1. {#1யெகோவாவின் ஊழியன் } [QS]தீவுகளே, நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; [QE][QS2]தூரத்திலுள்ள நாடுகளே, நீங்கள் இதைக் கேளுங்கள்: [QE][QS]நான் கர்ப்பத்திலிருந்தபோதே யெகோவா என்னை அழைத்தார்; [QE][QS2]என் தாயின் வயிற்றில் இருக்கும்போதே என் பெயரைச் சொல்லி கூப்பிட்டார். [QE]
2. [QS]அவர் எனது வாயை ஒரு கூரிய வாளைப்போல் ஆக்கினார், [QE][QS2]தமது கரத்தின் நிழலிலே என்னை மறைத்தார்; [QE][QS]என்னைக் கூர்மையான அம்பாக்கி, [QE][QS2]தமது அம்பாறத் துணியில் மறைத்து வைத்தார். [QE]
3. [QS]“இஸ்ரயேலே, நீ என் ஊழியக்காரன், [QE][QS2]எனது சிறப்பை உன்னிலே வெளிப்படுத்துவேன்” என்று அவர் என்னிடம் சொன்னார். [QE]
4. [QS]ஆனால் நானோ, “வீணாக உழைக்கிறேன்; [QE][QS2]எனது பெலனை பயனற்றவற்றிற்கும் வீணானவற்றிற்கும் செலவழிக்கிறேன். [QE][QS]அப்படியிருந்தும், எனக்குரியது யெகோவாவின் கையிலே இருக்கிறது; [QE][QS2]என்னுடைய வெகுமதியும் எனது இறைவனிடமே இருக்கிறது” என்றேன். [QE][PBR]
5. [QS]இப்பொழுது யெகோவா சொல்வதாவது: [QE][QS2]யாக்கோபைத் தன்னிடம் திரும்பக் கொண்டுவரும்படியாகவும், [QE][QS]இஸ்ரயேலர்களைத் தன்னிடம் கூட்டிச் சேர்க்கும்படியாகவும் [QE][QS2]அவருடைய பணியாளனாய் இருக்கும்படி என்னைக் கருப்பையில் உருவாக்கியவர் அவரே. [QE][QS]யெகோவாவினுடைய பார்வையில் நான் கனம் பெற்றேன்; [QE][QS2]என் இறைவனே என் பெலனாயிருக்கிறார். [QE]
6. [QS]அவர் சொல்வதாவது: [QE][QS]“யாக்கோபின் கோத்திரங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்காகவும், [QE][QS2]இஸ்ரயேலில் நான் மீதியாக வைத்திருப்பவர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்காகவும், [QE][QS2]நீர் மட்டும் பணியாளனாய் இருப்பது போதுமானதல்லவே. [QE][QS]ஆகவே நான் உம்மைப் பிற நாட்டு மக்களுக்கும் ஒரு வெளிச்சமாக ஏற்படுத்துவேன்; [QE][QS2]எனவே நீர் பூமியின் கடைசியில் இருக்கிறவர்களுக்கெல்லாம் [QE][QS2]என் இரட்சிப்பைக் கொண்டுவருவீர்” என்கிறார். [QE][PBR]
7. [QS]இஸ்ரயேலரின் பரிசுத்தரும், மீட்பருமான யெகோவா சொல்வது இதுவே: [QE][QS2]அவமதிக்கப்பட்டு, நாடுகளால் அருவருக்கப்பட்டு, [QE][QS]ஆட்சியாளர்களுக்கு அடிமையாய் இருந்த உனக்குச் சொல்வதாவது, [QE][QS2]“அரசர்கள் உன்னைக் காணும்போது அவர்கள் எழுந்து நிற்பார்கள், [QE][QS]பிரபுக்கள் உன்னைக் கண்டு வணங்குவார்கள்; [QE][QS2]யெகோவா உண்மையுள்ளவராய் இருப்பதாலும், [QE][QS]இஸ்ரயேலின் பரிசுத்தர் உன்னைத் தெரிந்துகொண்டதினாலும் [QE][QS2]அவர்கள் இப்படிச் செய்வார்கள்.” [QE]
8. {#1இஸ்ரயேல் புதுப்பிக்கப்படுதல் } [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“என் தயவின் காலத்திலே நான் உங்களுக்குப் பதிலளிப்பேன், [QE][QS2]இரட்சிப்பின் நாளில் நான் உங்களுக்கு உதவி செய்வேன்; [QE][QS]நான் உங்களைப் பாதுகாத்து, [QE][QS2]மக்களிடையே நீங்கள் ஒரு உடன்படிக்கையாக இருக்கும்படி நான் உங்களை ஏற்படுத்துவேன். [QE][QS]நாட்டைப் புதுப்பித்து பழைய நிலைக்குக் கொண்டுவரவும், [QE][QS2]பாழடைந்த உரிமைச் சொத்துக்களைத் திரும்ப ஒப்படைக்கவும், [QE]
