1. {சீயோனுக்கு நித்திய இரட்சிப்பு} [PS] “நீதியைப் பின்பற்றுகிறவர்களே, யெகோவாவைத் தேடுகிறவர்களே, [QBR2] நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள். [QBR] நீங்கள் எந்தக் கற்பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டீர்களோ, [QBR2] எந்தக் கற்குழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டீர்களோ, [QBR2] அந்தக் கற்பாறையானவரை நோக்கிப்பாருங்கள். [QBR]
2. உங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாமையும் [QBR2] உங்களைப் பெற்றெடுத்த சாராளையும் நோக்கிப்பாருங்கள். [QBR] நான் அவனை அழைத்தபோது, அவன் ஒருவனாய் மாத்திரமே இருந்தான்; [QBR2] நான் அவனை ஆசீர்வதித்து அவனை அநேகராகப் பெருகச் செய்தேன். [QBR]
3. மெய்யாகவே யெகோவா சீயோனைத் தேற்றுவார், [QBR2] அவளுடைய பாழான இடங்களையெல்லாம் ஆறுதல் செய்வார்; [QBR] அவர் அவளுடைய பாலைவனங்களை ஏதேனைப் போலவும், [QBR2] அவளுடைய பாழிடங்களை யெகோவாவின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார். [QBR] சந்தோஷமும் மகிழ்ச்சியும் அங்கு காணப்படும், [QBR2] நன்றி செலுத்துதலும் பாடலின் சத்தமும் அங்கு இருக்கும்.
4. “என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; [QBR2] என் நாடே, கேளுங்கள்: [QBR] சட்டம் என்னிலிருந்து வெளிப்படும்: [QBR2] என் நீதி நாடுகளுக்கு ஒரு வெளிச்சமாக இருக்கும். [QBR]
5. என் நீதி சமீபமாயிருக்கிறது; [QBR2] என் இரட்சிப்பு வெளிப்படுகிறது, [QBR2] என் புயம் நாடுகளுக்கு நீதியைக் கொண்டுவரும். [QBR] தீவுகள் என்னை நோக்கி, [QBR2] என் கரத்திற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும். [QBR]
6. உங்கள் கண்களை வானங்களை நோக்கி உயர்த்துங்கள், [QBR2] கீழிருக்கும் பூமியையும் பாருங்கள்; [QBR] வானங்கள் புகையைப்போல் மறையும், [QBR2] பூமியும் பழைய உடையைப்போல் கந்தையாகும்; [QBR2] அங்கு குடியிருப்போரும் ஈக்களைப்போல் சாவார்கள். [QBR] ஆனால் எனது இரட்சிப்போ என்றென்றைக்கும் நிலைநிற்கும், [QBR2] எனது நீதி ஒருபோதும் தவறுவதில்லை.
7. “நியாயத்தை அறிந்தவர்களே, [QBR2] எனது சட்டத்தை மனதில் வைத்திருக்கும் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள். [QBR] மனிதரின் நிந்தனைக்குப் பயப்படாதீர்கள்; [QBR2] அவர்களின் ஏளனப் பேச்சுக்களால் திகிலடையாதீர்கள். [QBR]
8. பொட்டுப்பூச்சி உடையை அரித்து, [QBR2] ஆட்டு மயிரைத் தின்பதுபோல் அவர்களைத் தின்னும். [QBR] ஆனால் என் நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், [QBR2] எனது இரட்சிப்பும் எல்லா தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கும்.”
9. யெகோவாவின் புயமே, விழித்தெழு, விழித்தெழு, [QBR2] பெலத்தால் உன்னை உடுத்திக்கொள்! [QBR] கடந்த நாட்களிலும் பழைய தலைமுறைகளிலும் [QBR2] எழுந்ததுபோல் விழித்தெழு. [QBR] ராகாப் [*ராகாப் பண்டைய இலக்கியங்களில் ஒழிங்கீனத்தைக் குறிக்கும் புராண கடல் அசுரனின் பெயராகும். இங்கே எகிப்தைக் குறிக்கும் கவிதைப் பெயராக ராகாப் பயன்படுத்தப்பட்டுள்ளது.] என்னும் வலுசர்ப்பத்தைத் துண்டுதுண்டாக வெட்டியது நீரல்லவா? [QBR2] அந்த மிருகத்தை ஊடுருவக் குத்தியதும் நீரல்லவா? [QBR]
10. கடலையும் ஆழங்களின் தண்ணீரையும் [QBR2] வற்றவைத்தது நீரல்லவா? [QBR] மீட்கப்பட்டவர்கள் கடந்துசெல்லும்படி கடலின் [QBR2] பெரிய ஆழங்களில் பாதை அமைத்ததும் நீரல்லவா? [QBR]
11. யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள். [QBR2] அவர்கள் பாடலுடன் சீயோனுக்குள் செல்வார்கள்; [QBR2] நித்திய மகிழ்ச்சி அவர்களுடைய தலையின்மேலிருக்கும். [QBR] மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைவார்கள், [QBR2] துக்கமும் பெருமூச்சும் பறந்தோடிவிடும்.
