1. {இறைவனுடைய பழிவாங்கும் மற்றும் மீட்கும் நாள்} [PS] ஏதோமிலிருந்து வருகிற இவர் யார்? [QBR2] கருஞ்சிவப்பு கறைபடிந்த உடையுடன் போஸ்றா பட்டணத்திலிருந்து வருகிற இவர் யார்? [QBR] தனது சிறப்பான அங்கியுடன் [QBR2] தமது வல்லமையின் மகத்துவத்தில் எழுந்தருளி வருகிற இவர் யார்? “நான்தான் அவர்! [QBR2] நியாயமாய் பேசி, இரட்சிக்க வல்லவர்.”
2. உமது உடைகள் சிவப்பாய், [QBR2] திராட்சையைப் பிழியும் ஆலையில் மிதிக்கிறவனுடைய உடையைப்போல் இருப்பது ஏன்?
3. “நான் தனியாய் திராட்சைப் பிழியும் ஆலையை மிதித்தேன்; [QBR2] மக்கள் கூட்டங்களில் ஒருவனும் என்னுடன் இருந்ததில்லை. [QBR] அவர்களை என் கோபத்தில் மிதித்து, [QBR2] என் கடுங்கோபத்தில் அவர்களை நசுக்கினேன்; [QBR] அவர்களுடைய இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது, [QBR2] என் உடைகளெல்லாம் கறைப்பட்டன. [QBR]
4. பழிவாங்கும் நாள் என் உள்ளத்தில் இருந்தது; [QBR2] நான் மீட்டுக்கொள்ளும் வருடம் வந்துவிட்டது. [QBR]
5. நான் பார்த்தேன், அங்கே என் மக்களுக்கு உதவி செய்வார் யாரும் இல்லை; [QBR2] ஆதரவு வழங்க ஒருவரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். [QBR] எனவே என் சொந்த புயமே வெற்றியைக் கொண்டுவர செயலாற்றியது; [QBR2] என் கடுங்கோபமே என்னைத் தாங்கிற்று. [QBR]
6. நான் என் கோபத்தில் மக்களைக் கீழே மிதித்தேன்; [QBR2] எனது கடுங்கோபத்தில் அவர்களை வெறிக்கச்செய்து, [QBR2] அவர்களின் இரத்தத்தை நிலத்தில் ஊற்றினேன்.”
7. {துதியும் மன்றாட்டும்} [PS] யெகோவாவினுடைய இரக்கத்தையும், [QBR2] அவர் புகழப்பட வேண்டிய செயல்களையும் நான் எடுத்துரைப்பேன். [QBR2] யெகோவா எங்களுக்குச் செய்த எல்லா நன்மைகளுக்குத் தக்கதாகவும், [QBR] அவருடைய இரக்கத்தின்படியும், அவருடைய தயவுகளின் படியும், [QBR2] அவர் இஸ்ரயேல் குடும்பத்திற்குச் செய்த அநேக நற்செயல்களையும் [QBR2] நான் பறைசாற்றுவேன். [QBR]
8. அவர், “இவர்கள் நிச்சயமாய் எனது மக்கள், [QBR2] எனக்கு வஞ்சனை செய்யாத பிள்ளைகள்” என்றார்; [QBR2] மேலும், அவர் அவர்களின் இரட்சகரானார். [QBR]
9. அவர்களின் வேதனைகளிலெல்லாம் அவரும் வேதனைப்பட்டார்; [QBR2] அவருடைய சமுகத்தின் தூதன் அவர்களை இரட்சித்தான். [QBR] தமது அன்பினாலும் கருணையினாலும் அவர்களை மீட்டார்; [QBR2] அவர் பூர்வ நாட்களிலெல்லாம் [QBR2] அவர்களைத் தூக்கிச் சுமந்தார். [QBR]
10. அப்படியிருந்தும், அவர்கள் கலகம்செய்து, [QBR2] அவருடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தினார்கள். [QBR] ஆகவே அவர் அவர்களுடைய பகைவராக மாறி, [QBR2] தாமே அவர்களை எதிர்த்துப் போராடினார்.