9. [QS]சிறைப்பட்டிருக்கிறவர்களைப் பார்த்து, [QE][QS2]‘புறப்பட்டுப் போங்கள்’ என்று சொல்லவும், [QE][QS]இருளில் உள்ளவர்களைப் பார்த்து, ‘வெளிப்படுங்கள்!’ [QE][QS2]என்றும் சொல்லவும் இப்படிச் செய்வேன். [QE][PBR] [QS]“வீதிகளின் ஓரங்களில் அவர்கள் மேய்வார்கள்; [QE][QS2]வறண்ட குன்றுகள் ஒவ்வொன்றிலும் அவர்கள் மேய்ச்சல் நிலத்தைக் காண்பார்கள். [QE]
10. [QS]அவர்கள் பசியடைவதுமில்லை, தாகங்கொள்வதுமில்லை; [QE][QS2]பாலைவன வெப்பமோ, வெயிலோ அவர்களைத் தாக்காது. [QE][QS]அவர்கள்மேல் இரக்கமாயிருக்கிறவரே அவர்களுக்கு வழிகாட்டி, [QE][QS2]அவர்களைத் தண்ணீர் ஊற்றுகளின் அருகே வழிநடத்திச் செல்வார். [QE]
11. [QS]எனது எல்லா மலைகளையும் நான் வழிகளாக மாற்றுவேன்; [QE][QS2]எனது பெரும் பாதைகள் உயர்த்தப்படும். [QE]
12. [QS]இதோ, அவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள், [QE][QS2]சிலர் வடக்கிலிருந்தும், சிலர் மேற்கிலிருந்தும், [QE][QS2]சிலர் சீனீம்[* சீனீம் அல்லது அஸ்வான் ] பிரதேசத்திலிருந்தும் வருவார்கள்.” [QE][PBR]
13. [QS]வானங்களே, ஆனந்த சத்தமிடுங்கள்; [QE][QS2]பூமியே, சந்தோஷப்படு; [QE][QS2]மலைகளே, கெம்பீரமாய்ப் பாடுங்கள்! [QE][QS]யெகோவா தமது மக்களைத் தேற்றுகிறார், [QE][QS2]துன்புற்ற தம்முடையவர்கள்மேல் இரக்கம் காட்டுவார். [QE][PBR]
14. [QS]ஆனால் சீயோனோ, “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்; [QE][QS2]யெகோவா என்னை மறந்துவிட்டார்” என்கிறது. [QE][PBR]
15. [QS]“தான் பாலூட்டும் தன்னுடைய குழந்தையை எந்தத் தாயும் மறந்துபோவாளோ? [QE][QS2]கருவில் உருவான தனது பிள்ளைக்கு அவள் கருணை காட்டாதிருப்பாளோ? [QE][QS]அப்படி அவள் மறந்தாலுங்கூட, [QE][QS2]நான் உன்னை மறப்பதில்லை. [QE]
16. [QS]இதோ, நான் என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; [QE][QS2]உன் மதில்கள் எப்பொழுதும் என் கண்முன் இருக்கின்றன. [QE]
17. [QS]உனது பிள்ளைகள் விரைந்து திரும்புவார்கள்[† விரைந்து திரும்புவார்கள் அல்லது திரும்பக் கட்டுகிறவர்கள் ], [QE][QS2]உன்னை அழித்தவர்கள் உன்னைவிட்டு விலகிப் போவார்கள். [QE]
18. [QS]உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்; [QE][QS2]உனது பிள்ளைகள் யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள். [QE][QS]நான் வாழ்வது நிச்சயமாய் இருப்பதுபோலவே, [QE][QS2]நீ அவர்களையெல்லாம் நகைகளாய் அணிந்துகொள்வாய்; [QE][QS2]மணமகளைப்போல் அவர்களை அணிந்துகொள்வாய்” என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][PBR] [PBR]
