1. [QS]விழித்தெழு சீயோனே, விழித்தெழு, [QE][QS2]உன்னைப் பெலத்தினால் உடுத்திக்கொள்! [QE][QS]எருசலேமே, பரிசுத்த நகரமே, [QE][QS2]உன்னுடைய மகத்துவத்தின் உடைகளை உடுத்திக்கொள். [QE][QS]விருத்தசேதனம் செய்யாதவர்களும், [QE][QS2]அசுத்தரும் இனி உனக்குள் வரமாட்டார்கள். [QE]
2. [QS]எருசலேமே, உன்னிலிருக்கும் தூசியை உதறிப் போடு; [QE][QS2]நீ எழுந்து அரியணையில் அமர்ந்திரு. [QE][QS]சிறைபட்ட சீயோன் மகளே, [QE][QS2]உன் கழுத்தில் இருக்கும் கட்டுகளைக் கழற்றி, உன்னை விடுவித்துக்கொள். [QE]
3. [PS]யெகோவா கூறுவது இதுவே: [PE][QS]நீ பணம் எதுவும் பெறாமல் விற்கப்பட்டாயே, [QE][QS2]“நீ பணமின்றி மீட்கப்படுவாய்.” [QE]
4. [PS]ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: [PE][QS]“ஆரம்பத்தில் எனது மக்கள் எகிப்திலே வாழ்வதற்காகப் போனார்கள்; [QE][QS2]பின்னர் அசீரியர் அவர்களை ஒடுக்கினார்கள். [QE]
5. [PS]“இப்பொழுதோ இங்கு எனக்கு என்ன இருக்கிறது?” என்று யெகோவா கேட்கிறார். [PE][QS]“எனது மக்கள் காரணமில்லாமல் கொண்டுசெல்லப்பட்டார்கள்; [QE][QS2]அவர்களை ஆளுகிறவர்கள் அலறச் செய்கிறார்கள், [QE][QS2]எனது பெயரும் நாளெல்லாம் [QE][QS]தொடர்ந்து தூஷிக்கப்படுகிறது” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]
6. [QS]“ஆகையால், எனது மக்கள் எனது பெயரை அறிந்துகொள்வார்கள்; [QE][QS2]அந்த நாளிலே, [QE][QS]அதை முன்னறிவித்தவர் நானே என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். [QE][QS2]ஆம், அவர் நானே.” [QE][PBR]
7. [QS]நற்செய்தியைக் கொண்டுவருவோரின் பாதங்கள் [QE][QS2]மலைகளின்மீது எவ்வளவு அழகாக இருக்கின்றன! [QE][QS]அவர்கள் சமாதானத்தைப் பிரசித்தப்படுத்தி, [QE][QS2]நல்ல செய்திகளைக் கொண்டுவருவார்கள். [QE][QS2]இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி, [QE][QS]சீயோனிடம், [QE][QS2]“உங்கள் இறைவனே ஆளுகை செய்கிறார்” என்று சொல்வார்கள். [QE]
8. [QS]கேளுங்கள், உங்களுடைய காவலர் தங்கள் குரல்களை எழுப்புகிறார்கள்; [QE][QS2]அவர்கள் ஒன்றுசேர்ந்து ஆனந்த சத்தமிடுகிறார்கள். [QE][QS]யெகோவா சீயோனுக்குத் திரும்பும்போது, [QE][QS2]அதை அவர்கள் தங்கள் சொந்தக் கண்களால் காண்பார்கள். [QE]
9. [QS]எருசலேமின் பாழிடங்களே, [QE][QS2]நீங்கள் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சியின் கீதம் பாடுங்கள். [QE][QS]ஏனெனில் யெகோவா தனது மக்களைத் தேற்றி, [QE][QS2]எருசலேமை மீட்டுக்கொண்டார். [QE]
10. [QS]யெகோவா எல்லா ஜனங்களின் பார்வையிலும் [QE][QS2]தம் பரிசுத்த கரத்தை நீட்டுவார். [QE][QS]அப்பொழுது பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாம் [QE][QS2]நமது இறைவனின் இரட்சிப்பைக் காணுவார்கள். [QE][PBR]
11. [QS]புறப்படுங்கள், புறப்படுங்கள், அங்கிருந்து வெளியேறுங்கள்! [QE][QS2]அசுத்தமான எதையும் தொடாதேயுங்கள்! [QE][QS]யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கும் நீங்கள் [QE][QS2]அங்கிருந்து வெளியேறி சுத்தமாயிருங்கள். [QE]
12. [QS]ஆனால், நீங்கள் அவசரமாய் வெளியேறப்போவதில்லை, [QE][QS2]தப்பியோடிப்போகிறவர்கள் போல ஓடிப்போவதில்லை. [QE][QS]ஏனெனில், யெகோவா உங்கள்முன் செல்வார், [QE][QS2]இஸ்ரயேலின் இறைவனே உங்களுக்குப் பின்னால் காவலாகவும் இருப்பார். [QE]
13. {#1அடியவரின் பாடுகள் } [QS]பாருங்கள், என் ஊழியன் ஞானமாய் செயலாற்றுவார்; [QE][QS2]அவர் எழுப்பப்பட்டு, உயர்த்தப்பட்டு, அதிக மேன்மைப்படுத்தப்படுவார். [QE]
14. [QS]அவரைக்கண்டு பிரமிப்படைந்தவர்கள் அநேகர்; [QE][QS2]அவரது தோற்றம் மனிதர் போலன்றி உருக்குலைந்ததாய் இருந்தது; [QE][QS2]அவரது சாயலும் மனிதர் போலன்றி சிதைக்கப்பட்டிருந்தது. [QE]
15. [QS]அநேக நாடுகள் அவரைக்கண்டு திகைப்பார்கள்; [QE][QS2]அவரின் நிமித்தம் அரசர்களும் தங்கள் வாய்களை மூடிக்கொள்வார்கள். [QE][QS]அவர்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பார்கள், [QE][QS2]அவர்கள் கேள்விப்படாததை அவர்கள் விளங்கிக்கொள்வார்கள். [QE][PBR]