தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
ஏசாயா
1. {தாகமுள்ளோருக்கு அழைப்பு} [PS] “ஓ! தாகமாய் இருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் [QBR2] நீங்கள் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; [QBR] பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள், [QBR2] வாங்கி உட்கொள்ளுங்கள். [QBR] வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி [QBR2] திராட்சரசமும் பாலும் வாங்குங்கள். [QBR]
2. உணவுக்கு உதவாதவற்றின்மேல் பணத்தை ஏன் செலவிடுகிறீர்கள்? [QBR2] திருப்தி அளிக்காதவற்றின்மேல் ஏன் பிரயாசப்படுகிறீர்கள்? [QBR] கேளுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள், நல்லதையே சாப்பிடுங்கள். [QBR2] அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுமையான உணவின் நிறைவுகளினால் மகிழும். [QBR]
3. காது கொடுத்துக் கேளுங்கள், என்னிடம் வாருங்கள்; [QBR2] உங்கள் ஆத்துமா வாழ்வதற்காக நான் சொல்வதைக் கேளுங்கள். [QBR] நான் உங்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்வேன்; [QBR2] நான் தாவீதுக்கு வாக்களித்த எனது உண்மையான அன்பை உங்களுக்குக் கொடுப்பேன். [QBR]
4. இதோ, நான் அவனை மக்கள் கூட்டங்களுக்கு ஒரு சாட்சியாகவும், [QBR2] மக்கள் கூட்டங்களுக்குத் தலைவனாகவும், தளபதியாகவும் அவனை வைத்தேன். [QBR]
5. ஆகையால் நிச்சயமாகவே நீங்கள் அறியாத நாடுகளுக்கு அழைப்பாய், [QBR2] உங்களை அறியாத பிறநாடுகள் உங்களிடம் விரைந்து வருவார்கள். [QBR] ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரும் [QBR2] இறைவனுமான உங்கள் யெகோவா [QBR2] உங்களைச் சிறப்பினால் அலங்கரித்துள்ளார்.”
6. அவரைக் கண்டுகொள்ள வாய்ப்புள்ள வேளையில் யெகோவாவைத் தேடுங்கள்; [QBR2] அவர் அருகிலிருக்கையில் அவரைக் கூப்பிடுங்கள். [QBR]
7. கொடியவன் தன் வழிகளையும், [QBR2] தீயவன் தன் எண்ணங்களையும் கைவிடட்டும்; [QBR] அவன் யெகோவாவிடம் திரும்பட்டும், அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவார், [QBR2] எங்கள் இறைவனிடம் திரும்பட்டும், அவர் அவனை தாராளமாக மன்னிப்பார்.
8. “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல; [QBR2] உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல” [QBR2] என்று யெகோவா சொல்லுகிறார். [QBR]
9. “பூமியைப் பார்க்கிலும் வானங்கள் உயர்ந்தனவாய் இருக்கின்றது போலவே, [QBR2] என் வழிகளும் உங்கள் வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவையாய் இருக்கின்றன. [QBR2] என் எண்ணங்களும் உங்கள் எண்ணங்களிலும் மேலானவை. [QBR]
10. மழையும் உறைபனியும் வானத்திலிருந்து கீழே இறங்குகின்றன; [QBR2] அவை பூமிக்கு நீர்ப்பாய்ச்சி, [QBR] அதில் முளையை எழும்பப்பண்ணி வளரச் செய்யாமல் [QBR2] அவை திரும்பிச் செல்வதில்லை. [QBR] எனவே அவை விதைப்பவனுக்கு விதையையும், [QBR2] உண்பவனுக்கு உணவையும் கொடுக்கின்றன. [QBR]
11. என் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தையும் அப்படியே இருக்கிறது: [QBR2] நான் விரும்பியவற்றைச் செய்து, [QBR] நான் அதை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றாமல் [QBR2] அது வெறுமையாய் என்னிடம் திரும்பி வராது. [QBR]
12. நீங்கள் பாபிலோனிலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறி [QBR2] சமாதானத்துடன் வழிநடத்தப்படுவீர்கள்; [QBR] மலைகளும் குன்றுகளும் [QBR2] உங்கள் முன்பாக ஆர்ப்பரித்துப் பாடும்; [QBR] வெளியின் மரங்கள் யாவும் [QBR2] கைகொட்டும். [QBR]
