1. {#1சீயோனின் மகிமை } [QS]“எழும்பிப் பிரகாசி, ஏனெனில் உன் ஒளி வந்துவிட்டது, [QE][QS2]யெகோவாவின் மகிமை உன்மேல் உதிக்கிறது. [QE]
2. [QS]இதோ, பூமியை இருள் மூடியிருக்கிறது, [QE][QS2]காரிருள் மக்கள் கூட்டங்களைச் சூழ்ந்திருக்கிறது. [QE][QS]ஆனால் யெகோவா உன்மேல் உதிக்கிறார், [QE][QS2]அவரின் மகிமை உன்மேல் தோன்றுகிறது. [QE]
3. [QS]பிறநாடுகள் உன் வெளிச்சத்திற்கும், [QE][QS2]அரசர்கள் உன்மேல் வரும் விடியற்காலையின் பிரகாசத்திற்கும் வருவார்கள். [QE][PBR]
4. [QS]“உன் கண்களை உயர்த்தி சுற்றிலும் பார்; [QE][QS2]யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள்; [QE][QS]உன் மகன்கள் தொலைவிலிருந்து வருகிறார்கள், [QE][QS2]உன் மகள்கள் தோளில் சுமந்துகொண்டு வரப்படுகிறார்கள். [QE]
5. [QS]அப்பொழுது நீ பார்த்து முகமலர்ச்சி அடைவாய்; [QE][QS2]உன் இருதயம் மகிழ்ந்து பூரிப்படையும்; [QE][QS]கடல்களின் திரவியம் உனக்குக் கொண்டுவரப்படும்; [QE][QS2]நாடுகளின் செல்வமும் உன்னிடம் சேரும். [QE]
6. [QS]ஒட்டகக் கூட்டம் நாட்டை நிரப்பும், [QE][QS2]மீதியா, ஏப்பாத் நாடுகளின் இளம் ஒட்டகங்கள் உன்னிடம் வரும். [QE][QS]சேபாவிலிருந்து வரும் அனைவரும் [QE][QS2]தங்கமும் நறுமண தூபமும் கொண்டுவந்து, [QE][QS2]யெகோவாவின் புகழை அறிவிக்க வருவார்கள். [QE]
7. [QS]கேதாரின் மந்தைகள் எல்லாம் உன்னிடம் சேர்க்கப்படும், [QE][QS2]நெபாயோத்தின் கடாக்கள் உனக்குப் பணிபுரியும்; [QE][QS]அவை என் பலிபீடத்தில் பலிகளாக ஏற்றுக்கொள்ளப்படும், [QE][QS2]நான் என் மகிமையான ஆலயத்தை அலங்கரிப்பேன். [QE][PBR]
8. [QS]“மேகங்களைப் போலவும், [QE][QS2]தம் கூட்டுக்குப் பறந்தோடும் புறாக்களைப்போலவும் பறக்கும் இவர்கள் யார்? [QE]
9. [QS]தீவுகள் எனக்குக் காத்திருக்கின்றன; [QE][QS2]தர்ஷீசின் கப்பல்கள் முன்னணியில் வருகின்றன. [QE][QS]தொலைவிலுள்ள உங்கள் மகன்களை [QE][QS2]அவர்களுடைய வெள்ளியோடும் தங்கத்தோடும் கொண்டுவருகின்றன. [QE][QS]இஸ்ரயேலின் பரிசுத்தரும் உன் இறைவனுமாகிய யெகோவாவை [QE][QS2]கனம் பண்ணுவதற்காக இவை வருகின்றன. [QE][QS2]ஏனெனில் அவர் உன்னைச் சிறப்பால் அலங்கரித்திருக்கிறார். [QE][PBR] [PBR]
10. [QS]“அந்நியர் உன் மதில்களை மீண்டும் கட்டியெழுப்புவார்கள், [QE][QS2]அவர்களுடைய அரசர்கள் உனக்குப் பணிசெய்வார்கள். [QE][QS]என் கோபத்தினால் நான் உன்னை அடித்தபோதிலும், [QE][QS2]தயவுடன் நான் உனக்குக் கருணை காட்டுவேன். [QE]
11. [QS]உங்கள் வாசல்கள் எப்பொழுதும் திறந்தே இருக்கும், [QE][QS2]பகலோ இரவோ, அவை ஒருபோதும் மூடப்படுவதில்லை; [QE][QS]நாடுகளின் செல்வத்தை மனிதர் கொண்டுவருகையில், [QE][QS2]அவைகளோடு அரசர்களை வெற்றிப் பவனியுடன் நடத்தி வருவதற்காகவே [QE][QS2]இவ்வாறு திறந்திருக்கும். [QE]
12. [QS]உனக்குப் பணி செய்யாத நாடோ அல்லது அரசோ அழிந்துபோகும்; [QE][QS2]அது முற்றிலும் பாழாகிவிடும். [QE][PBR]
