1. {சீயோனின் மகிமை} [PS] “எழும்பிப் பிரகாசி, ஏனெனில் உன் ஒளி வந்துவிட்டது, [QBR2] யெகோவாவின் மகிமை உன்மேல் உதிக்கிறது. [QBR]
2. இதோ, பூமியை இருள் மூடியிருக்கிறது, [QBR2] காரிருள் மக்கள் கூட்டங்களைச் சூழ்ந்திருக்கிறது. [QBR] ஆனால் யெகோவா உன்மேல் உதிக்கிறார், [QBR2] அவரின் மகிமை உன்மேல் தோன்றுகிறது. [QBR]
3. பிறநாடுகள் உன் வெளிச்சத்திற்கும், [QBR2] அரசர்கள் உன்மேல் வரும் விடியற்காலையின் பிரகாசத்திற்கும் வருவார்கள்.
4. “உன் கண்களை உயர்த்தி சுற்றிலும் பார்; [QBR2] யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள்; [QBR] உன் மகன்கள் தொலைவிலிருந்து வருகிறார்கள், [QBR2] உன் மகள்கள் தோளில் சுமந்துகொண்டு வரப்படுகிறார்கள். [QBR]
5. அப்பொழுது நீ பார்த்து முகமலர்ச்சி அடைவாய்; [QBR2] உன் இருதயம் மகிழ்ந்து பூரிப்படையும்; [QBR] கடல்களின் திரவியம் உனக்குக் கொண்டுவரப்படும்; [QBR2] நாடுகளின் செல்வமும் உன்னிடம் சேரும். [QBR]
6. ஒட்டகக் கூட்டம் நாட்டை நிரப்பும், [QBR2] மீதியா, ஏப்பாத் நாடுகளின் இளம் ஒட்டகங்கள் உன்னிடம் வரும். [QBR] சேபாவிலிருந்து வரும் அனைவரும் [QBR2] தங்கமும் நறுமண தூபமும் கொண்டுவந்து, [QBR2] யெகோவாவின் புகழை அறிவிக்க வருவார்கள். [QBR]
7. கேதாரின் மந்தைகள் எல்லாம் உன்னிடம் சேர்க்கப்படும், [QBR2] நெபாயோத்தின் கடாக்கள் உனக்குப் பணிபுரியும்; [QBR] அவை என் பலிபீடத்தில் பலிகளாக ஏற்றுக்கொள்ளப்படும், [QBR2] நான் என் மகிமையான ஆலயத்தை அலங்கரிப்பேன்.
8. “மேகங்களைப் போலவும், [QBR2] தம் கூட்டுக்குப் பறந்தோடும் புறாக்களைப்போலவும் பறக்கும் இவர்கள் யார்? [QBR]
9. தீவுகள் எனக்குக் காத்திருக்கின்றன; [QBR2] தர்ஷீசின் கப்பல்கள் முன்னணியில் வருகின்றன. [QBR] தொலைவிலுள்ள உங்கள் மகன்களை [QBR2] அவர்களுடைய வெள்ளியோடும் தங்கத்தோடும் கொண்டுவருகின்றன. [QBR] இஸ்ரயேலின் பரிசுத்தரும் உன் இறைவனுமாகிய யெகோவாவை [QBR2] கனம் பண்ணுவதற்காக இவை வருகின்றன. [QBR2] ஏனெனில் அவர் உன்னைச் சிறப்பால் அலங்கரித்திருக்கிறார்.
10. “அந்நியர் உன் மதில்களை மீண்டும் கட்டியெழுப்புவார்கள், [QBR2] அவர்களுடைய அரசர்கள் உனக்குப் பணிசெய்வார்கள். [QBR] என் கோபத்தினால் நான் உன்னை அடித்தபோதிலும், [QBR2] தயவுடன் நான் உனக்குக் கருணை காட்டுவேன். [QBR]
11. உங்கள் வாசல்கள் எப்பொழுதும் திறந்தே இருக்கும், [QBR2] பகலோ இரவோ, அவை ஒருபோதும் மூடப்படுவதில்லை; [QBR] நாடுகளின் செல்வத்தை மனிதர் கொண்டுவருகையில், [QBR2] அவைகளோடு அரசர்களை வெற்றிப் பவனியுடன் நடத்தி வருவதற்காகவே [QBR2] இவ்வாறு திறந்திருக்கும். [QBR]
12. உனக்குப் பணி செய்யாத நாடோ அல்லது அரசோ அழிந்துபோகும்; [QBR2] அது முற்றிலும் பாழாகிவிடும்.