11. அப்பொழுது அவருடைய மக்கள் [*அல்லது அவர் நினைவுகூர்ந்தார்] பூர்வ நாட்களையும், [QBR2] மோசேயையும், அவருடைய மக்களையும் நினைவுகூர்ந்தார்கள்; [QBR] அவர்களை தனது மந்தையின் மேய்ப்பனுடன் [QBR2] தம் மக்களை கடல் வழியே கொண்டுவந்தவர் எங்கே? [QBR] அவர்கள் மத்தியில் தமது பரிசுத்த ஆவியானவரை [QBR2] அனுப்பியவர் எங்கே? [QBR]
12. தமது மகிமையான வல்லமையின் புயத்தால் [QBR2] மோசேயின் வலதுகையைக் கொண்டு, [QBR] தமக்கு நித்திய புகழ் உண்டாக்கும்படியாக [QBR2] அவர்களுக்கு முன்பாக தண்ணீர்களைப் பிரித்தவர் எங்கே? [QBR]
13. ஆழங்களில் அவர்களை வழிநடத்தியவர் எங்கே? [QBR] பாலைவன வெளியில் செல்லும் குதிரையைப்போல [QBR2] அவர்கள் இடறவில்லை; [QBR]
14. யெகோவாவின் ஆவியானவர் அவர்களை [QBR2] பள்ளத்தாக்கில் இறங்கிச் செல்லும் மந்தையைப்போல், [QBR2] இளைப்பாறப் பண்ணினார். [QBR] நீர் உமக்கு மகிமையான பெயரை உண்டுபண்ணும்படி, [QBR2] உமது மக்களை இவ்வாறு வழிநடத்தினீர்.
15. பரலோகத்திலிருந்து கீழே நோக்கும், [QBR2] பரிசுத்தமும் மகிமையுமான உமது உயர்ந்த அரியணையிலிருந்து பாரும். [QBR] உமது வைராக்கியமும் உமது வல்லமையும் எங்கே? [QBR2] உமது கனிவும் இரக்கமும் எங்களிடமிருந்து தடுக்கப்பட்டிருக்கின்றன. [QBR]
16. ஆபிரகாம் எங்களை அறியான், [QBR2] இஸ்ரயேலும் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. [QBR2] ஆனாலும், நீரே எங்கள் தந்தை; [QBR] யெகோவாவே, நீர் நீரே எங்கள் தந்தை. [QBR2] பூர்வகாலம் முதல் எங்கள் மீட்பர் என்பதே உமது பெயர். [QBR]
17. யெகோவாவே, நீர் ஏன் எங்களை உமது வழிகளிலிருந்து விலகச் செய்கிறீர்? [QBR2] உமக்குப் பயபக்தியாயிராதபடி ஏன் எங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துகிறீர்? [QBR] உமது உரிமையாயிருக்கும் கோத்திரங்களான [QBR2] உமது ஊழியரின் நிமித்தம் திரும்பி வாரும். [QBR]
18. உமது மக்கள் உமது பரிசுத்த இடத்தைச் சிறிது காலமே சுதந்தரித்திருந்தார்கள்; [QBR2] ஆனால் இப்பொழுதோ எங்கள் பகைவர்கள் [QBR2] உமது பரிசுத்த இடத்தை மிதித்து அழித்துவிட்டார்கள். [QBR]
19. பூர்வகாலமுதல் நாங்கள் உம்முடையவர்களே; [QBR2] ஆனால் நாங்களோ ஒருபோதும் உம்மால் ஆட்சி செய்யப்படாதவர்கள் போலவும், [QBR2] உமது பெயரால் ஒருபோதும் அழைக்கப்படாதவர்கள் போலவும் இருக்கிறோம். [PE]