12. “நான், நானே உன்னைத் தேற்றுகிறவர். [QBR2] இறக்கும் மனிதனுக்கும், [QBR2] புல்லாயிருக்கும் மானிடருக்கும் பயப்படுவதற்கு நீ யார்? [QBR]
13. வானங்களை விரித்து, [QBR2] பூமியின் அஸ்திபாரங்களை அமைத்த, [QBR2] உன் படைப்பாளரான யெகோவாவை நீ மறந்திருக்கிறாயே! [QBR] அதனால் அழிக்கக் காத்திருக்கும் [QBR2] ஒடுக்குகிறவனுடைய கோபத்திற்கு தினமும் [QBR2] இடைவிடாமல் நீ அஞ்சுகிறாயே! [QBR] ஒடுக்குபவனின் கடுங்கோபம் எங்கே? [QBR2]
14. பயந்து அடங்கியிருக்கும் கைதிகள் விரைவில் விடுதலையாக்கப்படுவார்கள்; [QBR] தங்கள் இருட்டறையில் அவர்கள் சாகமாட்டார்கள், [QBR2] அவர்களின் உணவும் குறைவுபடாது. [QBR]
15. ஏனெனில் உன் இறைவனாகிய யெகோவா நானே, [QBR2] நான் கடலைக் கலக்க அதன் அலைகள் இரைகின்றன, [QBR2] சேனைகளின் யெகோவா என்பது என் பெயர். [QBR]
16. வானங்களை அதினதின் இடத்தில் நிலைப்படுத்தி, [QBR2] பூமியின் அஸ்திபாரங்களையும் அமைத்தேன். [QBR] சீயோனிடம், ‘நீங்களே எனது மக்கள்’ என்று சொன்னேன்” [QBR2] நான் என் வார்த்தைகளை உன் வாயில் அருளி, [QBR2] என் கரத்தின் நிழலால் உன்னை மூடிக்கொண்டேன்.
17. {யெகோவாவின் கோபம்} [PS] விழித்தெழு, விழித்தெழு! [QBR2] எருசலேமே, விழித்தெழு, [QBR] யெகோவாவின் கரத்திலிருக்கும் [QBR2] அவரது கோபத்தின் பாத்திரத்தில் குடித்தவளே! [QBR] மனிதரைத் தள்ளாடவைக்கும் பாத்திரத்தை [QBR2] மண்டிவரை குடித்தவளே! நீ எழுந்திரு. [QBR]
18. அவள் பெற்றெடுத்த எல்லா மக்களிலும் [QBR2] அவளுக்கு வழிகாட்ட பிள்ளைகள் ஒருவரும் இருக்கவில்லை; [QBR] அவள் வளர்த்த எல்லா பிள்ளைகளிலும் [QBR2] அவளைக் கையில் பிடித்துச் செல்லக்கூட ஒருவரும் இல்லை. [QBR]
19. இந்த இரண்டு பெரும் துன்பங்களும் உன்மேல் வந்திருக்கின்றன; [QBR2] உன்னைத் தேற்றுபவர் யார்? [QBR] அழிவும், பாழும், பஞ்சமும், வாளும் உன்மேல் வந்திருக்கின்றன. [QBR2] உன்னை ஆறுதல்படுத்துபவர் யார்? [QBR]
20. உனது பிள்ளைகள் சோர்ந்துவிட்டார்கள்; [QBR2] ஒவ்வொரு தெருவின் முகப்பிலும், [QBR2] வலையில் அகப்பட்ட கலைமானைப்போல் கிடக்கிறார்கள். [QBR] அவர்கள் யெகோவாவின் கோபத்தாலும், [QBR2] உங்கள் இறைவனின் கண்டனத்தாலும் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.
21. ஆகவே, துன்புறுத்தப்பட்டவளே, [QBR2] மதுபானம் குடிக்காமலே வெறிகொண்டிருக்கிறவளே, இதைக் கேள். [QBR]
22. உன் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே, [QBR2] தமது மக்களுக்காக வாதாடும் உன் இறைவன் கூறுகிறார்: [QBR] “உன்னை மதிமயக்கும் பாத்திரத்தை [QBR2] உன் கைகளிலிருந்து எடுத்துக்கொண்டேன்; [QBR] எனது கோபத்தின் பாத்திரத்தில் [QBR2] நீ இனி ஒருபோதும் குடிக்கமாட்டாய். [QBR]
23. உன்னை வேதனைப்படுத்தியவர்களின் கைகளில் அப்பாத்திரத்தை நான் வைப்பேன். [QBR2] அவர்கள் உன்னிடம், ‘நாங்கள் உன்மீது நடக்கும்படி நிலத்தில் வீழ்ந்துகிட’ [QBR2] என்று சொல்லியிருந்தார்கள். [QBR] நீயும் உன் முதுகை நிலத்தைப் போலாக்கினாய், [QBR2] மிதித்து நடக்கும்படி அதை ஒரு வீதியைப்போலவும் ஆக்கினாயே.” [PE]