19. [QS]“நீ அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டாய், [QE][QS2]உனது நாடு பாழாய் விடப்பட்டது. [QE][QS]ஆயினும் இப்பொழுதோ உன்னில் குடியிருக்கிறவர்கள் [QE][QS2]வாழ்வதற்கு இடம் போதாதபடி நீ சிறிதாய் இருப்பாய். [QE][QS2]உன்னை விழுங்கியவர்களும் உன்னைவிட்டுத் தூரமாய் போவார்கள். [QE]
20. [QS]உன் இழப்பில் துயருற்ற நாட்களில் [QE][QS2]உனக்குப் பிறந்த பிள்ளைகள் உன்னைப் பார்த்து, [QE][QS2]‘இந்த இடம் எங்களுக்கு மிகச் சிறிதாக இருக்கிறது; [QE][QS]நாங்கள் வசிப்பதற்கு போதிய இடம் தாரும்’ [QE][QS2]என உன் செவிகள் கேட்கும்படி சொல்லுவார்கள். [QE]
21. [QS]அப்பொழுது நீ உனது உள்ளத்தில் [QE][QS2]‘எனக்கு இந்தப் பிள்ளைகளைக் கொடுத்தது யார்? [QE][QS]நான் துயருற்றவளாகவும் மலடியாகவும் இருந்தேன்; [QE][QS2]நான் நாடுகடத்தப்பட்டவளாகவும், புறக்கணிக்கப்பட்டவளாகவும் இருந்தேன். [QE][QS2]யார் இந்தப் பிள்ளைகளை வளர்த்தெடுத்தார்கள்? [QE][QS]இதோ நான் தனித்தவளாயிருந்தேனே! [QE][QS2]ஆனால் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?’ என்று சொல்லிக்கொள்வாய்.” [QE]
22. [PS]ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“இதோ, நான் பிற நாட்டவர்களை கைகாட்டி அழைப்பேன், [QE][QS2]மக்கள் கூட்டங்களுக்கு எனது கொடியை ஏற்றுவேன். [QE][QS]அவர்கள் உங்கள் மகன்களைத் தங்கள் கைகளில் கொண்டுவருவார்கள்; [QE][QS2]மகள்களையும் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டுவருவார்கள். [QE]
23. [QS]அரசர்கள் உங்களுக்கு வளர்ப்புத் தந்தைகளாய் இருப்பார்கள்; [QE][QS2]அரசிகள் உங்களுக்கு வளர்ப்புத் தாய்களாய் இருப்பார்கள். [QE][QS]அவர்கள் உங்களுக்கு முன்பாகத் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்குவார்கள்; [QE][QS2]அவர்கள் உங்கள் பாதங்களிலுள்ள புழுதியை நக்குவார்கள். [QE][QS]அப்பொழுது நீங்கள், நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள்; [QE][QS2]என்னை நம்பியிருப்பவர்கள் வெட்கப்பட்டு போகமாட்டார்கள்” என்கிறார். [QE][PBR]
24. [QS]போர்வீரர்களிடமிருந்து கொள்ளைப்பொருட்களைப் பறித்தெடுக்க முடியுமோ? [QE][QS2]வெற்றி வீரனிடமிருந்து கைதிகளைக் காப்பாற்ற முடியுமோ? [QE]
25. [PS]ஆனால், யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“ஆம், கைதிகள் போர்வீரரிடமிருந்து விடுவிக்கப்படுவார்கள்; [QE][QS2]வலியவனிடமிருந்து கொள்ளைப்பொருளும் மீட்கப்படும். [QE][QS]உங்களுடன் சண்டையிடுகிறவர்களோடு நான் சண்டையிடுவேன். [QE][QS2]உங்கள் பிள்ளைகளை நான் காப்பாற்றுவேன். [QE]
26. [QS]உங்களை ஒடுக்குகிறவர்களைத் தங்கள் சொந்த மாமிசத்தையே தின்னச் செய்வேன்; [QE][QS2]திராட்சை மதுவினால் வெறிகொள்வதுபோல், [QE][QS]அவர்கள் தங்கள் சொந்த இரத்தத்தினாலேயே வெறிகொள்வார்கள். [QE][QS2]அப்பொழுது யெகோவாவாகிய நானே உங்கள் இரட்சகர்; [QE][QS]யாக்கோபின் வல்லவராகிய நானே உங்கள் மீட்பர் என்பதை [QE][QS2]மனுக்குலம் அனைத்தும் அறிந்துகொள்ளும்.” [QE]