1. {திராட்சைத் தோட்டத்திற்கு பாடல்} [PS] என் அன்புக்குரியவருக்காக [QBR2] அவருடைய திராட்சைத் தோட்டத்தைப்பற்றி ஒரு பாட்டுப் பாடுவேன்: [QBR] என் அன்புக்குரியவருக்கு செழிப்பான குன்றின்மேல் [QBR2] திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. [QBR]
2. அவர் அதைக் கொத்தி கற்களை நீக்கிப் பண்படுத்தினார்; [QBR2] உயர்ந்தரக திராட்சைக் கொடிகளை அங்கு நட்டார். [QBR] அவர் அதற்கு நடுவிலே காவற்கோபுரம் ஒன்றைக் கட்டி, [QBR2] திராட்சை இரசம் பிழியும் ஆலையொன்றையும் அமைத்தார். [QBR] அது நல்ல திராட்சைப் பழங்களைத் தருமென்று எதிர்பார்த்தார், [QBR2] ஆனால் அதுவோ புளிப்பான பழங்களையே கொடுத்தது.
3. “எருசலேம் நகரில் வசிப்போரே, யூதா மனிதர்களே, [QBR2] இப்போது நீங்களே எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் [QBR2] இடையில் நியாயந்தீருங்கள். [QBR]
4. என் திராட்சைத் தோட்டத்திற்கு நான் செய்ததைவிடக் [QBR2] கூடுதலாக என்ன செய்திருக்கலாம்? [QBR] நல்ல திராட்சைப் பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, [QBR2] அது ஏன் புளிப்பான பழங்களைக் கொடுத்தது? [QBR]
5. ஆகவே நான் என் திராட்சைத் தோட்டத்திற்கு [QBR2] இப்போது செய்யப்போவதைச் சொல்வேன்: [QBR] அதன் வேலியை நீக்கிவிடுவேன், [QBR2] அது அழிந்துவிடும். [QBR] அதன் மதில்களை உடைத்துவிடுவேன், [QBR2] அது மிதிக்கப்படும். [QBR]
6. அதன் கிளைகளை நறுக்காமலும், களையைக் கொத்தி எடுக்கப்படாமலும் [QBR2] அதைப் பாழ்நிலமாக விட்டுவிடுவேன். [QBR2] முட்செடிகளும் நெருஞ்சில் செடிகளும் அங்கு வளரும். [QBR] அங்கு மழை பெய்யாதபடி [QBR2] நான் மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.”
7. எல்லாம் வல்ல யெகோவாவின் திராட்சைத் தோட்டம் [QBR2] இஸ்ரயேல் குடும்பமே. [QBR] யூதாவின் மனிதர்தான் [QBR2] அவரின் மகிழ்ச்சியின் தோட்டம். [QBR] அவர் நீதியை எதிர்பார்த்தார், ஆனால் இரத்தம் சிந்துதலையே கண்டார்; [QBR2] நியாயத்தை எதிர்பார்த்தார், ஆனால் முறைப்பாட்டையே கேட்டார்.
8. {சாபங்களும் நியாயத்தீர்ப்பும்} [PS] நாட்டில் பிறருக்கு இடம் இல்லாமல் தாங்கள்மட்டும், [QBR2] வீட்டுடன் வீட்டைச் சேர்த்து, [QBR] வயலுடன் வயலை இணைத்து வாழ்கிறவர்களே, [QBR2] உங்களுக்கு ஐயோ! [PE][PS]
9. எல்லாம் வல்ல யெகோவா என் காது கேட்க அறிவித்ததாவது: [QBR] “நிச்சயமாகவே அந்த பெரும் வீடுகள் பாழாகும், [QBR2] அழகிய மாளிகைகள் குடியிருப்பாரின்றி விடப்படும். [QBR]
10. பத்து ஏக்கர் [*ஏக்கர் என்பது பத்து ஏர் அதாவது ஒரே நாளில் பத்து அணிகள் எருதுகளால் உழப்படும் நிலத்தின் பரப்பளவு] திராட்சைத் தோட்டம் ஒரு குடம் [†எபிரெயத்தில், பாத் இது 22 லிட்டர்] திராட்சை இரசத்தையே உற்பத்தி செய்யும். [QBR2] பத்து கலம் [‡எபிரெயத்தில், ஓமர் 160 கிலோகிராம்] விதை விதைத்தால் ஒரு கலம் [§எபிரெயத்தில், எப்பா 16 கிலோகிராம்] அளவு தானியத்தை மட்டுமே கொடுக்கும்.”
11. அதிகாலையில் எழுந்து [QBR2] மதுபானத்தை நாடி அலைந்து, [QBR] இரவுவரை தரித்திருந்து வெறிக்கும்வரை [QBR2] குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஐயோ, கேடு! [QBR]
12. அவர்கள் யாழோடும், வீணையோடும், தம்புராக்களோடும், குழலோடும், [QBR2] மதுவோடும் விருந்து கொண்டாடுகிறார்கள். [QBR] ஆனால் அவர்கள் யெகோவாவின் செயல்களை நினைப்பதோ, [QBR2] அவரின் கரம் செய்தவற்றை நோக்கிப் பார்ப்பதோ இல்லை. [QBR]
13. எனவே எனது மக்கள் அறிவின்மையால் [QBR2] நாடுகடத்தப்படுவார்கள்; [QBR] அவர்களின் பெருமதிப்பிற்குரியவர்கள் பட்டினியால் சாவார்கள், [QBR2] பொதுமக்கள் தாகத்தால் நாவறண்டு போவார்கள். [QBR]
14. எனவே பாதாளம் தன் தொண்டையை விரிவாக்கி, [QBR2] தன் வாயை அளவின்றித் திறக்கிறது. [QBR] உயர்குடி மக்களும், பொதுமக்களும் அவர்களோடுகூட சண்டைக்காரரும், [QBR2] வெறியரும் அதற்குள் இறங்குவார்கள். [QBR]
15. இப்படியாக மனிதன் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படுவான். [QBR2] மனுக்குலமும் தாழ்த்தப்படும். [QBR2] அகங்காரரின் கண்களும் தாழ்த்தப்படும். [QBR]
16. ஆனால் எல்லாம் வல்ல யெகோவா தமது நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, [QBR2] பரிசுத்த இறைவனும் தமது நீதியினால் தம்மைப் பரிசுத்தராக வெளிப்படுத்துவார். [QBR]
17. அப்பொழுது செம்மறியாடுகள் தங்கள் மேய்ச்சல் இடங்களில் மேயும். [QBR2] செல்வந்தரின் பாழடைந்த இடங்களை அந்நியர்கள் அனுபவிப்பார்கள்.