13. முட்செடிகளுக்குப் பதிலாக தேவதாரு மரங்களும், [QBR2] காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச் செடிகளும் முளைக்கும். [QBR] இது யெகோவாவுக்கு புகழ்ச்சியாகவும், [QBR2] அழியாத நித்திய [QBR2] அடையாளமாகவும் இருக்கும்.” [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 55 / 66
ஏசாயா 55:29
தாகமுள்ளோருக்கு அழைப்பு 1 “ஓ! தாகமாய் இருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் நீங்கள் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள், வாங்கி உட்கொள்ளுங்கள். வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி திராட்சரசமும் பாலும் வாங்குங்கள். 2 உணவுக்கு உதவாதவற்றின்மேல் பணத்தை ஏன் செலவிடுகிறீர்கள்? திருப்தி அளிக்காதவற்றின்மேல் ஏன் பிரயாசப்படுகிறீர்கள்? கேளுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள், நல்லதையே சாப்பிடுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுமையான உணவின் நிறைவுகளினால் மகிழும். 3 காது கொடுத்துக் கேளுங்கள், என்னிடம் வாருங்கள்; உங்கள் ஆத்துமா வாழ்வதற்காக நான் சொல்வதைக் கேளுங்கள். நான் உங்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்வேன்; நான் தாவீதுக்கு வாக்களித்த எனது உண்மையான அன்பை உங்களுக்குக் கொடுப்பேன். 4 இதோ, நான் அவனை மக்கள் கூட்டங்களுக்கு ஒரு சாட்சியாகவும், மக்கள் கூட்டங்களுக்குத் தலைவனாகவும், தளபதியாகவும் அவனை வைத்தேன். 5 ஆகையால் நிச்சயமாகவே நீங்கள் அறியாத நாடுகளுக்கு அழைப்பாய், உங்களை அறியாத பிறநாடுகள் உங்களிடம் விரைந்து வருவார்கள். ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரும் இறைவனுமான உங்கள் யெகோவா உங்களைச் சிறப்பினால் அலங்கரித்துள்ளார்.” 6 அவரைக் கண்டுகொள்ள வாய்ப்புள்ள வேளையில் யெகோவாவைத் தேடுங்கள்; அவர் அருகிலிருக்கையில் அவரைக் கூப்பிடுங்கள். 7 கொடியவன் தன் வழிகளையும், தீயவன் தன் எண்ணங்களையும் கைவிடட்டும்; அவன் யெகோவாவிடம் திரும்பட்டும், அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவார், எங்கள் இறைவனிடம் திரும்பட்டும், அவர் அவனை தாராளமாக மன்னிப்பார். 8 “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல; உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல” என்று யெகோவா சொல்லுகிறார். 9 “பூமியைப் பார்க்கிலும் வானங்கள் உயர்ந்தனவாய் இருக்கின்றது போலவே, என் வழிகளும் உங்கள் வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவையாய் இருக்கின்றன. என் எண்ணங்களும் உங்கள் எண்ணங்களிலும் மேலானவை. 10 மழையும் உறைபனியும் வானத்திலிருந்து கீழே இறங்குகின்றன; அவை பூமிக்கு நீர்ப்பாய்ச்சி, அதில் முளையை எழும்பப்பண்ணி வளரச் செய்யாமல் அவை திரும்பிச் செல்வதில்லை. எனவே அவை விதைப்பவனுக்கு விதையையும், உண்பவனுக்கு உணவையும் கொடுக்கின்றன. 11 என் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தையும் அப்படியே இருக்கிறது: நான் விரும்பியவற்றைச் செய்து, நான் அதை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றாமல் அது வெறுமையாய் என்னிடம் திரும்பி வராது. 12 நீங்கள் பாபிலோனிலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறி சமாதானத்துடன் வழிநடத்தப்படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்கள் முன்பாக ஆர்ப்பரித்துப் பாடும்; வெளியின் மரங்கள் யாவும் கைகொட்டும். 13 முட்செடிகளுக்குப் பதிலாக தேவதாரு மரங்களும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச் செடிகளும் முளைக்கும். இது யெகோவாவுக்கு புகழ்ச்சியாகவும், அழியாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.”
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 55 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References