அவர்களைத் தூக்கிச் சுமந்தார். [QE]
10. [QS]அப்படியிருந்தும், அவர்கள் கலகம்செய்து, [QE][QS2]அவருடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தினார்கள். [QE][QS]ஆகவே அவர் அவர்களுடைய பகைவராக மாறி, [QE][QS2]தாமே அவர்களை எதிர்த்துப் போராடினார். [QE][PBR]
11. [QS]அப்பொழுது அவருடைய மக்கள்[* அல்லது அவர் நினைவுகூர்ந்தார் ] பூர்வ நாட்களையும், [QE][QS2]மோசேயையும், அவருடைய மக்களையும் நினைவுகூர்ந்தார்கள்; [QE][QS]அவர்களை தனது மந்தையின் மேய்ப்பனுடன் [QE][QS2]தம் மக்களை கடல் வழியே கொண்டுவந்தவர் எங்கே? [QE][QS]அவர்கள் மத்தியில் தமது பரிசுத்த ஆவியானவரை [QE][QS2]அனுப்பியவர் எங்கே? [QE]
12. [QS]தமது மகிமையான வல்லமையின் புயத்தால் [QE][QS2]மோசேயின் வலதுகையைக் கொண்டு, [QE][QS]தமக்கு நித்திய புகழ் உண்டாக்கும்படியாக [QE][QS2]அவர்களுக்கு முன்பாக தண்ணீர்களைப் பிரித்தவர் எங்கே? [QE]
13. [QS]ஆழங்களில் அவர்களை வழிநடத்தியவர் எங்கே? [QE][QS]பாலைவன வெளியில் செல்லும் குதிரையைப்போல [QE][QS2]அவர்கள் இடறவில்லை; [QE]
14. [QS]யெகோவாவின் ஆவியானவர் அவர்களை [QE][QS2]பள்ளத்தாக்கில் இறங்கிச் செல்லும் மந்தையைப்போல், [QE][QS2]இளைப்பாறப் பண்ணினார். [QE][QS]நீர் உமக்கு மகிமையான பெயரை உண்டுபண்ணும்படி, [QE][QS2]உமது மக்களை இவ்வாறு வழிநடத்தினீர். [QE][PBR]
15. [QS]பரலோகத்திலிருந்து கீழே நோக்கும், [QE][QS2]பரிசுத்தமும் மகிமையுமான உமது உயர்ந்த அரியணையிலிருந்து பாரும். [QE][QS]உமது வைராக்கியமும் உமது வல்லமையும் எங்கே? [QE][QS2]உமது கனிவும் இரக்கமும் எங்களிடமிருந்து தடுக்கப்பட்டிருக்கின்றன. [QE]
16. [QS]ஆபிரகாம் எங்களை அறியான், [QE][QS2]இஸ்ரயேலும் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. [QE][QS2]ஆனாலும், நீரே எங்கள் தந்தை; [QE][QS]யெகோவாவே, நீர் நீரே எங்கள் தந்தை. [QE][QS2]பூர்வகாலம் முதல் எங்கள் மீட்பர் என்பதே உமது பெயர். [QE]
17. [QS]யெகோவாவே, நீர் ஏன் எங்களை உமது வழிகளிலிருந்து விலகச் செய்கிறீர்? [QE][QS2]உமக்குப் பயபக்தியாயிராதபடி ஏன் எங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துகிறீர்? [QE][QS]உமது உரிமையாயிருக்கும் கோத்திரங்களான [QE][QS2]உமது ஊழியரின் நிமித்தம் திரும்பி வாரும். [QE]
18. [QS]உமது மக்கள் உமது பரிசுத்த இடத்தைச் சிறிது காலமே சுதந்தரித்திருந்தார்கள்; [QE][QS2]ஆனால் இப்பொழுதோ எங்கள் பகைவர்கள் [QE][QS2]உமது பரிசுத்த இடத்தை மிதித்து அழித்துவிட்டார்கள். [QE]
19. [QS]பூர்வகாலமுதல் நாங்கள் உம்முடையவர்களே; [QE][QS2]ஆனால் நாங்களோ ஒருபோதும் உம்மால் ஆட்சி செய்யப்படாதவர்கள் போலவும், [QE][QS2]உமது பெயரால் ஒருபோதும் அழைக்கப்படாதவர்கள் போலவும் இருக்கிறோம். [QE][PBR] [PBR]