18. வஞ்சகத்தின் கயிறுகளால் பாவத்தையும், [QBR2] வண்டியின் கயிறுகளால் கொடுமையையும் இழுத்து, ஐயோ கேடு! [QBR]
19. “நாம் காணத்தக்கதாக, [QBR2] இறைவன் துரிதமாய் வந்து [QBR2] தமது வேலையை விரைவாகச் செய்யட்டும். [QBR] நாம் அறியத்தக்கதாக, [QBR2] இஸ்ரயேலரின் பரிசுத்தர் தமது திட்டத்தை வெளிப்படுத்தி, [QBR2] அதை நிறைவேற்றட்டும்” என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ, கேடு!
20. தீமையை நன்மையென்றும், [QBR2] நன்மையைத் தீமையென்றும் சொல்லி, [QBR] இருளை ஒளியாக்கி, [QBR2] ஒளியை இருளாக்கி, [QBR] கசப்பை இனிப்பாக்கி, [QBR2] இனிப்பை கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ, கேடு!
21. தங்கள் கண்களுக்கு ஞானியாக இருப்பவர்களுக்கும், [QBR2] தங்கள் கணிப்பில் புத்திசாலியாக இருப்பவர்களுக்கும் ஐயோ, கேடு!
22. திராட்சைமது குடிப்பதில் வீரரும், [QBR2] மதுபானம் கலக்குவதில் வல்லவர்களுமாயிருந்து, [QBR]
23. இலஞ்சத்துக்காகக் குற்றவாளியை விடுவித்து, [QBR2] குற்றமற்றவனுக்கு நீதியை வழங்க மறுக்கிறவர்களுக்கு ஐயோ, கேடு! [QBR]
24. ஆகவே அக்கினி ஜூவாலை வைக்கோலைச் சுட்டெரிப்பதுபோலவும், [QBR2] காய்ந்த புல் நெருப்பில் எரிந்து மடிவதுபோலவும், [QBR] அவர்களின் வேர்கள் அழுகி, [QBR2] பூக்கள் புழுதிபோல் பறந்துவிடும். [QBR] ஏனெனில் அவர்கள் எல்லாம் வல்ல யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து, [QBR2] இஸ்ரயேலின் பரிசுத்தருடைய வார்த்தையை இழிவுபடுத்தினார்கள். [QBR]
25. அதனால் யெகோவாவின் கோபம் தம்முடைய மக்களுக்கு விரோதமாய் பற்றியெரிகிறது: [QBR2] அவர் தமது கரத்தை உயர்த்தி, அவர்களை அடித்து வீழ்த்துகிறார். [QBR] மலைகள் நடுநடுங்கின, [QBR2] அவர்களுடைய பிரேதங்கள் தெருக்களில் குப்பைபோல் கிடக்கின்றன. இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல், [QBR2] அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.
26. அவர் தூரத்திலுள்ள நாடுகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, [QBR2] பூமியின் கடைசியிலுள்ளவர்களைக் கூவி அழைக்கிறார். [QBR] இதோ, அவர்கள் வருகிறார்கள், [QBR2] விரைந்து வேகமாய் வருகிறார்கள்! [QBR]
27. அவர்களில் ஒருவரேனும் களைப்புறுவதுமில்லை, இடறிவிழுவதுமில்லை; [QBR2] ஒருவரும் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை; [QBR] அவர்களின் இடைப்பட்டி தளர்த்தப்படுவதுமில்லை, [QBR2] அவர்களின் செருப்புகளின் தோல்வார் ஒன்றும் அறுந்துபோவதும் இல்லை. [QBR]
28. அவர்களுடைய அம்புகள் கூரானவை; [QBR2] வில்லுகள் நாணேற்றப்பட்டவை. [QBR] அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கற்கள் போலவும், [QBR2] தேர்ச் சக்கரங்கள் சுழற்காற்றைப் போலவும் காணப்படுகின்றன. [QBR]
29. அவர்களின் கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போன்றது, [QBR2] அவர்கள் இளஞ்சிங்கத்தைப்போல் கெர்ச்சிக்கிறார்கள்; [QBR] அவர்கள் தங்கள் இரையைப் பற்றிக்கொள்ளும்போது உறுமுகிறார்கள்; [QBR2] அதை விடுவிக்கிறவன் இல்லாமல், அவர்கள் தாங்கள் பிடித்ததைக் கொண்டுபோகிறார்கள். [QBR]
30. அந்நாளிலே அவர்கள், கடலின் இரைச்சல்போல் [QBR2] அவர்களுக்கு விரோதமாக இரைவார்கள். [QBR] ஒருவன் அந்த நாட்டைப் பார்க்கும்போது [QBR2] இருளையும் துன்பத்தையுமே காண்பான்; [QBR2] வெளிச்சமும் மேகங்களால் இருளாக்கப்படும். [PE]