13. [QS]“எனது பரிசுத்த இடத்தை அலங்கரிப்பதற்கு [QE][QS2]லெபனோனின் மகிமையாகிய தேவதாரு, [QE][QS]சவுக்கு, புன்னை மரங்கள் ஒன்றுசேர்ந்து உன்னிடம் வந்துசேரும்; [QE][QS2]நான் எனது பாதபடியை மகிமைப்படுத்துவேன். [QE]
14. [QS]உன்னை ஒடுக்கியோரின் பிள்ளைகள் தலைகுனிந்தபடி உனக்குமுன் வருவார்கள்; [QE][QS2]உன்னை இகழ்ந்த யாவரும் உன் பாதத்தண்டையில் தலைகுனிந்து நிற்பார்கள். [QE][QS]அவர்கள் உன்னை யெகோவாவின் பட்டணம் என்றும், [QE][QS2]இஸ்ரயேலின் பரிசுத்தரின் சீயோன் என்றும் அழைப்பார்கள். [QE][PBR]
15. [QS]“ஒருவரும் உன் வழியே நடவாமல் [QE][QS2]நீ வெறுக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்தபோதும், [QE][QS]எல்லாத் தலைமுறைக்கும் நான் உன்னை [QE][QS2]நித்திய பெருமையாயும் மகிழ்ச்சியாயும் ஆக்குவேன். [QE]
16. [QS]நீ நாடுகளின் பாலைக் குடித்து, [QE][QS2]அரச குடும்பத்தவர்களின் மார்பகங்களில் பாலைக் குடிப்பாய். [QE][QS]அப்பொழுது நீ யெகோவாவாகிய நானே உன் இரட்சகர், உன் மீட்பர், [QE][QS2]யாக்கோபின் வல்லவர் என்பதை அறிந்துகொள்வாய். [QE]
17. [QS]வெண்கலத்திற்குப் பதிலாக தங்கத்தையும், [QE][QS2]இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும் நான் உன்னிடம் கொண்டுவருவேன். [QE][QS]மரத்துக்குப் பதிலாக வெண்கலத்தையும், [QE][QS2]கற்களுக்குப் பதிலாக இரும்பையும் உன்னிடம் கொண்டுவருவேன். [QE][QS]சமாதானத்தை உங்கள் ஆட்சித் தலைவனாகவும் [QE][QS2]நீதியை உங்கள் ஆளுநனாகவும் நான் ஆக்குவேன். [QE]
18. [QS]உன் நாட்டில் இனியொருபோதும் வன்முறைகளின் சத்தம் கேட்கப்படமாட்டாது; [QE][QS2]உன் எல்லைகளுக்குள் அழிவும் பாழாக்குதலும் ஏற்படமாட்டாது. [QE][QS]ஆனால் நீ உன் மதில்களை இரட்சிப்பு என்றும், [QE][QS2]உன் வாசல்களைத் துதி என்றும் அழைப்பாய். [QE]
19. [QS]இனிமேல் பகலில் சூரியன் உனக்கு வெளிச்சமாய் இருக்கமாட்டாது; [QE][QS2]அல்லது சந்திரனின் வெளிச்சம் உன்மேல் பிரகாசிக்கமாட்டாது. [QE][QS]ஏனெனில் யெகோவாவே உன்னுடைய நித்திய ஒளியாக இருப்பார்; [QE][QS2]உன் இறைவனே உன் மகிமையாயிருப்பார். [QE]
20. [QS]உன் சூரியன் ஒருபோதும் மறைவதுமில்லை, [QE][QS2]உன் சந்திரன் இனிமேல் தேய்வதுமில்லை. [QE][QS]யெகோவாவே உன் நித்திய ஒளியாய் இருப்பார், [QE][QS2]உன் துக்க நாட்களும் முடிவடையும். [QE]
21. [QS]அப்பொழுது உன் மக்கள் யாவரும் நீதியானவர்களாய் இருந்து, [QE][QS2]நாட்டை என்றென்றைக்கும் உரிமையாக்கிக்கொள்வார்கள்; [QE][QS]அவர்களே எனது மகிமை வெளிப்படும்படியாக [QE][QS2]என் கரங்களின் வேலையாகவும் [QE][QS2]நான் நட்ட முளையாகவும் இருக்கிறார்கள். [QE]
22. [QS]உங்களில் சிறியவர் ஆயிரம் பேர்களாவர், [QE][QS2]அற்பரும் வலிய நாடாவர். [QE][QS]நானே யெகோவா; [QE][QS2]அதன் காலத்தில் அதை நானே தீவிரமாகச் செய்வேன்.” [QE]