1. {#1அந்நியருக்கும் இரட்சிப்பு } [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“நியாயத்தைக் கைக்கொண்டு [QE][QS2]நீதியைச் செய்யுங்கள். [QE][QS]ஏனெனில், எனது இரட்சிப்பு சமீபமாய் இருக்கிறது; [QE][QS2]எனது நீதி விரைவில் வெளிப்படுத்தப்படும். [QE]
2. [QS]இதை செய்கிறவர்களும், இவற்றை உறுதியாய் பற்றிக்கொண்டு கைக்கொண்டு, [QE][QS2]ஓய்வுநாளை தூய்மைக்கேடாக்காமல் கடைபிடித்து, [QE][QS]தீமைசெய்யாதபடி தன் கையை விலக்கிக் காத்துக்கொள்கிற மனிதர்கள் [QE][QS2]ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.” [QE][PBR]
3. [QS]யெகோவாவோடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் அந்நியர், [QE][QS2]“யெகோவா என்னைத் தமது மக்களிடமிருந்து நிச்சயமாகப் பிரித்துவிடுவார்” [QE][QS2]என்று சொல்லாமல் இருக்கட்டும். [QE][QS]அவ்வாறே அண்ணகன் எவனும், “நான் பட்டுப்போன மரந்தானே” [QE][QS2]என்று முறைப்பாடு சொல்லாமலும் இருக்கட்டும். [QE]
4. [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“எனது ஓய்வுநாளை கடைப்பிடித்து, [QE][QS2]எனக்கு விருப்பமானவற்றைத் தெரிந்துகொண்டு [QE][QS2]என் உடன்படிக்கையை உறுதியாய்க் கைக்கொள்கிறவர்களான அண்ணகர்களுக்கு, [QE]
5. [QS]என் ஆலயத்திற்குள்ளும், அதின் சுவர்களிலும் ஒரு நினைவுச் சின்னத்தையும், [QE][QS2]மகன்கள் மற்றும் மகள்களுக்குமுரிய பெயர்களைவிடச் சிறந்த [QE][QS2]ஒரு பெயரையும் கொடுப்பேன். [QE][QS]ஒருபோதும் அழிந்துபோகாதிருக்கிற [QE][QS2]நித்திய பெயரையும் அவர்களுக்குக் கொடுப்பேன். [QE]
6. [QS]யெகோவாவை அண்டியிருந்து, [QE][QS2]அவருக்கு ஊழியம் செய்து, [QE][QS]யெகோவாவினுடைய பெயரை நேசித்து அவரை வழிபடும் பிறதேசத்தார் அனைவருக்கும், [QE][QS2]ஓய்வுநாட்களை தூய்மைக்கேடாக்காமல் [QE][QS]அதைக் கைக்கொண்டு எனது உடன்படிக்கையை [QE][QS2]உறுதியாய் பற்றிக்கொள்ளும் அனைவருக்கும் சொல்வதாவது: [QE]
7. [QS]நான் அவர்களை என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து, [QE][QS2]என் ஜெபவீட்டில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பேன். [QE][QS]அவர்களின் தகனபலிகளும், [QE][QS2]மற்ற பலிகளும் எனது பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். [QE][QS]ஏனெனில், எனது வீடு எல்லா நாடுகளுக்கும் [QE][QS2]ஜெபவீடு என்று அழைக்கப்படும். [QE]
8. [QS]நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரைச் சேர்க்கும் [QE][QS2]ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்: [QE][QS]ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களோடுகூட [QE][QS2]இன்னும் மற்றவர்களையும் நான் கூட்டிச்சேர்ப்பேன்.” [QE]
9. {#1கொடியோருக்கு விரோதமான இறைவன் } [QS]வயலின் மிருகங்களே, எல்லோரும் வாருங்கள். [QE][QS2]காட்டு மிருகங்களே, எல்லோரும் வந்து இரையை விழுங்குங்கள். [QE]
10. [QS]இஸ்ரயேலின் காவலாளிகள் அனைவரும் [QE][QS2]அறிவில்லாத குருடர்; [QE][QS]அவர்கள் எல்லோரும் குரைக்கமாட்டாத [QE][QS2]ஊமையான நாய்கள்; [QE][QS]அவர்கள் படுத்துக் கிடந்து கனவு காண்கிறார்கள், [QE][QS2]நித்திரை செய்யவே விரும்புகிறவர்கள். [QE]
11. [QS]அவர்கள் பெரும் பசிகொண்ட நாய்கள்; [QE][QS2]அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை. [QE][QS]பகுத்தறிவு இல்லாத மேய்ப்பர்கள், [QE][QS2]அவர்கள் எல்லாரும் தங்கள் சொந்த வழிக்குத் திரும்பி, [QE][QS2]ஒவ்வொருவனும் தன் சுய இலாபத்தையே தேடுகிறார்கள். [QE]
12. [QS]ஒவ்வொருவரும் சத்தமிட்டு, “வாருங்கள்; [QE][QS2]நாம் போய் திராட்சைமது கொண்டுவருவோம்; [QE][QS2]நாம் மதுவை நிறையக் குடிப்போம், [QE][QS]நாளைய தினமும் இன்றுபோல் இருக்கும், [QE][QS2]அல்லது இதைவிடச் சிறப்பாகவும் இருக்கும்” என்கிறார்கள். [QE][PBR] [PBR]