13. “எனது பரிசுத்த இடத்தை அலங்கரிப்பதற்கு [QBR2] லெபனோனின் மகிமையாகிய தேவதாரு, [QBR] சவுக்கு, புன்னை மரங்கள் ஒன்றுசேர்ந்து உன்னிடம் வந்துசேரும்; [QBR2] நான் எனது பாதபடியை மகிமைப்படுத்துவேன். [QBR]
14. உன்னை ஒடுக்கியோரின் பிள்ளைகள் தலைகுனிந்தபடி உனக்குமுன் வருவார்கள்; [QBR2] உன்னை இகழ்ந்த யாவரும் உன் பாதத்தண்டையில் தலைகுனிந்து நிற்பார்கள். [QBR] அவர்கள் உன்னை யெகோவாவின் பட்டணம் என்றும், [QBR2] இஸ்ரயேலின் பரிசுத்தரின் சீயோன் என்றும் அழைப்பார்கள்.
15. “ஒருவரும் உன் வழியே நடவாமல் [QBR2] நீ வெறுக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்தபோதும், [QBR] எல்லாத் தலைமுறைக்கும் நான் உன்னை [QBR2] நித்திய பெருமையாயும் மகிழ்ச்சியாயும் ஆக்குவேன். [QBR]
16. நீ நாடுகளின் பாலைக் குடித்து, [QBR2] அரச குடும்பத்தவர்களின் மார்பகங்களில் பாலைக் குடிப்பாய். [QBR] அப்பொழுது நீ யெகோவாவாகிய நானே உன் இரட்சகர், உன் மீட்பர், [QBR2] யாக்கோபின் வல்லவர் என்பதை அறிந்துகொள்வாய். [QBR]
17. வெண்கலத்திற்குப் பதிலாக தங்கத்தையும், [QBR2] இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும் நான் உன்னிடம் கொண்டுவருவேன். [QBR] மரத்துக்குப் பதிலாக வெண்கலத்தையும், [QBR2] கற்களுக்குப் பதிலாக இரும்பையும் உன்னிடம் கொண்டுவருவேன். [QBR] சமாதானத்தை உங்கள் ஆட்சித் தலைவனாகவும் [QBR2] நீதியை உங்கள் ஆளுநனாகவும் நான் ஆக்குவேன். [QBR]
18. உன் நாட்டில் இனியொருபோதும் வன்முறைகளின் சத்தம் கேட்கப்படமாட்டாது; [QBR2] உன் எல்லைகளுக்குள் அழிவும் பாழாக்குதலும் ஏற்படமாட்டாது. [QBR] ஆனால் நீ உன் மதில்களை இரட்சிப்பு என்றும், [QBR2] உன் வாசல்களைத் துதி என்றும் அழைப்பாய். [QBR]
19. இனிமேல் பகலில் சூரியன் உனக்கு வெளிச்சமாய் இருக்கமாட்டாது; [QBR2] அல்லது சந்திரனின் வெளிச்சம் உன்மேல் பிரகாசிக்கமாட்டாது. [QBR] ஏனெனில் யெகோவாவே உன்னுடைய நித்திய ஒளியாக இருப்பார்; [QBR2] உன் இறைவனே உன் மகிமையாயிருப்பார். [QBR]
20. உன் சூரியன் ஒருபோதும் மறைவதுமில்லை, [QBR2] உன் சந்திரன் இனிமேல் தேய்வதுமில்லை. [QBR] யெகோவாவே உன் நித்திய ஒளியாய் இருப்பார், [QBR2] உன் துக்க நாட்களும் முடிவடையும். [QBR]
21. அப்பொழுது உன் மக்கள் யாவரும் நீதியானவர்களாய் இருந்து, [QBR2] நாட்டை என்றென்றைக்கும் உரிமையாக்கிக்கொள்வார்கள்; [QBR] அவர்களே எனது மகிமை வெளிப்படும்படியாக [QBR2] என் கரங்களின் வேலையாகவும் [QBR2] நான் நட்ட முளையாகவும் இருக்கிறார்கள். [QBR]
22. உங்களில் சிறியவர் ஆயிரம் பேர்களாவர், [QBR2] அற்பரும் வலிய நாடாவர். [QBR] நானே யெகோவா; [QBR2] அதன் காலத்தில் அதை நானே தீவிரமாகச் செய்வேன்.” [PE]